மோட்சத்தின் வாக்குத்தத்தம் – ஆதியிலிருந்தே

  • by

 ஆதியில் உண்டாக்கப்பட்ட நிலையிலிருந்து எப்படி  மனுகுலம் விழுந்தது என்பதை நாம் பார்த்தோம்.. ஆனால் வேதாகமம் (வேத புஸ்தகம்) ஆரம்பத்தில் இருந்தே தேவன் வைத்திருந்த ஒரு திட்டத்துடன் தொடர்கிறது. இந்தத் திட்டம் அப்போது வழங்கப்பட்ட ஒரு வாக்குத்தத்தத்தை மையமாகக் கொண்டது, அதே திட்டம் புருசசுக்தாவில் எதிரொலிக்கிறது.

வேதாகமம்உண்மையில் ஓர் நூலகம்

இந்த வாக்குத்தத்தத்தின் முக்கியத்துவத்தைப் பாராட்ட நாம் வேதாகமத்தைப் பற்றிய சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நூல் என்றாலும், அதை நாம் அப்படி நினைத்தாலும், அதை ஒரு நடமாடும் நூலகமாக நினைப்பது மிகவும் துல்லியமானது. ஏனென்றால், இது 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பலவிதமான எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். இன்று இந்த நூல்கள் வேதாகமம் என்ற ஒரு தொகுதியாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உண்மை மட்டுமே வேதாகமத்தை உலகின் பெரிய நூல்களில் ரிக் வேதங்களைப் போல தனித்துவமாக்குகிறது. மாறுபட்ட படைப்புரிமைக்கு கூடுதலாக, வேதாகமத்தின் வெவ்வேறு நூல்கள் அறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கணிப்புகளை பிற்கால எழுத்தாளர்கள் பின்பற்றுகின்றனர். வேதாகமம் ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தால் அல்லது ஒருவருக்கொருவர் தெரிந்த ஆசிரியர்களின் குழுவால் எழுதப்பட்டிருந்தால், அது குறிப்பிடத்தக்கதாக இருக்காது. ஆனால் வேதாகமத்தின் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளால் பிரிக்கப்பட்டுள்ளனர், வெவ்வேறு நாகரீகங்கள், மொழிகள், சமூக அடுக்கு மற்றும் இலக்கிய வகைகளில் எழுதுகிறார்கள் – ஆயினும் அவற்றின் செய்திகளும் கணிப்புகளும் பிற்கால எழுத்தாளர்களால் மேலும் விருத்தியாக்கப்படுகின்றன அல்லது வேதாகமத்திற்கு வெளியில் சரிபார்க்கப்பட்ட வரலாற்றின் உண்மைகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. இது வேதாகமத்தை முற்றிலும் வேறுபட்ட மட்டத்தில் தனித்துவமாக்குகிறது – மேலும் அதன் செய்தியைப் புரிந்துகொள்ள நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். பழைய ஏற்பாட்டு நூல்களின் (இயேசுவுக்கு முந்தைய நூல்கள்) தற்போதுள்ள வேதாகம கையெழுத்துப் பிரதிகள் கிமு 200 க்கு முற்பட்டவை, எனவே வேதாகமத்தின் அடித்தளம் உலகின் பிற பண்டைய நூல்களை விட சிறந்தது.

தோட்டத்தில் மோட்சத்தின் வாக்குத்தத்தம்

வேதாகமத்தில் ஆதியாகமம் புத்தகத்தின் ஆரம்பத்தில் மனிதனின் படைப்பு மற்றும் வீழ்ச்சியை ப்ற்றி பார்க்க முடிகிறது. இன்னும் முன்னோக்கி பார்க்கும் போது ஆரம்பத்தை பற்றி படிக்கும் போதே முடிவை பற்றிய கண்ணோட்டதையும் பெற முடிகிறது.   தேவன் தனது சத்துருவான சாத்தானை எதிர்கொள்ளும்போது, ஒரு சர்ப்பத்தின் வடிவத்தில் இருந்த தீமையின் உருவம், மற்றும் சாத்தான் மனித வீழ்ச்சியைக் கொண்டுவந்தபின் அவனிடம் ஒரு புதிரில் பேசும்போது ஒரு வாக்குத்த்ததத்தை இங்கே காண்கிறோம்:

“… நான் (தேவன்) உனக்கும் (சாத்தானுக்கும்) ஸ்திரிக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவரது குதிங்காலை நசுக்குவாய். ”

ஆதியாகமம் 3:15

இதை கவனமாகப் படித்தால், ஐந்து வெவ்வேறு நபர்களை குறிப்பிடப்பட்டிருப்பதையும், அது தீர்க்கதரிசன பார்வையோடு எதிர்காலத்தை நோக்குகிறதையும் பார்க்கலாம் (உண்டாக்குவேன், நசுக்குவார், நசுக்கும்வார் என்கிற வார்த்தைகளை எதிர்காலத்தை குறிக்கிறது). அந்த நபர்கள் பின்வறுமாறு.

1. தேவன் / பிரஜாபதி

2. சாத்தான் / சர்ப்பம்

3. ஸ்திரி

4. ஸ்திரியின் வித்து

5. சாத்தானின் வித்து

எதிர்காலத்தில் இந்த நபர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்ளுவார்கள் என்பதை கீழே காணப்படும்   படப் புதிர் கணிக்கிறது

ஆதியாகமத்தின் வாக்குத்தத்தத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள்

சாத்தான் மற்றும் ஸ்திரிக்கும் தனித்தனியே ஒரு “வித்து” உண்டாகும்படி தேவன் ஏற்பாடு செய்வார். இந்த வித்துகளுக்கு இடையேயும், ஸ்திரிக்கும் சாத்தானுக்கும் இடையிலும் ஒரு ‘பகை’ அல்லது  வெறுப்பு காணப்படும். சாத்தான் ஸ்திரியினுடைய வித்தின் ‘குதிங்காலை தாக்குவான்’, அதே போல், ஸ்திரியினுடைய வித்து சாத்தானின் ‘தலையை நசுக்கும்’.

வித்தின் பொருளை  ஊகித்து உணர்தல் – ‘அவர்யார்?

இதுவரையில் நாம் மூலவாக்கியங்களை இருக்கிற வண்ணமாக கவனித்தோம்.  இப்போதும் இதன் உண்மையான பொருளை பகுத்தறிந்து உணர முயலுவோம். ஏனெனில் பெண்ணின் ‘வித்து’ என்கையில்  ‘அவன்’ மற்றும் ‘அவருடைய’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஒரு ஆண் – ஒரு புருஷனை குறிப்பிடுகிறது என்பதை நாம் அறிவோம்.  இதன் அடிப்படையில் நாம் சில  பொதுவான விளக்கங்களை புறக்கணித்திடலாம்.   அதாவது  ‘அவன்’ என்ற வித்து ஒரு ‘அவள்’ அன்று, ஆகையால், இது ஒரு பெண்ணாக இருக்க முடியாது.  ‘அவர்’  என்ற வித்து  நாம் பொதுவாக எண்ணுவதுபோல் ‘அவர்கள்’  என்பது ஒரு மக்கள் குழு, ஓர் இனம், ஓர் அணி அல்லது ஒரு தேசத்தையும் குறிப்பிடவில்லை. பல்வேறு காலகட்டத்தில், பல விதங்களில் மக்கள் ஒரு ‘அவர்கள்’  அதாவது ஒரு ‘மக்கள் கூட்டம்’ தான் இதற்கு பதில் என்று கருதினர். ஆனால் ‘அவர்’ என்ற அந்த வித்து, ஒரு தேசத்தையோ அல்லது இந்துக்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற ஒரு மதத்தை சேர்ந்தவர்களையோ, அல்லது  அது ஒரு சாதியினரையும் குறிப்பிடவில்லை.   ‘அவன்’  எனும் வித்தானது ‘அதுவாகாது’ (வித்து ஒரு நபரை குறிப்பிடுகிறது). இதன் மூலம் வித்து என்பது  ஒரு குறிப்பிட்ட தத்துவம், போதனை, தொழில்நுட்பம், அரசியல் அமைப்பு அல்லது மதத்தை குறிப்பிடவில்லை என்பதை நமக்கு தெளிவாக்குகிறது.  இன்றைக்கும் உலகத்தின் காரியங்களுக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க  ‘அது’ எனும் பெயர்பெற்ற இக்காரியங்களே  நம்முடைய விருப்பத் தேர்வாக இருந்துள்ளது, இருக்கவும் செய்கிறது.  இப்படிப்பட்டவைகளின் உதவியோடு நாம் நம்முடைய காரியங்களை சரிபடுத்திடலான் என்றே நினைக்கிறோம்.  ஆகையால், நூற்றாண்டு காலமாய் தலைசிறந்த  சிந்தனையாளர்கள் புதுமையான அரசியல் அமைப்புகள், கல்வி முறைகள், தொழில்நுட்பங்கள், மதங்கள் தான் இதற்கு தீர்வு என்று வாதாடி வந்துள்ளனர். ஆனால் இந்த வாக்குறுதியோ முற்றிலும் வேறொரு திசையை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. தேவனின் மனதில் வேறு ஏதோ இருந்தது – ஒரு ‘அவர்’. இந்த ‘அவர்’ சர்பத்தின் தலையை நசுக்குவார்.

மேலும், இங்கே சொல்லப்படாத சுவாரஸ்யமான அம்சம் ஒன்றுண்டு. தேவன் ஸ்திரியானவளுக்கு ஒரு வித்தை வாக்குரைத்ததுபோல் ஒரு புருஷனுக்கு வாக்குரைக்கவில்லை.  வேதாகமம் மற்றும் பண்டைய உலகின் வரலாற்று முழுவதிலும், தகப்பன் வழியில் வரும் மகன்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், இது ஒரு அசாதாரணமான காரியமாய் படுகிறது.  ஆனாலும் இந்த விஷயத்தில் ஒரு புருஷனிடமிருந்து தோன்றும் ஒரு வித்தை (ஒரு ‘அவன்’) குறித்த வாக்குறுதி இல்லை. ஒரு புருஷனைக் குறிப்பிடாமல், ஸ்திரியினிடமிருந்து ஒரு வித்து வரும் என்று மட்டுமே அது கூறுகிறது.

சரித்திரமானாலும் சரி, இதிகாசங்களானாலும் சரி, பூமியில் வாழ்ந்தவர்களில் உடல்ரீதியான தந்தையின்றி தாயை மட்டுமே கொண்டவர் ஒருவர் மட்டுமே. இவர் தான் இயேசு (ஈஷு சத்சங்).  இவரை பற்றி தான் புதிய ஏற்பாடு ( இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு)  ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தவர் என்று அறிவிக்கிறது – அதாவது  ஒரு தாய் உண்டு, மனிதஉருவிலான ஒரு தகப்பன் இல்லை. இந்த புதிரில் காலத்தின் தோற்றத்திலேயே  முன்நிழலாக காணப்படும் இவர் இயேசுதானோ?  வித்து ‘அவளோ’ அல்லது ‘அதுவோ’ அல்லது   ‘அவர்களோ’ அன்று அது ‘அவன்’ தான் எனும் நம்முடைய  கருத்தோடு பொருந்தக்கூடிய ஒன்றாக உள்ளது.  இந்த பார்வையில் நாம் பார்க்கும்போது புதிரின் சில துண்டுகள் அதனதன் இடத்தில் அமைவதை காணமுடியும்.

‘அவரது குதிகால் நசுக்கபடுகிறது எப்படி’ ??

சாத்தான் / சர்ப்பம் ‘அவரது குதிங்காலை’ நசுக்குவான் என்பதன் அர்த்தம் என்ன? ஆப்பிரிக்காவின் காடுகளில் நான் வேலை செய்யும் வரை இது எனக்கு புரியவில்லை. ஈரப்பதமான வெப்பத்தில் கூட நாங்கள் தடிமனான ரப்பர் பூட்ஸை அணிய வேண்டியிருந்தது – ஏனென்றால் அங்குள்ள சர்ப்பங்கள் நீளமான புல்வெளியில் பகிடக்கும். அவைகள் உங்கள் பாதத்தை – அதாவது உங்கள் குதிங்காலை – கடித்து உங்களைக் கொன்றுபோடு.  என் முதல் நாளில் ஒரு சர்ப்பத்தை மிதித்துவிட்டேன் என்று சொல்லமுடியும். ஒருவேளை அது என்னை கடித்திருந்தால் நாம் அப்பொழுதே செத்திருப்பேன். அந்த சம்பவத்திற்கு பின், இந்த புதிரின்  விடை எனக்கு  கிடைத்தது.  இந்த “அவர்”   சர்ப்பத்தை அழிப்பார் (“உன் தலையை நசுக்குவார்”).   ஆனால்  அதற்கு அவர் செலுத்த வேண்டிய விலைக்கிரயம், அவர் கொல்லப்படவேண்டும் என்பதே (“அவர் குதிங்கால் தாக்கப்படுதல்’). இது இயேசுவின் பலியினால் உண்டான  வெற்றியின் முன்நிழலாக அமைகிறது

சர்ப்பத்தின் வித்து?

சாத்தானின் வித்து என்று அழைக்கப்படும் இந்த இன்னொரு பகைவான் யார். அதன் மூலத்தை  முழுமையாக கண்டறியும் இடம் நமக்கு இங்கே இல்லாவிட்டாலும்,  பிந்தைய நூல்கள் வரவிருக்கும் ஒருவரைக் குறித்து பேசுகின்றன. இந்த பதவிளக்கத்தை கவனியுங்கள்:

அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.. (2 தெசலோனிக்கேயர் 2: 1-4; கிரேக்கத்தில் பவுல் எழுதியது கி.பி 50)

இந்த பிந்தைய நூல்கள் ஸ்திரியின் வித்திற்கும் சாத்தானின் வித்திற்கும் இடையே நடக்கக்கூடிய ஒரு மோதலைக் குறித்து வெளிப்படையாக பேசுகின்றன. ஆனால் இது முதன்முதலில், மனித வரலாற்றின் தொடக்கத்தில், வெற்றிடத்தில் விவரங்கள் நிரப்பப்படாத நிலையில், ஆதியாகம வாக்குத்தத்தத்தில்   ஒரு கருமுட்டை வடிவில் இருந்தது. ஆகவே சரித்திரத்தின் கடைசி மணித்துளிகள், சாத்தானுக்கும் தேவனுக்கும் இடையிலான இறுதி மோதல், முற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புருசசுக்தா என்ற பழங்கால பாடலின் வழியாக பயணித்தோம். இந்த பாடல்  ஒரு பூரண மனிதன் – புருசா – ஒரு மனிதனின் வருகையை முன்னறிவிப்பதையும், இவர் ‘மனித வல்லமையினால் வருபவர் அல்ல’. என்பதையும் கவனித்தோம்.  இந்த மனிதனும் லியாக கொடுக்கப்படுவான். உண்மையில் இது காலத்தின் தோற்றத்திலேயே, தேவனின் சிந்தை மற்றும் உள்ளத்தில் முன்தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக உள்ளதை என்பதை கண்டோம். இந்த இரண்டு நூல்களும் ஒரே நபரைப் பற்றி பேசுகிறதா? அப்படிதான் என்று நான் நம்புகிறேன். புருசசுக்தாவும் ஆதியாகம வாக்குத்தத்தமும் ஒரே நிகழ்வை நினைப்பூட்டுன்றன –  பலியாக ஒரு மனிதன் கொடுக்கப்படுவதற்கு ஒருநாளில் பூமியில் தானே மனித உருவில் அவதரிப்பது. அந்த மனிதர் பலியாக கொடுக்கப்படுவார் –  இது எல்லா மக்களின், எலல மதத்தினருக்கும் உலகளாவிய தேவை.  மனிதர்களுக்கும் அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும் எலல மனிதருக்கும் ஓர் உலகளாவிய தேவை.  ஆனால் இந்த வாக்குத்தத்தம் மட்டுமே – ரிக் வேதத்திற்கும் வேதகமத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை இது நான் என்று நாம் சொல்லமுடியாது.  மனிதவரலாற்றின் ஆரம்பத்தை இவர்கள் நமக்கு பதிவுசெயகின்றபடியால், இத்தோடு சம்பந்தப்படக்கூடிய மற்ற நிகழ்வுகளையும் இணைந்து பதிவிடுகிறார்கள். இதனை நாம் அடுத்ததாக பார்க்கபோகிறோம்.

பைபிளின் மூலம் பயணத்தின் PDF ஐ ஒரு புத்தகமாகப் பதிவிறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *