முதலில் நான் இந்தியாவில் இருக்கும்போது தான் தீபாவளியை நெருக்கமாக உணர்ந்தேன். நான் அங்கே வந்து தங்கியிருந்த அந்த ஒரு மாதத்தின் முதல் வாரத்தில் தான் தீபாவளியை எல்லோரும் கொண்டாடினார்கள். எனக்கு நினைவில் இருப்பது, எல்லா பக்கத்திலும் பட்டாசுகள் மற்றும் கடுமையான மேகம் போன்ற புகை தான் என்னுடைய கண்களைக் கொஞ்சம் சிமிட்டச் செய்தது. அந்த மகிழ்ச்சியான காரியங்கள் என்னை சுற்றிலும் நடந்துகொண்டிருக்கையில் தான் நான் தீபாவளி என்றால் என்ன, அது எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றிப் அறிய விரும்பினேன். அந்த ஆசை எனக்குள் விழுந்தது.
அந்த “வெளிச்சத்தின் பண்டிகை” தான் என்னைக் கவர்ந்தது ஏனெனில், நான் இயேசு சத்சங்ஸில் விசுவாசி மற்றும் அதைச் சார்ந்தவனாயிருந்தேன் மற்றும் இயேசுவே ஆண்டவர் என்பதையும் அறிந்திருந்தேன். மேலும் அவருடைய போதனையில் முக்கியமாக வெளிச்சம் நமக்குள் இருக்கும் இருளை நீக்கும் என்பதே, எனவே தீபாவளி அதிகமாய் ஆண்டவராகிய இயேசுவுக்கு ஒப்பாயிருந்தது.
நம்மில் அநேகர் நமக்குள் இருக்கும் இருளினால் கஷ்டபடுகிறோம். அதினால் தான் ஆயிரக்கணக்கானோர் கும்பமேளா பண்டிகையில் கலந்துகொள்கின்றனர். ஏனெனில் லட்சக்கணக்கானோர் நம்மில் பாவம் உள்ளதென்பதை அறிந்துள்ளனர் மற்றும் எல்லோரும் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டு, அது பாவம் இல்லாமல் சுத்தமாயிருக்க விரும்புகிறோம். அதேபோல நாம் நன்கு அறிந்திருக்கும் முந்தைய கால ஜெபம் பிரார்த்தஸ்நானா [அல்லது பிரதஸ்நா] மந்திரம், பாவங்கள் அல்லது இருளை ஒப்புக்கொள்ள உதவுகிறது.
நான் ஒரு பாவி. நான் தான் பாவத்தின் சம்பளம். நான் பாவத்தில் பிறந்தேன். என்னுடைய ஆத்துமா பாவத்தின் பிடியில் இருக்கிறது. நான் பாவிகளைவிட மோசமானவன். அழகான இரக்கத்தின் கண்களுடைய ஆண்டவரே, என்னை இரட்சியும், பலியின் தேவனே.
ஆனால் நமக்குள் இருக்கும் எல்லா இருளின் சிந்தனைகளும் பாவங்களும் நம்மை ஊக்குவிப்பதில்லை. இதை சில நேரங்களில் நாம் கெட்ட செய்தியாக நினைக்கிறோம். இதினால் தான் வெளிச்சத்தினால் இருளிலிருந்து வெளியே வரும் சிந்தனை நமக்கு அதிகமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. எனவே, மெழுகுவர்த்தியுடன் சேர்ந்து, இனிப்பும் பட்டாசுகளும் இருளை வெளிச்சத்தினால் போக்கமுடியும் என்பதை தீபாவளி உணர்த்துகிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து – உலகத்தில் ஒளியாக
இதைத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்தார். வேத புஸ்தகன் [அல்லது வேதாகமம்] சுவிஷேசம் இயேசுவை இவ்விதமாய் விளக்குகிறது:
உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. 2 அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். 3 அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. 5 அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை. [யோவான் 1:1-5]
எனவே இந்த “வார்த்தையை” நாம் பார்க்கும்போது நம்பிக்கை பெறுவதை தீபாவளி உணர்த்துகிறது. இந்த “வார்த்தையில்” நம்பிக்கை வருவது தேவனிடத்திலிருந்து, அதைத்தான் யோவான் பின்பு ஆண்டவராகிய இயேசு என்று குறிப்பிடுகின்றான். இதின் ஆரம்பமாக சுவிஷேசம் தொடர்கிறது.
9அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 10 அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. 11 அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். 13 இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர். [யோவான் 1:9-13]
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் ‘எல்லோருக்கும் எப்படி ஒளியைக் கொடுக்கும்படி’ வந்தார் என இது விளக்குகிறது. சிலர் இது கிருஸ்தவர்களுக்கு மட்டும் தான் என நினைக்கின்றனர், ஆனால் இந்த ‘உலகத்தில்’ இருக்கிற நாம் ‘எல்லோரும்’ தேவனுடைய பிள்ளைகளாகும்படி நமக்குக் கொடுக்கப்படுகிற ஒரு வாய்ப்பு என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த ஒரு வாய்ப்பு எல்லோருக்கும், யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லோரும் தீபாவளியைப் போல வெளிச்சம் இருளிலிருந்து வெளியே வருவதற்கு கொடுக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட ஆண்டவராகிய இயேசுவின் வாழ்க்கை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து விஷேசமானது என்னவென்றால், அவருடைய அவதாரத்தைப் பற்றி, முன்னமே பல்வேறு முறைகளில் சொல்லப்பட்டதும் மற்றும் முன்பு வாழந்த மனிதர்களால் சரித்திரத்தில் சம்பவித்ததும் அவர்கள் எபிரேய வேதாஸ் என்பதில் பதிவு செய்துள்ளனர்.எனவே அவர் இந்த உலகத்திற்கு வரும் முன்பே அவரைப்பற்றி எழுதபட்டிருந்தது. மேலும் அவருடைய அவதாரத்தைப் பற்றி சொல்லப்பட்டவைகள் முன்பே அநேக பாடல்களில் நினைவுபடுத்தப்பட்டிருக்கிறது. ரிக் வேதாவில் வரப்போகும் புருஷன் என்று புகழப்பட்டிருக்கிறது, மேலும் முன்பு மனித குலத்தில் சம்பவிக்கபட்ட காரியங்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் ஜலத்தின் மனுஷன் என்று வேதம் சொல்லப்பட்ட – வேத புஸ்தகன் – சொல்லப்பட்ட ‘நோவா’. இவைகள் எல்லால் முன்பு சம்பவித்த காரியங்களை அவதாரமாக இருளாகிய ஜனங்களின் பாவங்களைப் பற்றி சொல்லப்படுகிறது. அதில் நம்பிக்கை தரும் விதமாக வரும் புருஷன் அல்லது ஆண்டவராகிய இயேசுவை குறிப்பிடுகிறது.
ரிக் வேதத்தில் முன்பு சொல்லப்பட்ட புருஷன், தேவனுடைய அவதாரம் மற்றும் முற்றிலும் மனித சாயலில் உள்ள மனிதன் பலியாவது. இந்த பலி கர்மா என்று சொல்லப்படும் நம்முடைய பாவங்களை போக்கக்கூடியதாகவும், மேலும் நம்மை உள்ளாகவும் சுத்திகரிக்கும். கழுவுதல் மற்றும் பூஜை செய்வது நல்லதுதான். ஆனால் அவைகள் நம்மை வெளிப்புறத்தை மற்றும் தான் சுத்திகரிக்கும். நம்முடைய உட்புறத்தை சுத்திகரிக்க நமக்கு நல்ல பலி தேவைப்படுகிறது.
எபிரேய வேதத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட ஆண்டவராகிய இயேசு
ரிக் வேதத்திலுள்ள பாடல்களுடன் சேர்ந்து, எபிரேய வேதத்திலும் வரப்போகிற ஒருவரைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது. எபிரேய வேதத்தில் முக்கியமாக ரிஷி ஏசாயா (பிசி 75௦-ல் வாழ்ந்தவர், வேறு வார்த்தையில் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு கடந்து வரும் 75௦ வருடங்களுக்கு முன்). வரப்போகிற ஒருவரைக் குறித்து அநேக வெளிப்பாடுகள் அவருக்கு உண்டாயிருந்தது. அவர் ஆண்டவராகிய இயேசுவை குறித்து சொல்லும்போது தீபாவளியைப் போன்றதை எதிர்பார்க்கிறார். அதாவது:
இப்போது இருளில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் ஓரிடத்தில் வாழ்கின்றனர். அது மரண இருளைபோன்ற இடம். ஆனால் அவர்கள் மேல் பெரிய வெளிச்சம் உதிக்கும். (ஏசாயா 9:2)
ஏன் இது ஒரு காரியமா? அவர் தொடர்ந்து
விசேஷித்த மகன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு மகனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். அவரது நாமமானது “ஆலோசகர், வல்லமை மிக்க தேவன், நித்திய பிதா, அதிசயமுள்ளவர், சமாதானத்தின் இளவரசர்” என்று இருக்கும். (ஏசாயா 9:6)
அவர் ஒரு அவதாரம் தான் ஆனாலும் அவர் நமக்கு உதவி செய்கிறவராக, வேலைச் செய்கிரவராக இருளில் நமக்கு உதவி செய்வார்.
4 ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம். 5 ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத் துன்பப்படவே அவர் வேதனையைப் பெற்றார். நமது குற்றங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். நாம் கொண்ட கடனுக்காக நமது தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது காயங்களால் நாம் சுகமடைந்திருக்கிறோம். 6 ஆனால், இதனைச் செய்தபிறகு நாம் ஆடுகளைப்போல அலைந்துகொண்டிருந்தோம். நம்மில் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் சென்றோம். கர்த்தர் நம் குற்றத்திலிருந்து நம்மை விடுதலை செய்து நமது குற்றங்களை அவர்மீது போட்ட பிறகும் நாம் இதனைச் செய்தோம். (ஏசாயா 53:4-6)
ஏசாயா ஆண்டவராகிய இயேசு சிலுவையில் அறையப்படுவதைப் பற்றிக் விளக்குகின்றான். அது நடக்கும் 75௦ வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறான், மேலும் அவன் சொல்லுகிறதாவது அவருடைய சிலுவையின் பலி நம்மை குணமாக்கும் என்பதே. மேலும் இந்த வேலை வேலைக்காரனைப் போல செய்கிறதும் அது அவருக்கு தேவனால் சொல்லப்பட்டதுமாயிருக்கிறது.
“… அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்.” (ஏசாயா 49:6)
எனவே நாம் பார்க்கலாம்! இது எனக்காக மற்றும் உனக்காக. இது எல்லோருக்காகவும்.
பவுலின் உதாரணம்
உதாரணமாக, பவுல் என்று சொல்லப்பட்ட ஒருவன் நிச்சயமாக ஆண்டவராகிய இயேசுவின் பலி அவனுக்காக என்று நினைத்திருக்கமாட்டான், இவன் தான் இயேசுவின் பெயரை எதிர்த்தவன். ஆனால் ஆண்டவராகிய இயேசுவோடு நேரடி சந்திப்பு நடந்ததினால் பின்பு அது அவரைக் குறித்து எழுதும்படிச் செய்தது.
“இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார். (2கொரிந்தியர் 4:6)
பவுல் ஆண்டவராகிய இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்தித்ததினால் வெளிச்சம் ‘அவருடைய இருதயத்தில் ஒளிர்ந்தது’.
இயேசுவாகிய ஒளியை நீங்கள் அனுபவிப்பது
நாம் இருளிலிருந்து மற்றும் பாவத்திலிருந்து ஒளியை பெற்று, ‘இரட்சிப்பை’ அடைய என்ன செய்யும்படி ஏசாயா தீர்க்கத்தரிசனம் உரைக்கிறான் என்றால், ஆண்டவராகிய இயேசுவால் பெறப்பட்ட, மற்றும் பவுல் அனுபவித்தது? இந்த கேள்விக்கு பவுல் எழுதும் மற்றொரு கடிதத்தில் பதில் தருகிறான்.
பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும். (ரோமர் 6:23)
கவனிக்க வேண்டியது, இதை அவன் எப்படி ‘பரிசு’ என்கிறான், பரிசு என்பதன் பொருள், பெறமுடியாதது. வேறொருவர் இலவசமாக நீங்கள் ஒன்றும் செய்யாமல் உங்களுக்குத் தருவது அல்லது நீங்கள் ஏற்றுக்கொள்வது. ஆனால் பரிசை நீங்கள் ‘பெற்றுக்கொள்ளாதவரைக்கும்’ அந்த பரிசு உங்களுக்கு எந்த பயனையும் தராது மற்றும் உங்களுடையது ஆகாது. இதை இங்கே தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது, அதினால் தான் யோவான் முன்னமே இதைப்பற்றி எழுதியிருக்கிறான்.
சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். (யோவான் 1:12)
எனவே ஒன்றும் செய்யாமல் அவரை ஏற்றுக்கொள்ளலாம். இதை நாம் அவரிடத்தில் கேட்பதினால் இலவசமாய் கொடுக்கப்படும். அவர் உயிருடன் இருப்பதினால் அவரிடத்தில் நாம் கேட்கலாம். ஆம். நம்முடைய பாவங்களுக்காக அவர் பலியாகி, மூன்று நாட்களுக்கு பின் மறுபடியும் உயிரோடு எழுந்தார், ரிசி ஏசாயா நூற்றாண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு அவருடைய பாடுகளைக் குறித்து எழுதினது போலவே
அவர் தனது ஆத்துமாவில் பல்வேறு வகையில் துன்புறுவார். ஆனால் அவர் நடக்கும் நல்லவற்றைப் பார்ப்பார். அவர் தான் கற்றுக்கொண்டவற்றின் மூலம் திருப்தி அடைவார். எனவே, “எனது நல்ல தாசன் பல ஜனங்களைக் குற்றத்திலிருந்து விடுவிப்பார். அவர்களது பாவங்களை அவர் எடுத்துக்கொள்வார். (ஏசாயா 53:11)
ஆண்டவராகிய இயேசு உயிரோடு இருப்பதினால் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவரால் கேட்க முடியும். ஜெபம் பிரார்த்தஸ்நானா [அல்லது பிரதஸ்நா] மந்திரம் அவரிடத்தில் செய்யலாம் மற்றும் அவர் கேட்டு நம்மை இரட்சிப்பார், ஏனெனில் அவர் உனக்காய் தம்மையே பலியாக்கினதினால் உன்மேல் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. மறுபடியும் ஜெபத்தில் நாம் அவரிடத்தில் கேட்க முடியும்.
நான் ஒரு பாவி. நான் தான் பாவத்தின் சம்பளம். நான் பாவத்தில் பிறந்தேன். என்னுடைய ஆத்துமா பாவத்தின் பிடியில் இருக்கிறது. நான் பாவிகளைவிட மோசமானவன். ஆண்டவரே யாருக்கு அழகான கண்கள், என்னை இரட்சியும், பலியின் தேவனே.
தயவாய் மேலும் பல கட்டுரைகளை இங்கே தேடவும். அவை மனித சரித்திரத்தின் ஆரம்பம் மேலும் சமஸ்கிருதம் முதல் எபிரேய வேதம் முதல் நம்மை இருளிலிருந்து இரட்சித்து வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தேவனுடைய திட்டம் மற்றும் அது பரிசாக நமக்கு தரப்படுகிறது.
இந்த தீபாவளியில், நாம் மெழுகுவர்த்தி ஏற்றும்போதும் மற்றும் பரிசுகளை கொடுக்கும்போதும் பரிசாகிய உள்ளான ஒளி ஆண்டவராகிய இயேசுவால் பவுலுக்கு கொடுக்கப்பட்டு அநேக வருடங்களுக்கு முன்பு அவன் மாறினது போல உங்களுக்கும் இது கொடுக்கபடுகிறது. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.