Skip to content

பத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல

  • by

நாம் கலியுகத்தில் அல்லது இருண்டகாலத்தில் வாழ்கிறோம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்திய யுகம் தொடங்கி, திரேதா யுகம் மற்றும் துவாபர யுகம் முடிந்து நான்காவது யுகமான இது கடைசி யுகமாகும். சத்தியத்தின் முதல் யுகத்திலிருந்து (சத்யயுகா) கலியுகம் வரை, இந்த நான்கு யுகங்களுக்கிடையில் பொதுவான நிகழ்வுதான், ஒரு நிலையான அறநெறி மற்றும் சமூக சிதைவு ஆகும்.

மகாபாரதத்தில் உள்ள மார்க்கண்டேயன் கலியுகத்தில் மனித நடத்தை இவ்வாறாக இருக்கும் என விவரிக்கிறார்:

கோபம், கடுங்கோபம் மற்றும் அறியாமை வளரும்

ஒவ்வொரு நாளிலும் மதம், உண்மைத்தன்மை, தூய்மை, சகிப்புத்தன்மை, கருணை, உடல் வலிமை மற்றும் நினைவாற்றல் நலிவடையும்.

எந்தவொரு நியாயமும் இல்லாமல் மக்களுக்கு கொலையைப் பற்றிய எண்ணங்கள் இருக்கும், அதில் தவறொன்றும் இல்லை என்று காண்பார்கள்.

இச்சை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக கருதப்படும், மேலும் உடலுறவு என்பது வாழ்க்கையின் மையத் தேவையாகக் கருதப்படும்.

பாவம் அதிவேகமாக அதிகரிக்கும், அதே நேரத்தில் நல்லொழுக்கம் மங்கி, செழிக்காமல் போகும்.

மக்கள் போதைப்பொருள் மற்றும் போதைக்கு அடிமையாகி விடுவார்கள்.

குருக்கள் இனி மதிக்கப்பட மாட்டார்கள், அவர்களுடைய மாணவர்கள் அவர்களைக் காயப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் போதனைகள் அவமதிக்கப்படும், காமத்தை பின்பற்றுபவர்கள் எல்லா மனிதர்களிடமிருந்தும் மனதைக் கட்டுப்படுத்துவார்கள்.

எல்லா மனிதர்களும் தங்களை தெய்வங்களாக அறிவித்துக்கொள்கிறார்கள் அல்லது தெய்வங்களால் வழங்கப்பட்ட வரம் மற்றும் போதனைகளுக்கு பதிலாக அதை ஒரு தொழிலாக மாற்றுவர்.

மக்கள் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் அனால் பாலியல் இன்பத்திற்காக சேர்ந்து வாழ்வார்கள்.

மோசேயும் பத்து கட்டளைகளும்

எபிரேய வேதங்கள் நமது தற்போதைய காலத்தை அதே வழியில் விவரிக்கின்றன. பாவத்திற்கான நம்முடைய நடத்தையின் காரணமாக, பஸ்கா பண்டிகையோடு எகிப்திலிருந்து தப்பித்த சிறிது நேரத்திலேயே கடவுள் மோசேக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். மோசேயின் குறிக்கோள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு செல்வது மட்டுமல்லாமல், அவர்களை ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு வழிநடத்துவதும் ஆகும். ஆகவே, இஸ்ரவேலரை மீட்ட பஸ்காவின் ஐம்பது நாட்களுக்குப் பிறகு, மோசே கடவுளிடமிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெறும்படி அவர்களை சீனாய் மலைக்கு (ஓரேப் மலையையும் குறிக்கும்) அழைத்துச் சென்றார். கலியுகத்தின் பிரச்சினைகளை அறிய இந்த சட்டம் கலியுகத்தின் போது பெறப்பட்டது.

மோசேக்கு என்ன கட்டளைகள் கிடைத்தன? முழுமையான சட்டம் மிக நீளமாக இருந்தபோதிலும், மோசே முதலில் கடவுளால் எழுதப்பட்ட குறிப்பிட்ட அறநெறி கட்டளைகளை ஒரு கற்பலகைகளில் பெற்றார், இது பத்து கட்டளைகள் (அல்லது மோசேயின் பத்துக் கட்டளைகள்) என அழைக்கப்படுகிறது. இந்த பத்தும் சட்டத்தின் சுருக்கத்தை உருவாக்கியது – சிறிய விவரங்களுக்கு முன் அறநெறி தர்மம் – மேலும் அவை கலியுகத்தில் பொதுவான தீமைகளிலிருந்து மனந்திரும்பும்படி நம்மை தொடரும் கடவுளின் வல்லமையான செயலாக உள்ளது.

பத்து கட்டளைகள்

கடவுளால் கற்பலகைகளில் எழுதப்பட்ட, பத்து கட்டளைகளின் முழுமையான பட்டியல் இங்கே, பின்னர் மோசே எபிரேய வேதங்களில் பதிவு செய்தார்.

வன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
13 கொலை செய்யாதிருப்பாயாக.
14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.
15 களவு செய்யாதிருப்பாயாக.
16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

யாத்திராகமம் 20: 1-18

பத்து கட்டளைகளின் நியமம்

இன்று நாம் சில நேரங்களில் இவை கட்டளைகள் என்பதை மறந்து விடுகிறோம். அவை பரிந்துரைக்கப்பட்டவைகள் அல்ல. அவை சிபாரிசும் அல்ல. ஆனால் இந்த கட்டளைகளுக்கு நாம் எந்த அளவிற்கு கீழ்ப்படிய வேண்டும்? பின்வருபவை பத்து கட்டளைகளைக் கொடுப்பதற்கு முன்பதாக வருகிறது

3 மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
4 நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

யாத்திராகமம் 19: 3,5

இது பத்து கட்டளைகளுக்குப் பிறகு வழங்கப்பட்டது

7 உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.

யாத்திராகமம் 24:7

சில நேரங்களில் பள்ளித் தேர்வுகளில், ஆசிரியர் பல கேள்விகளைக் கொடுக்கிறார் (எடுத்துக்காட்டாக 20) ஆனால் பின்னர் சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 20 கேள்விகளில் ஏதேனும் 15 கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு மாணவனும்/மாணவியரும் பதிலளிக்க 15 எளிதான கேள்விகளை எடுக்கலாம். இந்த வழியில் ஆசிரியர் தேர்வை எளிதாக்குகிறார்.

பலரும் பத்து கட்டளைகளை அதே போல் நினைக்கிறார்கள். கடவுள், பத்து கட்டளைகளைக் கொடுத்தபின், “இந்த பத்தில் இருந்து நீங்கள் விரும்பும் ஆறை முயற்சி செய்யுங்கள்” என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நம்முடைய ‘கெட்ட செயல்களுக்கு’ எதிராக கடவுள் நம்முடைய ‘நல்ல செயல்களை’ கொண்டு சமநிலைப்படுத்துவதாக கற்பனை செய்வதால் நாம் இவ்வாறு நினைக்கிறோம். நமது நற்செயல்கள் நமது மோசமான குறைபாடுகளை விட அதிகமாக இருந்தால் அல்லது ரத்து செய்தால், கடவுளுடையதை  சம்பாதிக்க இது போதுமானது என்று நாம் நம்புகிறோம்.

இருப்பினும், பத்து கட்டளைகளின் நேர்மையாக வாசித்தால் இது அவ்வாறு வழங்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து – எல்லா காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பத்து கட்டளைகள் மிகவும் கடுமையாக இருப்பதால் இது பலரால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலியுகம் கொண்டுவரும் சூழ்நிலைக்காக அவை காலியுகத்தில் வழங்கப்பட்டன.

பத்து கட்டளைகள் மற்றும் கொரோனா நச்சுயிர் சோதனை

2020 ஆம் ஆண்டில் உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் ஒப்பிடுவதன் மூலம் காலியுகத்தில் கடுமையான பத்து கட்டளைகளின் நோக்கத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும். கோவிட் -19 என்பது காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோயாகும் கொரோனா நச்சுயிர் – நாம் பார்க்க முடியாத அளவுக்கு சிறிய ஒன்று.

யாராவது காய்ச்சல் உணர்கிறார்கள் மற்றும் இருமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த நபர் என்ன பிரச்சினை என்று ஆச்சரியப்படுகிறார். அவருக்கோ / அவளுக்கோ சாதாரன காய்ச்சல் இருக்கிறதா அல்லது அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியானால் அது ஒரு கடுமையான பிரச்சினை – உயிருக்கு ஆபத்தானது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது மற்றும் அனைவருக்கும் எளிதில் பாதிக்கப்படுவதால் இது ஒரு உண்மையான வாய்ப்பு. கண்டுபிடிக்க அவர்கள் ஒரு சிறப்பு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள், இது அவர்களின் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை தீர்மானிக்கிறது. கொரோனா வைரஸ் சோதனை அவர்களின் நோயைக் குணப்படுத்தாது, இது அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருந்தால், அது COVID-19 என்பதை முடிவு செய்யும், அல்லது அவர்களுக்கு பொதுவான காய்ச்சல் இருந்தால் அது உறுதியாகத் தெரிவிக்கிறது.

இதே போன்றுதான் பத்து கட்டளைகளிலும் அறியப்படும். 2020 இல் கொரோனா நச்சுயிர் பரவலாக உள்ளது போல கலியுகத்திலும் அறநெறிச் சிதைவு பரவலாக உள்ளது. நாம் நீதியுள்ளவர்களா அல்லது நாமும் பாவத்தால் களங்கப்பட்டிருக்கிறோமா என்பதை பொது அறநெறி ரீதியான இந்த யுகத்தில், அறிய விரும்புவோம். பத்து கட்டளைகள் வழங்கப்பட்டன, அவற்றுக்கு எதிரான நம் வாழ்க்கையை ஆராய்வதன் மூலம் நாம் பாவத்திலிருந்தும், அதனுடன் வரும் கர்மவினையிலிருந்தும் விடுபட்டிருக்கிறோமா, அல்லது பாவம் நம்மீது ஒரு பிடி வைத்திருக்கிறதா என்பதை நாமே அறிந்து கொள்ள முடியும். கொரோனா நச்சுயிர் சோதனையைப் போலவே பத்து கட்டளைகளும் செயல்படுகின்றன – எனவே உங்களுக்கு நோய் (பாவம்) இருக்கிறதா அல்லது அதிலிருந்து நீங்கள் விடுபட்டிருக்கிறீர்களா என்பது உங்களுக்குத் தெரியும்.

பாவம் என்பது ‘குறித்தவருதல்’ என்று பொருள் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் இலக்கு என்னவென்றால் எப்படி நாம் மற்றவர்களையும், நம்மையும், கடவுளையும் நடத்துகிறோம் என்பதாகும். ஆனால் நம்முடைய பிரச்சினையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம் (தவறான தரத்திற்கு எதிராக நம்மை அளவிடுவது), மதத் தகுதியைப் பெறுவதற்கு கடினமாக முயற்சி செய்கிறோம், அல்லது அதை விட்டுகொடுத்துவிட்டு இன்பத்திற்காக வாழ்கிறோம். ஆகையால் கடவுள் பத்து கட்டளைகளைக் கொடுத்தார்:

20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை

ரோமர் 3:20

பத்து கட்டளைகளின் தரத்திற்கு நேராக நம் வாழ்க்கையை ஆராய்ந்தால், கொரோனா வைரஸ் பரிசோதனையைப் போன்று அது உள் சிக்கலைக் காட்டும். பத்து கட்டளைகள் நம் பிரச்சினையை ‘சரிசெய்யவில்லை’, ஆனால் கடவுள் அளித்த தீர்வை நாம் ஏற்றுக்கொள்ளும்படி, சிக்கலை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. சுய ஏமாற்றத்தில் தொடர்வதற்குப் பதிலாக, நம்மைத் துல்லியமாகப் பார்க்க சட்டம் அனுமதிக்கிறது.

கடவுளின் பரிசு மனந்திரும்புதலில் கொடுக்கப்பட்டுள்ளது

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் உண்டான பாவமன்னிப்பை பரிசாக கொடுப்பதுதான் கடவுளின் தீர்வாகும் – இயேசுவின் அறவொளி. இயேசுவின் வேலையை நாம் நம்பி விசுவாசிக்கும்போது இந்த நித்திய வாழ்க்கை என்னும் பரிசு நமக்கு எளிமையாக வழங்கப்படுகிறது.

16 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

கலாத்தியர் 2:16

ஸ்ரீ ஆபிரகாம் கடவுளுக்கு முன்பாக நியாயப்படுத்தப்பட்டதால், நமக்கும் நீதியை வழங்க முடியும். ஆனால் அதற்கு நாம் மனந்திரும்ப வேண்டும். மனந்திரும்புதல் என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, ஆனால் மனந்திரும்புதல் என்பது ‘நம் மனதை மாற்றுவது’ பாவத்திலிருந்து விலகி, கடவுளை நோக்கியும் அவர் அளிக்கும் பரிசுவுக்கு திரும்புவதாகும். வேத புஸ்தகத்தில் (பைபிள்) விளக்குவது போல்:

  ஆகையால், மனந்திரும்புங்கள், கடவுளிடம் திரும்புங்கள், இதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், புத்துணர்ச்சியூட்டும் நேரங்கள் கர்த்தரிடமிருந்து வரும்,

அப்போஸ்தலர் 3: 19

நாம் மனந்திரும்பி, கடவுளிடம் திரும்பினால், உங்களுக்கும் எனக்கும் அருளப்படும் வாக்குறுதி என்னவென்றால், , நம் பாவங்கள் நமக்கு எதிராக எண்ணப்படாது, நாம் ஜீவனைப் பெறுவோம். கடவுள், தனது மிகுந்த கருணையினால், கலியுகத்தில் பாவத்திற்கான ஒரு சோதனை மற்றும் தடுப்பூசி இரண்டையும் நமக்கு வழங்கியுள்ளார்.

பைபிளின் மூலம் பயணத்தின் PDF ஐ ஒரு புத்தகமாகப் பதிவிறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *