Skip to content

பலியின் உலகளாவிய அவசியத்தன்மை

மக்கள் மாயையிலும் பாவத்திலும் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை  முனிவர்களும் ரிஷிமார்களும் காலாகாலமாய் அறிந்துவந்துள்ளனர்.  இதன் பொருட்டே மக்களுக்குள்  மதம், வயது, கல்வித் தகுதிகளுக்கு அப்பார்ப்பட்டு ‘சுத்தமாக்கப்படவேண்டும்’ எனும் ஓர் உள்ளான விழிப்புணர்வு  காணப்படுகிறது.   இதன் காரணமாகவே அனேகர் கும்பமேளா வைபவத்தில்  பங்குபெறுகிறார்கள்.  தங்கள் பூஜைகளை ஆரம்பிக்கும் முன்னர் பிரார்த்தாசனா மந்திரத்தை. (“நான் ஒரு பாவி. நான் பாவத்தின் விளைவு. நான் பாவத்தில் பிறந்தவன்.  என் ஆத்துமா பாவத்தில் உள்ளது.   நான் பாவிகளில் பிரதான பாவி . அழகான கண்களை உடைய ஆண்டவரே, பலிகளின் ஆண்டவரே, என்னை இரட்சியும்) சொல்லுவர்.  சுத்தமாகவேண்டும் என்ற இந்த உள்ளான தேவை உணர்வோடுகூட நம்முடைய பாவம் அல்லது இருளான செயல்களுக்கு (தமஸ்) ஓர் விலைக்கிரயம் செலுத்தவேண்டுமே என்ற உணர்வும் காணப்படுகிறது.  ஆகையால்தான் கும்பமேளா மற்றும் ஏனைய பண்டிகைகளில் நடக்கும் பூஜைகளில் பலியை குறித்த இந்த உள்ளான தேவை சந்திக்கப்பட,  மக்கள் தங்கள் நேரத்தை, பணத்தை, சந்நியாசத்தை காணிக்கையாக கொடுப்பதுண்டு.  மக்கள் ஒரு பசுவினை  ஆற்றில் நீந்தவிட்டு அதன் வாலைப் பிடித்துக்கொண்டே கரையை சேரும் பழக்கத்தை கேள்விபட்டிருக்கிறேன்.  இது பாவமன்னிப்பு அல்லது விமோசனத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரு பூஜை அல்லது பலியாக செய்யப்படுகிறது.

இப்படி பலியினை செலுத்தவேண்டும் என்ற தேவை நம் பண்டைய மத இலக்கியங்களின் காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது.   இந்த இலக்கியங்கள் அனைத்துமே நம்முடைய உள்ளுணர்வுகள் நமக்கு  சொல்லும் காரியத்தை வலியுறுத்துகின்றன – அதாவது  பலி என்பது அவசியம், அது செலுத்தப்படவேண்டும்.  உதாரணத்திற்கு பின்வரும் போதனைகளை கவனியுங்கள்.

கதோபனிஷத் (இந்து வேதம்) என்ற இலக்கியத்தில் அதன் நாயகன் நச்சிகேத் சொல்கிறார்:

“அக்கினி  பலி மோட்சத்திற்கு நம்மை நடத்தும் என்பதையும், மோட்சத்தை அடைவதற்கு அதுவொன்றே வழி என்பதையும் நான் அறிந்துள்ளேன்  – கதோபனிஷத் 1.14

இந்துக்களின் புத்தகம் சொல்லுகிறது;

 “பலியின் மூலமே ஒருவன் மோட்சலோகத்தை அடைகிறான்”  சதாப்த பிராஹமனா   VIII.6.1.10

“பலிகளின் மூலம், மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும் அழியாத்தன்மையை அடைகிறார்கள்”  சதாப்த பிராமணா 11.2.2.8-14

ஆகவே, பலியின் மூலமே நாம் அழியாத்தன்மை மற்றும் மோட்சத்தை அடையமுடியும்.  ஆனாலும், நமக்குள்ள கேள்வி என்னவென்றால், அது எப்படிப்பட்ட பலியாக இருக்கவேண்டும், நம்முடைய பாவம்/இருளான செயல்களுக்கான கணக்கினை செலுத்தி முடிக்க எவ்வளவு போதுமானது? 5 வருட சந்நியாசம் போதுமா? ஏழைகளுக்கு கொடுத்து உதவுவது ஒரு தகுதியுள்ள பலியாக ஏற்றுக்கொள்ளப்படுமா?  அப்படியானல், அதன் அளவினை  நாம் எவ்வாறு கணக்கிடவேண்டும்?

பிரஜாபதி / யாவே : பலியிடும் பொருளை தரும் தேவன்

மிக பண்டைய வேத எழுத்துக்களில், சர்வசிருஷ்டியின் ஆண்டவராகிய தேவன் – அண்டசராசத்தை படைத்து அதனை ஆளுபவர் – பிரஜாபதி என்று அழைக்கப்பட்டார்.  பிரஜாபதியின் மூலமே சகலமும் உண்டாயின.

பரிசுத்த வேதாகமத்தின் பண்டைய எபிரயே குறிப்புகள் தோரா  என்று அறியப்படுகிற்து.   தோரா ஏறக்குறைய கி.மு 1500-ஆம் வருடத்தில், ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலத்தில், எழுதப்பட்டது.  இந்த தோராவானது  ஜீவனுள்ள  தேவன் ஒருவர் இருக்கிறார்   என்றும், அவரே அண்டசராசரத்தையும் படைத்தவர் என்ற பிரகடனத்துடன் ஆரம்பிக்கிறது.   மூல எபிரேயத்தில் எழுதப்பட்டுள்ள இதன் ஒலிபெயர்ப்பின்படி இந்த தேவன் எலோகீம்   என்றும் யாவே  என்றும்  எபிரேய எழுத்துக்களில் மாறி மாறி அழைக்கப்படுகிறார். ஆகையால், ரிக்வேதத்தில் காணப்படும் பிரஜாபதியை  போல், தோராவில் உள்ள யாவே அல்லது எலோகீம்  சகலசிருஷ்டிப்பின் தேவனாக இருக்கிறார்.

தோராவின் ஆரம்பத்தில், யாவே தேவன் தம்மை “தேவையானதை கொடுக்கும்” அல்லது “தேவைகளை சந்திக்கும்” தேவனாக தன் ரிஷியான  ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார். நம் தேவைகளை சந்திக்கும் யாவே தேவனுக்கும் (எபிரேயத்தில் யாவே-யீரெ) “சிருஷ்டிகளை பாதுகாத்து ஆதரிக்கும் “ரிக்வேதத்தில் உள்ள பிரஜாபதிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை கண்டு நான் வியந்துள்ளேன்.  இதிலே மிக சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால்,  இந்த குறிப்பிட்ட தேவையை குறித்த விஷயத்தில், தண்டியாமா பிராஹமனா  பிரஜாபதி நம்முடைய தேவைகளை எவ்வாறு சந்திப்பார் என்று விவரிக்கிறது. 

“தன்னை பலியாக தந்த பிரஜாபதி (சர்வ சிருஷ்டியின் ஆண்டவர்)           தேவர்களுக்கு தம்மை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்” தண்டியாமாபிராஹமனா, அதிகாரம் 7, 2-வது காண்டம்.

(“சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு “பிரஜாபதிர்தேவேபஹயம் ஆதமனம் யக்னம் கருத்வ பிரயாச்சத்”)

பிரஜாபதி என்ற பதம்  ஒருமையில், ஒருவரை காண்பிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.   தோராவில் எப்படி ஒரே யாவே காணப்படுவதுபோல் பிரஜாபதியும் ஒருவரே.  பின்பு புராணங்களில் (கி.பி. 500 – 1000) அநேக பிரஜாபதிகளை நாம் அடையாளம் கண்டுபிடித்துள்ளோம்.  ஆனால், நாம் முன்பு சுட்டிக்காட்டின அந்த எழுத்தில் பிரஜாபதி ஒருமையில் அறியப்படுகிறார்.  இந்த வாக்கியத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால், பிரஜாபதி தம்மையே கொடுக்கும் ஒருவராகவும், அல்லது பலியாக மற்றவர்கள் சார்பில் தன்னை கொடுக்கும் ஒருவராக அறியப்படுகிறார். இதனை உறுதிபடுத்தும் ரிக் வேதம் இப்படியாக சொல்லுகிறது.:

“உண்மையான பலி பிரஜாபதியே” [சமஸ்கிருதம்: ‘பஜாபதிர் யஜ்னா]

சமஸ்கிருத பண்டிதர்  H.அகுவிலார் சதாப்த பிராஹமனத்திலிருந்து இதனை மொழிபெயர்க்கையில் இந்த குறிப்பினை சுட்டிக்காட்டுகிறார்.

பிரஜாபதி தவிர பலிக்கு தகுதியான ஒன்றும், ஒருவரும் காணப்படாததால், தேவர்கள் அவரையே பலியாக கொடுத்தனர்இந்த ஒன்றை குறித்து முனிவர் சொன்னது என்னவென்றால்: “பலியின் உதவியோடு தேவர்கள் பலியினை காணிக்கையாக படைத்தனர்அதாவது பலியின் உதவியோடு, அவர்களை அவரை (பிரஜாபதி) பலியாக கொடுத்தனர்  – இவைகளே முதன்மையான சட்டங்கள்இந்த பிரமாணங்களே முதலாவது செயல்படுத்தப்பட்டன

ஆதிகாலத்திலிருந்தே வேதங்கள், யாவே அல்லது பிரஜாபதி இப்படிப்பட்ட தேவை ஒன்றினை அறிந்திருந்தார் என்றும், அதற்காக தம்மையே பலி காணிக்கையாக அவர் கொடுத்தார் என்றும் அறிவிக்கின்றனஅவர் அதனை எப்படி செய்தார் என்பதை நாம் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ரிக்வேதத்தில் உள்ள புருசாசுக்தவின் புருஷபிரஜாபதி  பலி  என்ற காரியத்தில் கவனம் செலுத்தும்போது பார்ப்போம்ஆனால் இப்போதும் இது எவ்வளவு முக்கியம் என்பதை கவனியுங்கள். சுவேதஸ்வதரோபனிஷத் சொல்லுகிறது

‘நித்திய வாழ்க்கைக்கு வேறே வழியில்லை (சமஸ்கிருதம்:  நன்யாபந்தா விட்யாடே – அயனாயா) சுவேதாஸ்வதரோபனிஷம் 3:8

ஒருவேளை நித்திய வாழ்க்கையில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதென்றால், மோட்சம் அல்லது அறிவோளியை நீங்கள் அடைய விரும்பினால், நீங்கள் எங்களுடன் பயணித்து வெளிப்படுத்தப்பட்டவைகள் என்னவென்பதையும்,  மோட்சலோகத்தை சென்றடைய பிரஜாபதி (அல்லது யாவே) ஏன் தன்னையே பலியாக நமக்கு கொடுத்தார்  என்பதையும் அறிந்துகொள்வது ஒரு விவேகமுள்ள காரியமாக அமையும்.  வேதங்கள் நம்மை அந்தரத்தில் விடுவதில்லை.  ரிக் வேதத்தில் புருசாஸ்குதாவை நாம் பார்க்கிறோம். அது நமக்கு பிரஜாபதியின் அவதாரத்தையும் அவர் நமக்காக தந்த பலியையும் விவரிக்கிறது.  இங்கே நாம் புருஷாஸ்குதவை அறிமுகப்படுத்துகிறோம்.  புருஷாஸ்குதா என்பது நமக்கு மோட்சம் அல்லது முக்தி (அழியா வாழ்வு) உண்டாகும்படிக்கு நசரேனாகிய இயேசு கிறிஸ்து என்பவர்  தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த ஒன்றினை குறிக்கும் வார்த்தை.   இங்கே நாம் நேரடியாக இயேசுவின் பலி மற்றும் அவர் நமக்கு அளிக்கும் வரத்தை கவனிக்கிறோம்.

1 thought on “பலியின் உலகளாவிய அவசியத்தன்மை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *