வத-விருட்சம், பர்கத் அல்லது ஆலமரம் என்பது தெற்கு ஆசிய ஆன்மிகத்தின் மையமான இந்தியாவின் தேசிய மரமாக அறியப்படுகிறது. அது மரணத்தின் கடவுள், யமனோடு அடையாளப்படுத்தபடுவதால், அது அதிகமாய் ஒரு இடுகாட்டுக்கு அருகில் வளர்க்கப்படும் ஒரு மரமாக உள்ளது. திரும்பவும் துளிர்விடக்கூடிய தன்மை அதற்குள்ளதால், அது ஆண்டாண்டுகாலம் நிலைத்திருக்கும். ஆகையினால் அது மரணமில்லாமை (அல்லது) அழியாத்தன்மையின் அடையாளமாகவும் உள்ளது. ஒரு ஆலமரத்தின் கீழ் சாவித்திரி யமனுடன் மரித்துபோன தனது கணவன் இராஜா சத்தியவான் உயிரடையவேண்டும் என்று போராடி அவர் மூலம் ஒரு மகன் அவள் பிறக்கவேண்டும் என்றும் வாதிட்டாள் – இத வத பூர்ணிமா மற்றும் வத சாவித்திரி என்று நாம் அழைக்கப்படும் வருடாந்திர பண்டிகையில் நினைவுகூறப்படுகிறது.
இதைப்போன்று ஒரு சம்பவம் எபிரயே வேதாகமத்திலும் (பைபிள்) காணப்படுகிறது. செத்த மரம்….உயிர்பெறுகிறது….இறந்துபோன இராஜாக்களின் வமசத்தில் வந்த ஒரு புதிய மகன். ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், இந்த சம்பவம் எதிர்காலத்தை குறித்த ஒரு தீர்க்கத்தரிசனமாக உள்ளது. வெவ்வேறு தீர்க்கத்தரிசிகள் (முனிவர்கள்) நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதனை சொல்லிவருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட் கதையின் சாரம்சம் ஒருவர் வருகிறார் என்பதே. இந்த கதையை முதலில் ஏசாயா (750 கி.மு.) ஆரம்பித்தார். அவருக்கு பின்னால் வந்த தீர்க்கத்தரிசிகள்-முனிவர்கள் இதற்கு மேலும் வடிவம் கொடுத்தார்கள் – செத்த மரத்திலிருந்து உண்டான கிளை
ஏசாயாவும் கிளையும்
யூதர்களின் வரலாறு எனும் காலவரிசையை நாம் பார்க்கும்போது ஏசாயா வரலாற்றின்படி நாம் சரிப்பார்க்கூடிய ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கிறார் எனப்தை காண்கிறோம்.
தாவீது இராஜாவின் இராஜவமசம்(கி.மு1000-கி.மு 600 வரை) எருசலமேலிருந்து அரசாண்ட காலத்தில் ஏசாயா எழுதினார். ஏசாயாவின் காலத்தில் (750 கி.மு.) இராஜவசம்சமும் ஆட்சியும் சீரழிந்து காணப்பட்டது. இராஜாக்கள் தேவன் பக்கமாகவும் மோசே அவர்களுக்கு கொடுத்த பத்து கட்டளைகளைக்கும் . திரும்பவேண்டும் என்றும் ஏசாயா வேண்டிக்கொண்டான். ஆனாலும் இஸ்ரவேல் மனந்திரும்பாது என்பதை ஏசாயா அறிந்திருந்தான். ஆகையினால் தான் அவன் இந்த இராஜ்ஜியம் அழிந்து இராஜாக்களின் ஆட்சி ஓய்ந்துபோகும் என்பதை முன்னுரைத்தான்.
இராஜவம்சத்தை வெளிப்படுத்த அவன் ஒரு படத்தை, ஒரு பெரிய ஆலமரத்தின் உருவத்தை பயன்படுத்தினான். இந்த மரத்தின் வேரில், தாவீது ராஜாவின் தகப்பனாகிய ஈசாய் இருக்கிறார். ராஜாக்களின் வம்சம் ஈசாயின் வழியில் தாவீதில் தொடங்கி அவனுக்கு பின்வந்த இராஜா சாலொமோன் வரையில் தொடர்ந்தது. கீழே உள்ள வரைபடத்தில் உள்ளதுபோல் அந்த மரமானது அந்த வம்சத்தில் அடுத்த மகன் ஆட்சிக்கு வரும்வரையில் வளர்ந்துகொண்டே போனது.
முதலாவது ஒரு மரம்…பின்பு அடிமரம்…பின்பு ஒரு கிளை
இந்த ‘மரத்தின்’ ராஜவம்சம் சீக்கிரத்தில் வெட்டப்பட்டு, செத்த அடிமரமாக மாறும் எனபதை ஏசாயா வெளிப்படுத்தினார். ஒரு வேர் மற்றும் கிளையை குறித்த ஒரு புதிரை ஏசாயா இவ்வண்ணமாக எழுதுகிறார்.
சாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
அதிகாரம் 11: 1-2
2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
ஏசாயாவின் காலத்திற்கு பின், ஏறக்குறைய கி.மு. 600-ஆம் ஆண்டில் பாபிலோனியர்கள் எருசலேமை மேற்கொண்டு, ராஜவம்சத்தை சிதைத்திட்டபோது, இந்த மரம் அடியோடு சாய்ந்து இஸ்ரவேலர்களை பாபிலோனிய சிறையிருப்புக்கு நேரே கொண்டுசென்றது (காலவரிசையில் சிவப்பு காலம்). இது யூதர்களின் முதல் வெளியேறுதல் – இவர்களில் சிலர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். சாவித்திரி மற்றும் சத்தியவான் கதையில் மரித்தபோன இராஜாவின் மகன் இருந்தான் -சத்தியவான். அடிமரத்தை குறித்த தீர்க்கத்தரிசனத்தில் ஒட்டுமொத்த இராஜவம்சத்தின் வரிசையும் ஒரு முடிவுக்கு வந்து அந்த வம்சமே செத்துப்போகும்.
கிளை: தாவீதிலிருந்து தோன்றும் ஒருவர் ஞானத்தை உடையவர்.
ஆனாலும், இந்த தீர்க்கத்தரிசனம் இராஜவம்சத்தின் வேர்களை வெட்டிபோடுவதை மட்டும் குறிப்பிடாமல் இனிவரும் எதிர்காலத்தை குறிப்பிடும் ஒன்றாகவும் உள்ளது. பொதுவான ஒரு ஆலமரத்தின் அம்சத்தை பயன்படுத்தி இந்த தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. மரத்தின் அடிமரமானது ஆல விதையை முளைப்பிக்கும் ஒரு தளமாக உள்ளது. ஆலமர விதை முளைத்து படரத் தொடங்கும்போது அது அந்த அடிமரத்தை தாண்டி நீண்டகாலம் நிலைத்திருக்கும். ஏசாயா கண்ட இந்த செடி ஒரு ஆலமரத்தை போன்ற ஒன்றாக இருக்கும். ஏனெனில் ஒரு புதிய செடி அதன் அடிவேரிலிருந்து துளிர்த்து எழும்பும் – ஒரு கிளையை உருவாக்க.
ஏசாயா இந்த உருவகத்தை பயன்படுத்தும்போது தொலைதூர எதிர்காலத்தின் ஒரு நாளில், கிளை என்று அறியப்படும், ஒரு செடி, எப்படி ஆலமரச் செடி மரத்தின் அடிமரத்திலிருந்து எழும்பி எப்படி அது துளிர்விடுமோ? அதுபோல் உயிரற்ற அடிமரத்திலிருந்து எழும்பி துளிர்விடும் என்று தீர்க்கத்தரிசனம் உரைத்தார். ஏசாயா அந்த செடியை “அவர்” என்று குறிப்பிடுகிறார். அப்படியானால் ஏசாயா, ராஜவம்சத்தின் வீழ்ச்சிக்கு பின் தாவீதின் வரிசையில் வரும் ஒரு குறிப்பிட்ட மனிதனை பற்றி பேசுகிறார். இந்த மனிதனுக்கு ஞானம், வல்லமை மற்றும் அறிவு உண்டாகும். தேவனுடைய ஆவியானவரே அவர்மேல் இருந்தது போல் இருக்கும்.
அநேக புராதன இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆலமரத்தை ஒரு அழியாமையின் அடையாளமாகவே வெளிப்படுத்துகின்றன. விண்ணுயர எழும்பும் அதன் வேர்கள் மணலின் ஆழத்திற்குள் சென்று கூடுதலான தண்டுகளை உருவக்குகின்றன. அது நீண்ட ஆயுளுக்கான அடையாளமாக சிருஷ்டி கர்த்தராகிய தெய்வத்தை பிரதிபலிக்கிறது. கி.மு. 750 ஆண்டில் ஏசாயா கண்ட கிளைக்கு இப்படிப்பட்ட அநேக தெய்வீக குணாதிசயங்கள் இருப்பதோடு, இராஜவம்சத்தின் ‘அடிமரமானது’ முழுவதுமாக அழிந்துபோன பிறகும் அது நீடித்திருக்கும்.
எரேமியாவும் கிளையும்
முனிவரும்-தீர்க்கத்தரிசியுமான ஏசாயா எதிர்கால நிகழ்வுகளின் தோன்றலை மக்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று ஒரு அடையாளக்கொம்பை நட்டார். ஆனால் அவர் நாட்டியது பற்பல அடையாளங்களில் ஒன்றுமட்டுமே. ஏசாயாவுக்கு பின் 150 ஆண்டுகள் கழித்து வந்து எரேமியா கி.மு. 600-ஆம் ஆண்டில், தன்னுடைய் கண்களுக்கு முன்பாக தாவீதின் ராஜவம்சம் வெட்டப்பட்ட வேளையில், எழுதுகிறார்:
5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 23:5-6
6 அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.
தாவீதின் ராஜவம்ச கிளையை குறித்த உருவகத்தை எரேமியா விரிவாக உரைக்கிறார். கிளையும் ஒரு இராஜாவாக இருக்கும். ஆனாலும் முந்தைய இராஜாக்களை போல் அது செத்த அடிமரமாக மாறிவிடாது.
கிளை: கர்த்தர் என் நீதி
இந்த கிளையின் வித்தியாசம் அவருடைய நாமத்தில் வெளிப்படுகிறது. அவர் தேவனுடைய நாமத்தையே தரித்திருந்தார் (கர்த்தர் – தேவனின் எபிரேய பெயர்). ஆகையால் ஒரு ஆலமரத்தை போன்ற இந்த கிளை தெய்வீகத்தின் ஒரு உருவகமாக காணப்படுகிறது. அவர் நம்முடைய (மனிதர்களாகிய நாம்) நீதியாகவும் வெளிப்படுகிறார்.
தன் கணவர் சத்தியவானின் சரீரத்தை குறித்த விஷயத்தில் சாவித்திரி விவாதித்தபோது, மரணத்தை (எமன்) எதிர்கொள்ளக்கூடிய ஒரு வல்லமையை அவளுடைய நீதி அவளுக்கு பெற்று தந்தது. கும்ப மேளாவை குறித்த காரியத்தில் நாம் கவனித்ததுபோல் நம்முடைய பிரச்சனை நம்முடைய அல்லது சீர்கேடு அல்லது நம்முடைய பாவமாக காணப்படுகிறது. ஆதலால், நம்மிடத்தில் ‘நீதி’ குறைவுபடுகிறது. வேதம் சொல்லுகிறது ஆகையால் நமக்கு மரணத்தின் மீது அதிகாரம் இல்லை. சொல்லப்போனால், மரணத்திலிருந்து தப்பிக்க வழியில்லை என்கிறது:
14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
எபிரேயர் 2:14b-15
15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
வேதாகமத்தில் பிசாசு யமனை போன்றவன். ஏனெனில் அவன் நமக்கு விரோதமாக இருக்கும் மரணத்தின்மேல் அதிகாரம் உடையவன். சொல்லப்போனால், சத்தியவானின் சரீரத்தை குறித்த விஷயத்தில் யமன் எப்படி விவாதித்தானோ, அதேபோல் வேதாகமத்திலும் பிசாசிர்ன் சரீரத்தை குறித்த விஷயத்தில் அவன் விவாதிததான் என்று பார்க்கிறோம்,
9 பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.
யூதா 1:9
சாவித்திரி மற்றும் சத்தியவான் கதையில் உள்ள யமனை போன்று, உன்னதமான தீர்க்கத்தரிசியான மோசேயின் சரீரத்தை குறித்த காரியத்தில் விவாதிக்க பிசாசுக்கு எப்படி அதிகாரம் இருந்ததோ, அதேபோல் மரணத்தை குறித்த காரியத்திலும் – நம்முடைய பாவம் மற்றும் சீர்கேட்டின்மீது – பிசாசுக்கு ஒரு அதிகாரம் உண்டு. தேவதூதர்களும்கூட கர்த்தருக்கு மட்டுமே – சிருஷ்டி கர்த்தருக்கு மட்டுமே – மரணத்தில் பிசாசை அதட்டவல்ல அதிகாரம் உண்டு என்பதை அறிந்திருந்தார்கள்.
இங்கே, இந்த கிளையில் நாம் ஒரு வாக்குத்தத்தத்தை பார்க்கிறோம். எதிர்காலத்தில் மரணத்தை நாம் மேற்கொள்ள கர்த்தர் நமக்கு “நீதியை” அருளுவார் என்ற வாக்குத்தத்தம்.
எப்படி?
இந்த உட்கருத்தை மேலும் விவரிக்கையில் சகரியா கூடுதல் விவரங்களை அளிக்கிறார். இது சாவித்திரி மற்றும் சத்தியவானின் கதையில் காணப்படும் மரணத்தை (யமன்) மேற்கொள்ளும் காரியத்தோடு ஒத்துப்போகும் ஒன்றாக உள்ளது. அதனை நாம் அடுத்து கவனிப்போம்