Skip to content

மோட்சத்தை (முக்தி) அடைய ஆபிரகாமின் எளிய வழி

  • by

குழந்தை இல்லாத மன்னர் பாண்டு வாரிசு இல்லாமல் எதிர்கொண்ட போராட்டங்களை மகாபாரதம் விவரிக்கிறது. ரிஷி கிண்டமாவும் அவரது மனைவியும் புத்திசாலித்தனமாக இசைந்திருக்க மான் வடிவத்தை எடுத்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, பாண்டு மன்னர் அப்போது வேட்டையாடி கொண்டிருந்தார், தற்செயலாக அவர்களை அம்பெய்து கொன்றார். கோபமடைந்த கிண்டாமா, அடுத்த முறை தனது மனைவிகளுடன் உடலுறவு கொண்டால் மாண்டுபோய்விடுவார் என்று பாண்டு மன்னனை சபித்தான். இதனால் பாண்டு மன்னர் தனது சிம்மாசனத்திற்கு எந்த குழந்தைகளையும் வாரிசுகளையும் பெற்றெடுக்க தடுக்கப்பட்டார். அவரது வம்சத்திற்கு இருந்த இந்த அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது?

பாண்டு மன்னனின் பிறப்பே முந்தைய தலைமுறையினரின் அதே பிரச்சினையை தீர்க்க ஒரு ஆற்றொணா செயல். முன்னாள் மன்னர் விசித்திரவீர்யா குழந்தை இல்லாமல் இறந்துவிட்டார், எனவே ஒரு வாரிசு தேவை. விசித்திரவிரியாவின் தாயார் சத்யவதி, விச்சித்திரவியரின் தந்தையான மன்னர் சாந்தானுவை திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு மகனைப் பெற்றார். இந்த மகன், வியாசா, விச்சித்திரவியரின் விதவைகளான அம்பிகா மற்றும் அம்பலிகா ஆகியோரை கருவுறச் செய்ய அழைக்கப்பட்டார். வியசும் அம்பலிகாவும் ஒன்றாய் இனைய பாண்டு பிறந்தார். பாண்டு மன்னன் இவ்வாறு வியாசரின் உயிரியல் மகன், ஆனால் கணவர் இறந்தபோது ஒரு மாற்று மனிதர் கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்ற நியோக தர்மம் மூலம், முன்னாள் மன்னர் விசித்திரவீர்யாவின் வாரிசானார். பெரும் தேவை ஆற்றொணா நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது.

கிண்டமாவால் அவர் மீது வைக்கப்பட்ட சாபத்தால் இப்போது பாண்டு மன்னனும் இதே பிரச்சினையை எதிர்கொண்டான். என்ன செய்வது? மீண்டும், ஆற்றொணா நடவடிக்கை தேவைப்பட்டது. பாண்டுவின் மனைவிகளில் ஒருவரான குந்தி ராணி (அல்லது பிர்தா) ஒரு தேவனால் கருத்தரிக்க அவள் ஒரு ரகசிய மந்திரத்தை அறிந்திருந்தார் (அவளுடைய குழந்தைப் பருவத்தில் பிராமண துர்வாசரால் வெளிப்படுத்தப்பட்டது). எனவே குந்தி ராணி இந்த ரகசிய மந்திரத்தை மூன்று மூத்த பாண்டவ சகோதரர்களான: யுதிஷ்டிரா, பீமா மற்றும் அர்ஜுன் ஆகியோர் கருத்தரிக்க பயன்படுத்தினார். குந்தி மகாராணியின் இணை மனைவியான ராணி மாத்ரி, குந்தியிடமிருந்து இந்த மந்திரத்தை பெற்றார், மேலும் அவர் இளைய பாண்டவ சகோதரர்களான நகுலா மற்றும் சகாதேவாவைப் பெற்றெடுத்தார்.

குழந்தையின்மை தம்பதிகளுக்கு மிகுந்த சோகத்தைத் தரும். தேசத்தின் அடுத்த ராஜ வாரிசு இல்லாதபோது அதைத் தாங்குவது இன்னும் கடினமாகிறது. வாடகை கூட்டாளர்களைக் கண்டுபிடிப்பதா அல்லது தேவர்களைச் செயல்படுத்துவதற்கு ரகசிய மந்திரங்களைத் தூண்டுவதா, அத்தகைய சூழ்நிலையில் செயலற்றதாக இருப்பது ஒரு விருப்பமில்லா தெறிந்தெடுப்புதான்.

ரிஷி ஆபிரகாம் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிலைமையை எதிர்கொண்டார். அவர் பிரச்சினையைத் தீர்த்த விதம் எபிரேய வேதபுஸ்தகத்தில் (பைபிள்) ஒரு மாதிரியாகக் கருதப்படுகிறது, எனவே அதிலிருந்து கற்றுக்கொள்வது விவேகமாக இருக்கும்.

ஆபிரகாமின் குறை

ஆதியாகமம் 12-ல் பதிவு செய்யப்பட்டவாக்குத்தத்தம் பேசப்பட்டதிலிருந்து ஆபிரகாமின் வாழ்க்கையில் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த வாக்குத்தத்ததிற்குக் கீழ்ப்படிந்து ஆபிரகாம் இன்று இஸ்ரவேலாயிருக்கிற அந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றார். அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த – வாக்குத்தத்ததின் நிறைவேற்றமாக பிறக்கவேண்டிய குமாரனின் பிறப்பைத் தவிர – மற்ற நிகழ்வுகள் எல்லாம் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தன. எனவே ஆபிரகாமின் இந்தை குறையோடு கதையை தொடர்கிறோம்:

 இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார்.

ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். மேலும் ஆபிராம், “நீர் எனக்கு மகனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான்.

ஆதியாகமம் 15: 1-3

தேவனின் வாக்குத்தத்தம்

ஆபிரகாம்தனக்குவாக்குத்தத்தம்செய்யப்பட்டஅந்த‘மாபெரும் தேசத்தின்’ தொடக்கத்திற்காகக் காத்திருந்தார். ஆனால் எந்த மகனும் பிறக்கவில்லை இந்த நேரத்தில் அவர் 85 வயதுடையவராக இருந்தார் இது அவரது குற்றச்சாட்டை மையப்படுத்தியது:

 

கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு மகன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார்.

பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார்.

ஆதியாகமம் 15: 4-5

அவர்களின்சந்திப்பின்போது தேவன் ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் தருவதாகவும் அவன் சந்ததி வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல கணக்கிடமுடியாதமக்களாகபெருகுவார்கள் என்றும் வாக்குப்பண்ணினார் – நிச்சயமாக எண்ணிக்கைக்கு அடங்காத அதிகம் பேர்.

ஆபிரகாமின்பதில்:நிரந்தரதாக்கத்தைக் உண்டாக்கும்  ஒரு பூஜை போல

பந்துஇப்போதுஆபிரகாமின்மைதானத்திற்குள்விழுந்துவிட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த வாக்குத்தத்திற்கு அவர் எவ்வாறு பதிலளிப்பார்? பின்வருபவைபரிசுத்தவேதாகமத்தால்அதன்மிகமுக்கியமான வாக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு நித்திய உண்மையை புரிந்து கொள்ள அடித்தளமாக அமைக்கிறது.

ஆபிராம்கர்த்தரைவிசுவாசித்தான்,அதைஅவர்அவனுக்கு நீதியாக எண்ணினார்.

ஆதியாகமம் 15: 6

நாம்உச்சரிப்புகளைபெயர்களுடன்மாற்றினால்அடுத்துவரும் வாக்கியத்தைப் புரிந்துகொள்வது எளிது:

ஆபிராம்கர்த்தரைவிசுவாசித்தான்,அதைஅவர்அவனுக்கு நீதியாக எண்ணினார்.

ஆதியாகமம் 15: 6

இது ஒரு சிறிய, குழப்பமற்ற வாக்கியம். தலைப்பு செய்திகளை போலன்றி இது வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.  ஆக, நாம் இதை தவறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகும்.ஏனெனில்இந்தசிறிய வாக்கியத்தில் ஆபிரகாமுக்கு நீதிகிடைக்கிறது.இதுஎப்படியென்றால்,ஒருபூஜையைசெய்து,  என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு பலனை பெறுவது போலாகும். நீதி ஒன்றே தேவனுக்கு முன்பாக நிற்பதற்கு நம்மை தகுதியாக்குகிறது.

நம்முடையபிரச்சனையை திருப்பிநோக்கல்: சீர்கேடு

தேவனின் பார்வையில் நாம் தேவசாயலில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த உருவத்தை சிதைக்கக்கூடிய ஒரு செயல் நடுவில் நடந்துள்ளது.  இப்போதும் இதற்கான தீர்ப்பு

கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
 ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார்.
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
    எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.

சங்கீதம் 14: 2-3

இந்தஊழலைஉள்ளுணர்வாகபார்க்கிறோம்.இதனால்தான் கும்பமேளத்திருவிழாபோன்றதிருவிழாக்களில்அதிகம்பேர் கலந்துகொள்கின்றோம். ஏனென்றால் நம்முடைய பாவத்தையும், அதை சுத்திகரிப்பதற்கான தேவையையும் நாங்கள் உணர்கிறோம். பிரார்த்த ஸ்னனா (அல்லது பிரதாசனா) மந்திரமும் நம்மைப் பற்றிய இந்த கருத்தை வெளிப்படுத்துகிறது:

நான் ஒரு பாவி. நான் பாவத்தின் விளைவாக இருக்கிறேன். நான் பாவத்தில் பிறந்தவன். என் ஆன்மா பாவத்தின் கீழ் உள்ளது.    நான் பாவிகளில் மோசமானவன். அழகிய கண்களைக் கொண்ட ஆண்டவரே பலியான ஆண்டவரே என்னைக் காப்பாற்றுங்கள்.

நம்முடைய சீர்குலைவின் விளைவு என்னவென்றால் நமக்கு நீதியே இல்லாததால் நீதியுள்ள தேவனிட்மிருந்து நாம் பிரிந்திருப்பதைக் காண்கிறோம். நமது சீர்கேடு நமது எதிர்மறை கர்மா வளர்ச்சிக்கு காரணமாயிற்று – பயனற்ற தன்மையையும் மரணத்தையும் அறுவடை செய்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கடந்த 24 மணிநேரத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்று சில செய்தித் தலைப்புகளை ஆராய்ந்து பாருங்கள். நாம் நம்முடைய வாழ்க்கையை  உருவாக்கியவரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் எனவே வேத புஸ்தகத்தில் உள்ள (பரிசுத்த வேதாகமம்) ரிஷி ஏசாயாவின் வார்த்தைகள் உண்மையாகின்றன,

நாங்கள் பாவத்தால் அழுக்காகியுள்ளோம்.
    எங்களது அனைத்து நன்மைகளும் பழைய அழுக்கு ஆடைபோன்று உள்ளன.
நாங்கள் செத்துப்போன இலைகளைப்போன்றுள்ளோம்.
    எங்கள் பாவங்கள் காற்றைப்போல எங்களை அடித்துச் செல்லும்.

ஏசாயா 64: 6

ஆபிரகாமும் நீதியும்

தேவன் அங்கிகரிக்கின்ற நீதியை ஆபிரகாம் பெற்றுகொண்டார் என்ற ஒர் பிரகடனம், கிட்டத்தட்ட நம்முடைய் கவனத்திற்கு தப்பும் விதத்தில்,   எந்தவித ஆரவாரமுமின்றி ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் இடையே அமைதியாக நடந்தவிட்டது. இந்த நீதியைப் பெற ஆபிரகாம் என்ன செய்தார்? மறுபடியும் இந்த நிகழ்வை கவனிக்காமல் விட்டு விடும் அபாயத்தில் இருக்கிறோம் ஏனென்றால் அங்கு ஆபிரகாமைப் பற்றி அவர் ‘நம்பினார்’ என்று மட்டுமே கூறுகிறது. பாவம் மற்றும் சீர்கேட்டை பற்றிய இந்த தீர்க்கமுடியாத பிரச்சினை எங்களிடம் உள்ளது எனவே காலாகாலமாக நம்முடைய இயல்பான போக்கு அதிநவீன மற்றும் கடினமான மதங்கள், முயற்சிகள், பூஜைகள், நெறிமுறைகள், சந்நியாசி துறவறங்கள் மற்றும் போதனைகள் போன்றவற்றைத் தேடுவதுதான் நீதியைப் பெறுவது என்று இருந்தது. ஆனால் ஆபிரகாம் என்ற இந்த மனிதன் அந்த மதிப்புமிக்க நீதியை வெறுமனே ‘நம்புவதன்’ மூலம் பெற்றான். இது மிகவும் எளிமையானது, இதுவும் நம் பார்வைக்கு தப்பலாம்.ஆபிரகாம்நீதியை‘சம்பாதிக்கவில்லை’;அதுஅவனுக்கு ‘கொடுக்கப்பட்டது’.இதில்என்னவித்தியாசம்?ஏதாவது ‘சம்பாதித்திருந்தால்’ நீங்கள் அதற்காக உழைத்தீர்கள் – அதற்கு நீங்கள் தகுதியானவர். இது நீங்கள் செய்யும் வேலைக்கு ஊதியம் பெறுவது போன்றது. ஆனால் ஏதாவது உங்களுக்கு கொடுக்கப்படும்போது அது உங்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் எந்தவொரு பரிசையும் போல அது சம்பாதிக்கவோ அல்லது தகுதியின் அடிப்படியிலோகொடுக்கப்படவில்லைஆனால்வெறுமனே பெறப்படுகிறது.

ஆபிரகாமின் நீதியைப் பற்றிய இந்த புரிதல், தேவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்து உதித்தெழும்பும் நமது நற்கிரியைகளினாலோ அல்லது மதச்சடங்காசாரங்களிப்  நிறைவேற்றத்தின் மூலம் நீதியை அடையமுடியும் என்ற தத்துவத்தை தவிடுபொடியாக்குகிறது . ஆபிரகாம் எடுத்த வழி இதுவல்ல. தனக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்ததை நம்பவே அவர் விரும்பினார்.; அதுவே அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது, நீதியை பெற்றுத் தந்தது.

எஞ்சியுள்ள வேதாகமம் இந்த சந்திப்பை நமக்கு ஒரு அடையாளமாக சுட்டிக்காட்டுகிறது. தேவனிடமிருந்து வந்த வாக்குத்தத்தை ஆபிரகாம் நம்புவதும் அதன் விளைவாக நீதியைப் பெறுவதும் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது. நற்செய்தி நூல்கள் முழுவதுமேதேவன் நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் வாக்குத்த்தங்களின் அடிப்படையில் தான் நிலைநிருத்தப்படுகிறது.

அப்படியானால், யார் நம்முடைய நீதியை சம்பாதிப்பார்கள் அல்லது அதற்கான விலையை யார் கொடுப்பார்கள்? அதை நாம் அடுத்து பார்க்கலாம்.

பைபிளின் மூலம் பயணத்தின் PDF ஐ ஒரு புத்தகமாகப் பதிவிறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *