Skip to content

புருஷசுக்தத்தை கவனித்தல் – மனிதனை போற்றிப் புகழும் பாடல்

  • by

ரிக் வேதத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பாடல் அலல்து பிரார்த்தனைகளில் ஒன்று புருஷசுக்த ( புருஷ சுக்தம்) .  அது 90-அவது அதிகாரத்தின் 10-வது மண்டலத்தில் உள்ளது.   அது ஒரு சிறப்பான மனிதனை குறித்த பாடல்  –புருஷா.   அது ரிக் வேதத்தில் காண்ப்படுவதால், அது உலகத்தின் பழம்பெரும் மந்திரங்களில் ஒன்று.  ஆகையால்,  நம்முடைய முக்தி அல்லது மோட்சத்தை (ஞானஒளி) அடைவதை குறித்த வழியினை படித்து அறிந்துகொள்வதற்கு அது தேவையான ஒன்று.

அப்படியானால் புருஷா யார்?  வேத வாக்கியம் நமக்கு இப்படியாக சொல்லுகிறது

 “புருஷா அல்லது பிரஜாதிபதி ஏன்பவர் ஒரே நபர் ஆவார்(புருசோஹி பிரஜாதிபதி என்ற வார்த்தையின் சமஸ்கிருத எழுத்தொளி மொழிப்பெயர்ப்பு). 

மத்யந்திய சத்பத பிராமண VII 4:1.156

உபனிஷத்களும் இந்த சிந்தனை ஓட்டத்தில் தொடர்ந்து

“புருஷா என்பவர் எல்லாரைக் காட்டிலும் மேலானவர்.  புருஷா அல்லது புருஷனக்கு மேலானவர் ஒருவரும் இல்லை.  நம்முடைய உயர்வான இலக்கின் முடிவும் அவரே” (அவ்வியக்த் புருஷ பாரா. புருசான்ன பரம் கின்சித்சா கஸ்தா சா பராகதி)  

கதோபனிஷத் 3:11

“மெய்யாகவே காணக்கூடாதவருக்கு பின்பாக மேலான புருஷா உள்ளார்…அவரை அறிந்தவன் விடுதலையடைந்து சாவாமையை அடைகிறான் (அவ்வியக்த் உ பரா புருஷா…யகனா த்வா முக்யாதே ஜந்துரம்தத்வம் கா கச்சாதி)

கதோபனிஷத் 6:8

ஆகையால், புருஷா என்றால் பிரஜாதிபதி ( படைப்பின் தேவன்) .  ஆனால், இதைவிட முக்கியமான ஒன்று என்னவென்றால், அவரை நேரடியாக அறிந்துகொள்வது உங்களையும் என்னையும் பாதிக்கிறது.  உபநிஷம் சொல்லுகிறது.

‘நித்திய வாழ்க்கைக்கு வேறு எந்த வழியும் இல்லை (புருஷாவைதவிர) (நன்யாபந்தா வித்யாதே – அயன்யா)

ஸ்வேதஸ்வாதாரொபனிஷத் 3:8

ஆகவே, ரிக்வேதத்தில் புருஷாவை வர்ணிக்கும் பாடலான புருஷசுக்தாவின் வழியே நாம் இதனை படித்து புரிந்துகொள்வோம்.   இப்படி நாம் செய்யும்போது, நான் நமக்கு முன்பாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு புதுமையான, நூதனமான யோசனை ஒன்றினை வைப்பேன்:   புருஷுசுக்தாவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புருஷா (அல்லது புருஷன்) 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றின இறை அவதாரமாகிய இயேசு (நசரேனாகிய இயேசு) கிறிஸ்து தானா?  நான் ஏற்கனவே சொன்னதுபோல், இது ஒரு புதுமையான பார்வையே. ஆனாலும் இந்த இயேசு (நசரேனாகிய இயேசு)  மதங்களுக்கு எல்லாம் அப்பால்  ஒரு பரிசுத்த மனிதனாக கருதப்படுகிறார், அவர் இறைவனுடைய அவதாரமாகவும் தன்னை காட்டிக்கொண்டார்.   அவரும் புருஷாவும் பலியிடப்பட்டார்கள் (நாம் தொடர்ந்து கவனிக்கவுள்ளது போல்).  அதலால் தான், இதனை கவனித்து இவைகளை ஆராய்ந்து அறிவதற்கு இது நமக்கு நல்ல காரணங்களை அளிக்கின்றது.   சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்புகளும்,  புருஷசுக்தாவை குறித்த நம்முடைய பல்வேறு சிந்தனைகளும் ஜோசப் படினிஜரேகரா அவர்கள் எழுதின் பண்டைய வேதங்களில் கிறிஸ்து  (346 பக்கம் 2007)  என்ற நூலினை படித்ததில் இருந்து வருகிறது.

புருஷசுக்தாவின் முதல் வசனம்

சமஸ்கிருத ஒலிப்பெயர்ப்பு தமிழ் மொழிப்பெயர்ப்பு
சஹஸ்ர சிர்சா-புருஷா சஹாஸ்ர க்சா சாஹஸ்ரத்ஸ பூமிம் விஸ்வாதோ விர்த்வாட்யாத்ஸ்தாட் சங்குளம் புருஷாவுக்கு ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள் மற்றும் ஆயிரம் பாதங்கள் உண்டு.   பூமியின் எல்லா பக்கங்களிலும் நிரம்பியிருக்கும் அவர் பிரகாசிக்கிறார். பத்து விரல்களுக்குள் அவர் தன்னை அடக்கிக்கொண்டார்.

 புருஷாவும் பிரஜாபதியும் ஒன்று என்பதை நாம் கவனித்தோம்.  இங்கே  விளக்கினதுபோல், பண்டைய வேதங்களில் சர்வத்தையும் படைத்த தேவன் என்றே அறியப்பட்டார் – அவரே “சர்வசிருஷ்டிப்பின் ஆண்டவர்”

புருஷசுக்தாவின் ஆரம்பத்தில் நாம் பார்த்தது என்னவென்றால், புருஷாவுக்கு “ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் பாதங்கள்” உண்டு. இதன் பொருள் என்ன?   ஆயிரம் என்றால் எண்ணிக்கையுடைய ஒரு குறிப்பிட்ட  எண் ஆகிடாது.   அதன் பொருள் “எண்ணுக்கு அடங்காத” அல்லது “எல்லையற்ற” என்ப்தேயாகும்.   ஆகையால் புருஷாவுக்கு மட்டற்ற அறிவுத்திரண் [‘தலை’] உண்டு.   இன்றைய மொழிவழக்கில் நாம் சொன்னால்,  அவர் சர்வஞானி அல்லது சரவத்தையும் அறிந்தவர் எனலாம். சர்வத்தையும் அறிந்த ஒரே ஒருவரான  தேவனை(பிரஜாபதி) குறித்த ஓர் பண்புநலன் இது.   எல்லாவற்றிற்கும் மேலாம தேவனும் பார்க்கிறார், தேவனும் அறிந்திருக்கிறார்

புருஷாவுக்கு ஆயிரம் கண்கள் உண்டு என்று சொல்வதற்கு புருஷா சர்வஞானியாக இருக்கிறார் என்று சொல்வதற்கும் பொருள் வித்தியாசம் ஏதுமில்லை.  அவர் எங்கும் இருப்பதால் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.  அதே போல், “ஆயிரம் பாதங்கள்” என்ற தலைப்பு சர்வவல்லமை – மட்டற்ற, எல்லையற்ற வலிமை.

ஆகையால், புருஷசுக்தாவின் ஆரம்பத்தில் நாம் பார்க்கிறோம், புருஷா ஒரு சர்வஞானியாகவும், சர்வவியாபியாகவும், சர்வவல்லமை கொண்ட மனிதனாகவும் அறிமுகப்படுத்தப்படுகிறார். தேவனுடைய அவதாராம் மாத்திரமே அப்படிப்பட்ட ஓர் நபராக இருக்கமுடியும்.   ஆனால், அந்த வசனம் “அவர் தம்மை பத்து விரலகளுக்குள் அடக்கிக்கொண்டார் என்ற வசனம் சொல்லுகிறது.  அதன் பொருள் என்ன?  அவதார புருஷனாகிய புருஷா தன்னுடியய் தெய்வீக வல்லமைகளை எல்லாம் வெறுமையாக்கி ஒரு சாதாரண மனிதனாக – பத்து விரல்களை உடைய மனிதனாக  – தன்னை குறைத்துக்கொண்டார்.  ஆகையால், புருஷா என்பவர் எல்லா தெய்வீக குணங்களையும் கொண்டவர் என்றாலும், அவதாரத்தில் அவர் தம்மையே வெறுமையாக்கிக்க்கொண்டார்.

வேத புஸ்தகம் (வேதாகம்ம)  இயேசுவை பற்றி (நசரேனாகிய இயேசு) பேசும்போது  இதே யோசனையை வெளிப்படுத்துகிறது. அது சொல்லுகிறது;

… கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது

6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

7.தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

8.அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

பிலிப்பியர் 2:5-8

வேத புஸ்தகம் (வேதாகம்)  புருஷாவை அறிமுகப்படுத்தும்போது   புருஷசுக்தாவில் காணப்படும் அதே சிந்தனைகளையே பயன்படுத்துகிறது  என்பதை காணலாம் – முடிவில்லா தேவன் முடிவுள்ள் மனிதனாக அவதாரம் எடுப்பது.   ஆனால் வேதாகமத்தின் இப்பகுதி விரைவில் அவருடைய – புருஷசுக்தாவுடைய  –  பலியை- விவரிக்கும்படி நகர்கிறது.  ஆகையால்,   ஆகவே, மோட்சத்தை அடைய விரும்புவோர் யாராக இருப்பினும், உபனிஷத்துகளில் சொல்லப்பட்ட பிரகாரமே இந்த வேதவாக்குகளை ஆராய்ந்து அறிவது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க (புருஷாவை தவிர) வேறு எந்த வழியும் இல்லை ( நன்யாபாந்தா வித்யாதே – அயனாய)

ஸ்வேதாவடரொபனிஷம் 3:8

புருஷசுக்தாவின் 2-வது வசனத்தை நாம் இங்கே கவனிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *