Skip to content

வசனம் 3 மற்றும் 4 – புருஷாவின் அவதாரம்

  • by

புருஷசுக்தாவின்  வசனம் 2- இப்படியாக தொடர்கிறது (புருஷசுக்தாவை குறித்த சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்புகள் மற்றும் ஏனைய சிந்தனைகள் யாவும் ஜோசப் படிஞ்சரகேரா (பக்கம் 346, 2007) அவர்கள் எழுதின பண்டைய வேதங்களில் கிறிஸ்து  எனும் நூலை வாசித்ததம் மூலம் பெற்றுக்கொண்டது.

ஆங்கில மொழிபெயர்ப்பு சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு
சிருஷ்டிப்பு புருஷாவின் மகிமை – அவருடைய மாட்சிமை அவ்வளவு பெரியது. இன்னும் அவர் இந்த சிருஷ்டிப்பை விட பெரியவர்.  புருஷாவின் நான்கில் ஒரு பங்கு ஆள்த்தத்துவம்  உலகத்திலே உண்டு.  அவரில் நான்கில்  மூன்று பங்கு  இன்னும் நித்திய பரலோகத்தில் வாசம் பன்ணுகிறது.   தம்முடைய நான்கில் மூன்று பங்குடன் புருஷா பரலோகத்திற்கு ஏறினார்.   அவருடைய நான்கில் ஓரு பங்கு இப்புவியில் பிறந்தது. அதன் மூலமாக அவர் எல்லா ஜீவராசிகளுக்குள்ளூம் ஜீவனை உற்பத்தி செய்தார்  ஏடவன் அஸ்ய மஹிமா அதோ ஜ்வாய்ம்சா புருஷாபடோ-ஆ
ஸ்யா விஸ்வா பூ தனி திரிபாத் அஸ்யாம்ரதம் திவிதிரிபாத் உர்தியா உதயட் புருஷா படவு அசியேஹா அ பஹாவத் புனாஹ் ததோ விஸ்வான்வி அக்ரமாத் சசானனசானே அபிஹி      

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள உருவகத்தை புரிந்துகொள்வது கடினமான ஒன்றாக உள்ளது.   ஆனாலும் இந்த வசனங்கள் புருஷாவின் மகத்துவம் மற்றும் மாட்சிமையை காண்பிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.   அவர் சிருஷ்டிப்பு அல்லது படைப்பினும் சிறந்த ஓர் நபராக விளங்குகிறார் என்பது நமக்கு தெளிவாகிறது.   அது மாத்திரமல்ல, அவருடைய மகத்துவத்தின் ஓர் பகுதி மட்டுமே உலகத்தில் வெளிப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.  அது மட்டுமல்ல, இந்த உலகத்தில் அவர் எடுத்த அவதாரத்தை குறித்தும் இது பேசுகிறது – நீங்களும் நானும் வாழ்கின்ற உலகம் (‘நான்கில் ஒரு பங்கு இங்கே பிறந்தது’). ஆகையால், தேவன் தம்முடைய அவதாரத்தில் இப்பூமியில் வந்த போது, அவருடைய மகிமையின் ஒருபகுதி மட்டுமே வெளிப்பட்டது.  அவர் பிறந்த சமயத்தில் அவர் ஓர் வகையில் தன்னை வெறுமையாக்கிக் கொண்டார்.   இது வசனம் 2-ல் புருஷா எப்படி விளக்கப்படுகிறார் என்பதோடு ஒத்துப்போகிறது – அதாவது 10 விரல்களுக்குள் அவர் தம்மை அடக்கிக்கொண்டார்.

பரிசுத்த வேதாகமம் அவருடைய அவதாரத்தை விளக்கும் காரியத்தோடும் இது ஒத்துப்போகிறது.  அவரைக் குறித்து சொல்லும்போது..

அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.

கொலொசேயர் 2:2-3

ஆகையால், கிறிஸ்து தேவனுடைய அவதாரம் என்றாலும் அவரின் வெளிப்பாடு அதிகமாய “ம்றைந்தே” இருந்தது.   எப்படி அது மறைந்திருந்தது.  அது இன்னும் கூடுதலாக விளக்குகிறது

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

5. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

6.தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

7.அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

8.ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

பிலிப்பியர் 2: 5-9

ஆதலால், தம்முடைய அவதாரத்திலே இயேசுவானவர் “தம்மை வெறுமையாக்கி” அந்த நிலையில் தன்னை பலிக்கு ஆயத்தப்படுத்தினார்.  புருஷாசுக்தா கூறுவது போல் அவருடைய வெளிப்பட்ட மகிமை ஒரு பகுதியே. இது அவருடைய வரப்போகும் மகிமையையினால் உண்டானதொன்று. புருஷாசுக்தா அதே கருப்பொருளை பின்தொடரக்கூடிய ஒன்றாகவே உள்ளது.ஏனெனில், இந்த வசனங்களை அடுத்து அது புருஷாவின் பகுதி மகிமையிலிருந்து அவருடைய பலியை விவரிக்கும் ஓர் நிலைக்கு நம்மை நடத்துகிறது.  அதனை நம்முடைய அடுத்த பதிவிலே பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *