Skip to content

புருஷாவின் தியாகபலி: எல்லாவற்றின் ஆரம்பம்

  • by

 verses 3&4ிப்பின்பு புருஷாசுக்தா தன் கவனத்தை புருஷாவின் குணாதிசயங்களிலிருந்து  புருஷாவின் பலிக்கு திருப்புகிறது.   வசனம் 6 மற்றும் 7 இதனை இப்படியாக  சொல்கிறது.  (சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்புகளும்,  புருஷசுக்தாவை குறித்த அநேக சிந்தனைகள் ஜோசப் படிஞ்சரகேரா அவர்கள் எழுதியுள்ள பண்டைய வேதங்களில் கிறிஸ்து  என்று நூலை வாசித்ததின் மூலம் நான் அறிந்துகொண்டவை 346-pp, 2007

புருஷசுக்தாவின் 6 மற்றும் 7 வசனங்கள்

அங்கில மொழிப்பெயர்ப்பு சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்பு
தேவர்கள் புருஷாவை ஒரு பலியாக படைத்தபோது வசந்தகாலம் உருகிய வெண்ணையை போன்றும், கோடைக்காலம்  எரிபொருளாகவும், இலையுதிர்காலம் காணிக்கையாகவும் மாறிற்று.  அதியில் தோன்றின  புருஷாவை வைக்கோலை போல் ஒர் பலி பொருளாக தெளித்தனர்.  தேவர்கள், குருக்கள், ஞானதிருஷ்டிகர்கள் அவரை ஓரு பலியாக படைத்தார்கள்.  யத்புருசேனா ஹவிசா தேவா யஜ்னம் அதன்வதா வசன்தோ அஸ்யாசித் அஜ்யம் க்ரிஷ்மா இத்மா சரதாவிஹ் தம் யஜ்னம் பர்ஹிசி ப்ரவுக்சன் புருஷம் ஜதம்கிரதாஹ் தேனா தேவா அயாஜந்தா சதயா ரஸ்யாச் கா யே

எல்லாமே உடனடியாக தெளிவுள்ளதாக இல்லாவிடினும்,  எது தெளிவாக உள்ளதென்றால், நம்முடைய கவனம் புருஷாவின் பலியின்மேல காணப்படுகிறது.   பண்டைய வேதாகம விரிவுரையாளர் சயனச்சார்யா இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“ரிஷிக்கள் – பரிசுத்தவான்களும் தேவர்களும் – பலி பொருளான புருஷாவை பலி மிருகத்தை போல் ஒரு  கோலின் மீது கட்டி தங்களுடைய சிந்தையில் அவரை பலியாக ஒப்புக்கொடுத்தனர்” 

ரிக் வேதம் 10.90.7

வசனங்கள் 8 மற்றும் 9 “தஸ்மத்யாநட்சர்வாஹுதா…” என்ற வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறது.  அதனுடைய பொருள் என்னவெனில், தனக்கு உண்டான எல்லாவற்றையும் புருஷா பலியாக ஒப்புக்கொடுத்துவிட்டார் – அவர் ஒன்றையும் தக்கவைக்கவில்லை.  பலிகொடுப்பதில் புருஷா கொண்டிருந்த அதீத வாஞ்சையை இது வெளிப்படுத்துகிறது.  அன்பின் மூலமே, ஒன்றையும் தக்கவைக்காமல்,  ஒருவர் மற்றவருக்கு தங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுக்க முடியும்.  இயேசு கிறிஸ்து வேதாகமத்தில் சொன்னதுபோல்

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை

யோவான் 15:13

 இயேசு கிறிஸ்துவானவர் தன்னை சிலுவைபலிக்கு முழுமனதுடன் ஒப்புக்கொடுக்கையில் இதனை சொன்னார்.  புருஷாவின் பலிக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் ஏதாகிலும் தொடர்புண்டா?  (நாம் இதுவரையில் கவனிக்காத ஒன்றை) புருஷாசுக்தாவின் 5-வது வசனம் சொல்லுகிறது (நமக்கு ஒரு விடயத்தை அளிக்கிறது – ஆனால் அந்த விடயம் விளங்கிடமுடியாத ஒன்று .  இங்கே வசனம் 5-ல்

புருஷாசுக்தாவின் 5-ம் வசனம்

ஆங்கில மொழிப்பெயர்ப்பு சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு
அதிலிருந்து – புருஷாவின் ஒரு பகுதியிலிருந்து – அண்டசராசாரம் உருவானது. சர்வவியாபியாக மாறின புருஷாவின் இருக்கையாக அது உறுபெற்றது தஸ்மத் விராலஜயாதா விராஜோ ஆதி புருஷா சஜாதோ அத்யாரிக்யாதா பஸ்காத்பூமிம் அதோ புராஹ்

புருஷசுக்தாவின்படி, புருஷா ஆதியில் பலியிடப்பட்டவர். அதுவே அண்டசராசரத்தின் சிருஷ்டிப்பாக அமைந்தது.  ஆகையால்,  இந்த பலியை பூமியில் நிறைவேற்றமுடியாது. ஏனெனில், இந்த பலிதான் பூமியை உருவாக்கியது.  வசனம் 13 மிகவும் தெளிவாக புருஷாவின் பலியினால் உண்டான சிருஷ்டிப்பு என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அது சொல்கிறது.

புருஷாசுக்தாவின் 13-வது வசனம்

ஆங்கில மொழிப்பெயர்ப்பு சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு
சந்திரன் அவருடைய சிந்தையில் பிறந்தது.   சூரியன் அவருடைய கண்களிலிருந்து வந்தது.   மினனல், மழை, நெருப்பு அவருடைய வாயிலிருந்து வந்தது.  அவருடைய சுவாசத்திலிருந்து காற்று பிறந்தது.  சந்தரமா மானசோ ஜாதச் காக்சோ சூர்யோ அஜாயதா முகஹத் இந்திரா ஸ்கா அக்னிஸ்கா பிரனாத் வாயூர் அஜயாதா

 வேதாகமத்தை குறித்த ஒரு ஆழமான புரிதலிலே தான் எல்லாம் தெளிவாகிறது.  ரிஷி (தீர்க்கத்தரிசி) மீகாவின் எழுத்துக்களை வாசிக்கும்போது இதனை நாம் தெளிவாக பார்க்கிறோம்.  அவர் கி.மு.750 ஆண்டில் வாழ்ந்தார்.   இயேசு கிறிஸ்து வருவதற்கு ஓர் 750 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் வாழ்ந்தவரானாலும்,  அவர் பிறக்கபோகும் நகரத்தை  சுட்டிகாட்டினார். அவர் சொன்ன தீர்கத்தரிசனம்:

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

மீகா 5:2

ஆளுபவர் (அல்லது கிறிஸ்து) பெதலகேமிலிருந்து வருவார் என்று மீகா தீர்க்கத்தரிசனம் உரைத்தார்.  750 ஆண்டுகள் கழித்து இயேசு கிறிஸ்து இந்த தரிசனத்தை நிறைவேறுதலாய் இயேசு கிறிஸ்து பெதல்கேமில் பிறந்தார்.  சத்தியத்தை தேடுவோர் பொதுவாக மீகா உரைத்த தீர்க்கத்தரிசனத்தின் இந்த பகுதியின் மீதே கவனத்தை பதிப்பார்கள்.  ஆனாலும், வரப்போகிறவரின் பூர்வீகத்தை குறித்த பதவிளக்கத்தின் மீது  நாம் கவனம் செலுத்தவேண்டும்.   மீகா வருங்கால வருகையை முன்னறிவிக்கிறார்.   ஆனாலும் வரப்போகிறவரின் பூர்வீகம் கடந்தகாலத்தில் ஆழமாக பதிந்துள்ளது என்கிறார். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாய் பூர்வத்தினுடையது.  வரப்போகிறவரின் பூர்வீகமானது பூமியில் அவர் தோன்றும் நாளுக்கு முன்பானது!  எவ்வளவு தூரம் வரைக்கும் இந்த “பூர்விகம் போகிறது?”.   இது “நித்திய நாட்கள் மட்டுமாக போகிறது”.   வேதபுத்தகத்தில் காணப்படும் மற்ற எல்லா மெய்யான அறிவின் அதை நமக்கு மேலும் தெளிவுப்படுத்துகிறது.   கொலோசேயர்  1:15, அப்போஸ்தலர் பவுல் (கி.பி.50-ல் எழுதியவர்) இயேசுவை பற்றி சொன்ன காரியம்:

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்

கொலோசேயர் 1:15

இயேசு காணக்கூடாத தேவனுடைய சொரூபமாகவும் எல்லா படைப்புகளுக்கும் முந்தின பேறுமானவராகவும் உள்ளார்.   வேறு விதத்தில் சொன்னால்,  இயேசுவின் அவதாரம் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்தாலும் (கி.மு. 4 – கி.பி.33), எந்தவொன்றும் உருவாகும் முன்பே அவர் இருந்துள்ளார் – நித்திய நித்தியமான காலம்.   தேவன் (பிரஜாபதி) நித்திய  காலமாய் வாழ்ந்துவருவதால், அவருடைய ‘ரூபமான’ இயேசுவும் என்றென்றும் வாழ்பவராகவே இருக்கவேண்டும்.

உலகத்தோற்றத்திற்கு முன்பே இருந்த பலிஎல்லாவற்றின் ஆரம்பம்

அவர் நித்திய காலமாய் இருப்பவர் மாத்திரமல்ல,  இந்த ரிஷி (தீர்கத்தரிசி) யோவான் ஒரு பரலோக தரிசனத்தில் இந்த இயேசு இவ்வண்ணமாக சித்தரிக்கப்பட்டதை காண்கிறார்.

உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய…

வெளி 13:8

இது ஒரு முரண்பாடா?  இந்த இயேசு கி.பி. 33-ல் கொல்லப்பட்டவர் தானே? அப்போது அவர் கொல்லப்பட்டிருப்பாரானால்,  எப்படி அவர் உலகத்தின் தோற்றத்திலேயே கொல்லப்பட்டிருக்கூடும்? இந்த முரண்பாட்டிலே தான் நாம் புருஷாஸ்குதாவும் வேத புஸ்தகமும் ஒரே காரியத்தை விளக்குவதை நாம் பார்க்கிறோம். புருஷாசுக்தா சொல்வது யாதெனில், “புருஷாவின் பலி ஆதிமுதற்கொண்டே இருந்தது”. வேதங்களில் கிறிஸ்து ” என்கின்ற அவருடைய நூலில் ஜோசப் படிஞ்சரகேரா குறிப்பிடுவது என்னவென்றால் புருசசுக்தா பற்றிய சமஸ்கிருத விரிவுரை, புருஷாவின் பலி என்பது அதியிலிருந்தே தேவனுடைய இருதயத்தில் இருந்த ஒன்று (சமஸ்கிருத வார்த்தை “மனசாயகம்என்ற வார்த்தையை அவர் இப்படியாக மொழிபெயர்த்துள்ளார்).   சமஸ்கிருத அறிஞர்  N J ஷிண்டே அவர்கள் ஆரம்பத்தில் சொன்னது  என்னவென்றால் இந்த பலியானது ஆரம்பத்தில் ஒரு ‘மனதளவில் அல்லது அடையாளரீதியில்’ குறிப்பாக இருந்தது என்பதே.*

இப்போதும் புருஷசுக்தாவின் இரகசியம் தெளிவாகிறது.  புருஷா தேவனும், நித்திய நித்திய காலத்திலிருந்து தேவனுடைய ரூபமாகவும் இருந்துவருகிறார்.  அவர் மற்ற எல்லாவற்றிற்கும் முதற்பேறானவர்.  அவரே சிருஷ்டிப்பின் முதலானவர்.   சர்வஞானம் படைத்த தேவன் மனுகுலத்தின் சிருஷ்டிப்புக்கு ஒர் பலி அவசியப்படும் என்பதை அறிந்திருந்தார் – அவரால் கொடுக்கக்கூடிய  எல்லாமே அதற்கு தேவைப்படும் – பாவத்திலிருந்து கழுவப்படுவதற்கு அல்லது சுத்தீகரிக்கப்படுவதற்கு தேவையான பலிபொருளான புருஷா அவதரிக்கவேண்டும். இந்த கட்டத்தில் தான் தேவன் தீர்மானிக்கவேண்டிய ஓர் கட்டத்தில் இருந்தார்.  இந்த அண்டசராசரைத்தையும் மனுகுலத்தையும் படைக்கவேண்டுமா? கூடாதா? என்ற தீர்மானம்.  அந்த தீர்மானத்தில், தன்னையே பலியாக கொடுப்பதற்கு புருஷா முன்வந்தார்.  சிருஷ்டிப்பின் பணியும் தொடர்ந்தது.   ஆதலால், மனதளவில், அல்லது தேவனுடைய இருதயத்தில் வேதபுத்தகம் நமக்கு சொல்வதுபோல் புருஷா “உலகத்தின் தோற்றத்திற்கு முன்பாகவே” வெட்டப்பட்டார்.

அந்த தீர்மானம் எடுத்ததும் – காலங்களின் தோற்றத்திற்கு முன்பே – தேவன் (பிரஜாபதி – சிருஷ்டிபின் தேவன்)  காலத்தையும், அண்டசராசரத்தையும் மனுகுலத்தையும் படைக்கத் தொடங்கினார்.   ஆகையால், புருஷாவின் இந்த தன்னார்வ பலி இந்த “அண்டசராசரம் உருவாக காரணமாக அமைந்தது (வசனம் 5) சந்திரன், சூரியன், மின்னல் மற்றும் மழை (வச 13)உருவாகவும்,  காலம் உருவாகவும் (வசனம் 6-ல் காணப்படும் வசந்தகாலம், கோடைக்காலம் மற்றும் இலையுதிர் காலம் ஆரம்பிக்க).  புருஷா இவைகள் எல்லாவற்றிற்கு முதற்பேரானவர்.

புருஷாவை பலியிட்ட தெய்வங்கள் எவை?

ஆனால் ஒரு புதிருக்கு விடை இல்லை.   புருஷசுக்தாவின்6-ஆம் வசனம் சொல்லுகிறது,  தெய்வங்கள் (தேவர்கள்) புருஷாவை பலிகொடுத்தார்கள் என்று?  யார் இந்த தெய்வங்கள்?   வேதாகமம் இதனை நமக்கு விளக்குகிறது.   ரிஷிக்களில் ஒருவரான தாவீது கி.மு.1000 அண்டுக்கு முன் புனித பாடல் ஒன்றை எழுதினார். அந்த பாடல் ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றி தேவன் (பிரஜாபதி) பேசினவைகளை வெளிப்படுத்துகிறது.

“நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.”

சங்கீதம் 82:6

1000 வருடங்களுக்கு பின் இயேசு கிறிஸ்து ரிஷி தாவீது எழுதின இந்த புனித பாடலை பற்றி விமர்சிக்கும் போது சொன்னது என்னவென்றால்:

 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?  தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

யோவான் 10:34-36

இயேசு கிறிஸ்துவானவர் ரிஷி தாவிது பயன்படுத்தின “தேவர்கள்” என்ற வார்த்தையை உண்மை என்று உறுதிசெய்கிறார்.  எந்தவிதத்தில் இது அப்படியாகும்?   வேதாகமத்தில் காணப்படும் சிருஷ்டிப்பின்  கதையில் நாம் தேவனுடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்டோம் (ஆதியாகமம் 1:27) என்று பார்க்கிறோம்.   ஆக, ஒருவிதத்தில், நாம் தேவனுடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்டதினால் நாம் தேவர்கள் என்று கருதப்படவேண்டும்.  ஆனால் வேதாகமம் இதனை மேலும் தெளிவுப்படுத்துகிறது.  புருஷாவின் இந்த பலியினை ஏற்றுகொள்பவர்கள் எல்லாம்

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

எபேசியர் 1:4-5

பிரஜாபதிபுருஷா உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே புருஷாவை ஓரு பூரண பலியாக படைக்கவேண்டும் என்று தீர்மானித்தபோது, தேவனும் மக்களை தெரிந்தெடுத்தார்எதற்காக அவர்களை அவர் தெரிந்தெடுத்தார்?   அது மிக தெளிவாக சொல்கிறது, அவருடைய குமாரர்களாய் இருப்பதற்கே!

இன்னொரு விதத்தில் சொன்னால், வேதாகமத்தின் படி, தேவன் தாமே தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, ஓர் பூரண பலியாக மாறின காரணத்தினால், அந்த பலியின் நிமித்தம், மனுஷர்கள் தேவனுடைய பிள்ளைகளாக மாற தெரிந்துகொள்ளபட்டார்கள்.  அந்த முழு  உணர்வில் பார்ப்போமேயானால் நாம் “தேவர்களே”.     (இயேசு கிறிஸ்து முன்னே சொன்னதின் பிரகாரம்) ‘யாருக்கு கர்த்தருடைய வார்த்தை  வந்ததோ- யார் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்களோ அவர்களுக்கு இது பொருந்தும்.  அப்படியானால்,  எதிர்கால தேவப்பிள்ளைகளின் தேவையே புருஷாவை பலிக்கு உட்படுத்தியது.   புருஷாசுக்தாவின் 6-வசனம் சொல்வது போல், “புருஷாவை ஒர் பலிகாணிக்கையாக படைத்து தேவர்கள் பலி செலுத்தினார்கள்”. புருஷாவின் பலியே நம்முடைய் சுத்தீகரிப்பாக மாறியது.

புருஷாவின் பலிபரலோகத்திற்கான வழி

ஆகையால் பண்டைய புருஷசுக்தாவின் ஞானம்  மற்றும் வேதபுத்தகம், இவ்விரண்டிலும்  தேவனுடைய திட்டம் வெளிப்படுவதை பார்க்கிறோம்.  இது ஒரு ஆச்சரியமான திட்டம் – நாம் கற்பனையே செய்யமுடியாத ஓர் திட்டம்.  இது நமக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.  புருஷாசுக்தாவின் 16-வது வசனம் இப்படியாக முடிகிறது.

ஆங்கில மொழிப்பெயர்ப்பு சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு
தேவர்கள் புருஷாவை பலியாக கொடுத்தார்கள். இதுவே ஆரம்பத்தில் இருந்த கோட்பாடு இதன் மூலம் முனிவர்கள் பரலோக பதவியை அடைந்தார்கள்.   யஜ்னேனா யஜ்நமாஜயந்தா தேவ்ஸ்தானி தர்மானி பிராத்மான்யாசன் தேஹா நாகாம் மஹிமனாஹ சகாந்தா யாத்ரா பூர்வே சத்யா சாந்திதேவா

ஒரு முனிவரை “புத்தியுள்ள” மனிதன் அல்லது ஞானி எனலாம்.  பரலோகத்தை நாடுவது புத்தியுள்ள தீர்மானமே.   அது நம்முடைய எல்லைக்கு அப்பார்ப்பட்டதன்று.  அது முடியாத காரியமும் அன்று.  சன்னியாசம் பூண்டு தங்கள் சரீரத்தை ஒடுக்கி கட்டுப்படுத்தி எந்நேரமும் மந்திரங்களை தியானித்துக்கொண்டே இறைவனை பூஜிப்பவர்களுக்கு  மட்டுமே சொந்தமான இடமும் இல்லை.   அது குருமார்களுக்கே உரிய இடமாகவும் எடுக்கமுடியாது.  மாறாக, இயேசு கிறிஸ்து எனும் அவதாரத்தில் புருஷாவினால் வழங்கப்பட்ட ஒரு வழி.

புருஷாவின் பலிபரலோகத்திற்கு செல்ல வேறு வழி இல்லை

சொல்லப்போனால், இந்த காரியம் மட்டுமே நமக்கு கொடுக்கப்படவில்லை.  புருஷசுக்தாவின்  வசனங்கள் 15 மற்றும் 16-ல் சயனாச்சார்யாவின் சமஸ்கிருத விரிவுரை இப்படியாக சொல்லுகிறது

ஆங்கில மொழிப்பெயர்ப்பு சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்பு
இதை அறிந்தவன் மரணமில்லா நிலையினை அடைகிறான்இதை தவிர வேறு வழி அறியப்படவில்லை  தமவே வித்வானம்ரத இஹா பஹவதி நன்யா பந்தா அயன்யா வேத்யாதே

சாவாமையை அடைய வேறு வழியில்லை! மெய்யாகவே காரியங்களை தெளிவாக படிப்பது நல்லது.  இதுவரையில் நாம் வேத புத்தகத்தை (வேதாகமம்) ஆலசிபார்த்து அது எப்படி புருஷாசுக்தாவில் சொல்லப்பட்டுள்ள தேவன், மனுகுலம் மற்றும்  யதார்த்தத்தை குறித்த கதையுடன் பிண்ணிப் பிணைந்துள்ளதை கவனிக்கிறோம். ஆனால் நாம் இந்த கதையினை அழமாகவோ அல்லது ஒரு அகரவரிசையிலோ கவனிக்கவில்லை.  ஆகையினால்,  ஆரம்பித்திலிருந்து, இந்த வேதபுஸ்தகமாகிய வேதாகமத்தை ஆராய்ந்து அறிவதற்கு, சிருஷ்டிப்பை கற்றுகொள்வதற்கு, புருஷாவை குறித்த இந்த பலிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கும், மனுவின் வெள்ளத்தால் (வேதாகமத்தில் நோவா)இந்த உலகத்திற்கு என்னவானது  மற்றும் உலகநாடுகள்  மரணத்தினின்று நம்மை விடுவிக்கக்கூடிய பூரண பலி என்ற இந்த வாக்குத்தத்தத்தை எப்படியாக கற்றுக்கொண்டது, கைக்கொண்டது  என்பதை அறிவதற்கும் இது உதவியாக இருக்கும். மெய்யாகவே இது படிக்கவேண்டிய, அறியவேண்டிய ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *