புருஷாசுக்தா என்பது காலத்தின் தோற்றங்களுக்கு முன்பாகவே இருந்த ஒன்று என்பதையும், புருஷாவை பலியிடவேண்டும் என்கின்ற தேவனுடைய(பிரஜாபதி) சிந்தையை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருந்தது எனப்தை கவனித்தோம். இந்த ஒரு தீர்மானத்திலிருந்தே, சகல சிருஷ்டிப்பும் – மனித சிருஷ்டிப்பு உட்பட – தொடங்கிற்று .
மனுகுலத்தின் சிருஷ்டிப்பை குறித்து வேத புஸ்தகம் (வேதாகமம்) என்ன சொல்லுகிறது என்பதை கவனிப்போம். அப்போது வேதாகமம் இந்தை காரியத்தை குறித்த என்ன போதிக்கிறது என்பதை புரிந்துகொள்வோம். .
26 அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார்.
27 எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்
ஆதியாகமம் 1:26-27
“தேவனுடைய ரூபத்தில்”
மனிதன் “தேவனுடைய ரூபத்தின்படியே” சிருஷ்டிக்கப்பட்டான் என்ற வாக்கியத்தின் பொருள் யாது? இதன் பொருள், தேவன் இரண்டு கைகள், தலை போன்ற உடலுருப்புகளை கொண்ட ஒரு பிறவி என்று எடுக்கமுடியாது. சொல்லப்போனால், ஆழமான அளவில், மனிதர்களின் குணாதிசயங்கள் தேவனுடைய ஒரே வித குணாதிசயங்களிலிருந்து கிடைக்கப் பெற்றவை. உதாரணத்திற்கு, (வேதாகமத்தில்) தேவனுக்கும் (இயல்புவாழ்க்கையில்) மக்களுக்கும் ( அறிவுக்கூர்மை, உணர்ச்சிகள் மற்றும் சித்தம் உண்டு. வேதாகமத்தில் சில சமயங்களில் தேவன் துக்கப்படுபவராக, வேதனைப்படுபவராக, களிகூறுபவராக சித்தரிக்கப்படுவதை பார்க்கிறோம். மனிதர் அனுபவிக்கும் அதே உணர்வு ஓட்டங்கள். நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல தெரிவுகளையும், தீர்மானங்களையும் எடுக்கிறோம். அதேபோல் தேவனும் வேதாகமத்தில் பல தெரிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கிறார். இல்லாத ஒன்றை சிந்தைக்கும் நம்முடைய திறனும் தேவனிடத்திலிருந்து வந்ததே. நமக்கும் தேவனிடத்தில் காணப்படும் அறிவுக்கூர்மை, உணர்ச்சிகள் மற்றும் சித்தம் போன்ற திறன்கள் உண்டு. ஆகையால்தான் நாம் அவருடைய ரூபத்தின்படி உருவாக்கப்பட்டவர்கள்.
ஆழ் நிலையில், நாம் ஒரு உணர்வுள்ள, சுய உணர்வுள்ள, “நான்” “நீ” என்ற அறிவுடைய பிறவிகள். நாம் ஆள்தத்துவமில்லாத “இவைகள்” அன்று. தேவன் நம்மை இவ்விதமாய் சிருஷ்டித்ததினாலேயே நாம் இப்படி உள்ளோம். இந்த அடிப்படை பார்வையில், பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ஸ்டார் வார்ஸில் நாம் பார்க்கும் எலலாம் தெய்வம் என்று கொள்கையின்படியான அள்தத்துவமற்ற “சக்தியை” போன்று சித்தரிக்கப்படவில்லை. தேவனை பற்றிய இந்த மூல போதனையே மனிதர்கள் அறிவற்ற படைப்புகள் அன்று. அவர்கள் உணர்வுள்ள பிறவிகள் என்ற உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
நாம் ஏன் கலைநயம் கொண்டவர்களாக உள்ளோம்
கலை மற்றும் நாடகத்தை நாமும்கூட விரும்புகிறோம். இயல்பாகவே நாம் பாராட்ட செய்கிறோம், நமக்கு அழகும்கூட தேவைப்படுகிறது. நம்முடைய கண்களுக்கு புலப்படும் அழகையும் தாண்டி இசையும் இலக்கியமும் சேர்ந்த ஒன்று. இசை நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சிந்தித்து பாருங்கள் – நாம் எப்படி நடனமாட விரும்புகிறோம் என்பதையும் சிந்தித்து பாருங்கள். இசை நம்முடைய வாழ்க்கையை அவ்வளவாய் உயிர்ப்பிக்கிறது. நமக்கு நல்ல கதைகள் பிடிக்கும், அது நாவலாகவோ, நாடக வடிவிலோ அல்லது இன்று நாம் பொதுவாக பின்தொடரும் திரைப்படங்களாக இருந்தாலும்கூட. கதையில் கதாநாயகர்கள், வில்லன்கள், நாடகமும் உண்டு. பெரிய கதைகளில் கதாநாயகர்கள், வில்லன்கள் மற்றும் நாடகத்தை குறித்த கற்பனைகளில் நம்முடைய சிந்தையில் பற்றியெறிவதுண்டு. தேவன் ஒரு கலைஞனாக இருப்பதாலும் அவருடைய ரூபத்தில் நாம் உண்டாக்கப்பட்டதாலும், நம்முடைய பொழுதுப்போக்குக்கும், நமக்கு உற்சாகப்படுத்திக்கொண்டு, புத்துணர்வு பெற, கலையை அதன் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி அதனை பாராட்டுவது மனிதனுக்கு இயல்பாய் தோன்றும் ஓர் காரியம்.
இது நாம் கேட்கவேண்டிய் ஓர் கேள்வி. ஏன் நாம் இயற்கையில் கலைசிந்தை உடையவர்களாக உள்ளோம்? நான் எப்பொழுதெல்லாம் இந்தியாவுக்குள் பயணம் செய்தேனோ, அப்பொழுதெல்லாம் மேற்கத்திய திரைப்படங்களை மிஞ்சும் இசை மற்றும் நடன காட்சிகளை கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு. பகிரங்க நாத்திகரும் மக்களின் அறிவுக்கூர்மையை ஆராய்வதில் அறிவும் அனுபவமும் உடைய டேனியேல் டென்ண்ட், பொருள்சார் கொளையின் அடிப்படையில் இதற்கான பதிலை அளிக்கிறார்.
“இந்த ஆராய்ச்சியின் அதிகமான பகுதி இசையை ஒரு அனுமானத்துடனே எடுக்கிறது. ஏன் இசை உள்ளது? ஒரு சுருக்கமான பதில். அது உண்மையும் கூட. அது ஏன் என்றால், நாம் அதை விரும்புவதால் அது உள்ளது. ஆகையினால் அதிகதிமாய் அதனை நாம் உண்டாக்குகிறோம். ஆனால் நாம் ஏன் அதை விரும்புகிறோம்? அது அழகுள்ளதாய் இருப்பதனாலேயே. சரி, அது ஏன் நமக்கு அழகானதாய் தோன்றுகிறது? இது உண்மையில் ஒரு அருமையான உடலியல் ரீதியிலான கேள்வி. ஆனால் அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை (டேனிய டென்னட். மயக்கத்தை உடைப்பது: மதம் ஓர் இயற்கையான அமசம்.
பக்கம் 43
மனிதனை குறித்த இந்த பொருள்சார்ந்த பார்வையானது, மனித சுபாவத்தின் இந்த அடிப்படை கேள்விக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. வேதாகத்தின் பார்வையில், தேவன் கலைதிறன் கொண்டவரும் கலைநயம் மிக்கவராகவும் உள்ளார். அவர் காரியங்களை அழகாக படைத்துள்ளார், அவர் அழகை இரசிக்கவும் செய்கிறார். அவருடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்ட நாமும் அப்படியே இருக்கிறோம்.
நாம் ஏன் சன்மார்க்கராக உள்ளோம்
இதனோடு, தேவனுடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்டது எல்லா கலாச்சாரங்களிலும் காணப்படும் இயற்கையான சன்மார்க்க திறனை விளக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனை நாம் குரு சாய்பாபாவின் சன்மார்க போதனைகளில் குறிப்பிட்டுள்ளோம். நாம் தேவனுடைய ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டதாலும், சன்மார்க் வாழ்வியல் அவரின் இன்றியமையாத ஒரு பங்காக இருப்பதாலும், ஒரு திசைகாட்டும் கருவி எப்படி காந்தத்தின் அடிப்படையிலான வடக்கு நோக்கி உள்ளதோ, “பரவாயில்லை”, “நல்லது”. “சரி” போன்ற காரியங்களை குறித்த விஷயத்திலும் அவர் எவ்விதமாய இருக்கிறாரோ நாமும் அவ்விதமே இருக்கிறோம். ஏதோ மதவைரக்கியம் கொண்டவர்கள் மட்டுமே இப்படி உள்ளார்கள் என்றில்லை – எல்லாரும் இப்படிதான். இதனை அடையாளங்காணாமல் போகும்போது பல்வேறு தவறான புரிதல்களுக்கு இடங்கொடுத்துவிடும். அமெரிக்க நாட்டின் பொருளாதார நிபுணர் சாம் ஹாரிஸ் அவர்கள் வைத்த சவாலை உதாரணமாக எடுங்கள்.
மதரீதியிலான நம்பிக்கை நமக்கு சன்மார்க்கத்தின் ஒரே மெய்யான அடித்தளத்தை அமைக்கிறது என்ற நீங்கள் நம்புவது சரியென்றால், நாத்திகர்கள் விசுவாசிகளை காட்டிலும் சன்மார்க்கத்தில் குறைந்தவர்கள் என்று ஆகும்” சாம் ஹாரில் 2005-கிறிஸ்தவ் தேசத்திற்கு ஓர் கடிதம்
பக்கம் 38-39
ஹாரிஸின் கூற்று முற்றிலும் தவறானது. சன்மார்க்க நெறிமுறைகளை குறித்த நம்முடைய உணர்வு, தேவனுடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்டதனாலேயே வருகிறது. மதத்தை பற்றிக்கொண்டிருப்பதனாலன்று. ஆகையினால் தான் நாத்திகர்களும், நம்மைப் போன்று இந்த சன்மார்க்க நெறி உணர்வு உண்டு. ஆனால், நாத்திகத்தின் சிக்கல் என்னவெனில், நமக்கு ஏன் இந்த சன்மார்க்க உணர்வு இருக்கிறது என்பதை அவர்களால் சொல்லமுடியாது என்பதே. ஆனால் நம்மை பொறுத்தவரையில் நாம் தேவனுடைய ரூபத்தில் உண்டாக்கபட்டுள்ளதால், இதனை விளக்குவது நமக்கு எளிமையான, நேர்மறையான ஒன்று.
நாம் ஏன் உறவுமுறையை கொண்டாடுகிறோம்
வேதத்தின் அடிப்படையில், நம்மை நாமே புரிந்துகொள்ளுவதில் இருக்கும் முதல் புள்ளி, நாம் தேவனுடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்துகொள்வதாகும். இதன் காரணமாகவே, நாம் தேவன் யார் (வேதத்தில் அவரை ப்ற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ள காரியங்களின் மூலம்) என்கின்ற விஷயத்தில் ஓர் உட்பார்வை பெறுகிறோம் அல்லது மக்கள் (செய்ல்பாடுகளை கவனித்தல் அல்லது பிரதிபலிப்புகள்) மூலம் நாம் இந்த உட்பார்வை அடைகிறோம். உதாரணத்திற்கு, உறவுகளை குறித்த காரியத்தில் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலியுங்கள். ஒரு நல்ல படத்தை பார்பப்து நல்லதே. ஆனாலும் அந்த திரைபடத்தை ஒரு நெருங்கிய நண்பனோடு பார்ப்பது ஒரு முற்றிலும் வித்தியாசமான அனுபவம் அன்றோ. நம்முடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாம் நணப்ர்களை தேடுகிறோம். அர்த்தமுள்ள நட்புகள் மற்றும் அர்த்தமுள்ள உறவுகள் நம்முடைய நலமுடைமைக்கு முக்கியமானவைகள். மாறாக, தனிமை மற்றும்/அல்லது உடைந்த குடும்ப உறவுகள் மற்றும் நட்புறவுகளில் சிதைவு நமக்கு அழுத்தத்தை கொண்டுவருகிறது. மற்றவர்களோடு நமக்கு உள்ள உறவில் நாம் நடுநிலை உணர்வை கொண்டவர்களோ அல்லது மற்றவர்களுடன் பாராட்டும் உறவில் நாம் அசையவே அசையாதவர்கள் என்று சொல்லமுடியாது. பாலிவுட் (இந்திய) திரைப்படங்கள் மிகவும் பிரபலமாவதற்கான காரணம் அவைகள் கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலே (காதலர்கள், குடும்ப உறுப்பினர்கள்).
இப்போதும், நாம் தேவனுடைய ரூபத்தில் உண்டாகப்பட்டிருப்போமானால், உறவைக் குறித்த அதே முக்கியத்துவத்தை நாம் தேவனிடம் எதிர்பார்ப்போம். ஆம் அதை எதிர்பார்ககவும் செய்கிறோம். வேதம் சொல்லுகிறது, “தேவன் அன்பாகவே இருக்கிறார்….” (1 யோவான 4:8). நாம் அவர்மேல் வைக்கும் அன்பை குறித்தும், பிறர்மேல் பாராட்டும் அன்பை குறித்தும் அதிகமாய் எழுதப்பட்டுள்ளது – சொல்லப்போனால், இயேசு கிறிஸ்துவினால் அவைகள் இரண்டு மிக முக்கியமான கட்டளைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அன்பு என்று சொல்லும்போதே அது உறவின் அடிப்படையில் இருக்கின்ற ஒன்றாகவே இருக்கும். அது ஏனெனில், அன்புகூரும் ஒருவருக்கு (நேசர்(அ)காதலன்) அன்பூகூரப்படவேண்டிய ஒரு நபர் (காதலி) இருக்கவேண்டும்.
ஆதலால், நாம் தேவனை ஒரு நேசராக எண்ணவேண்டும். ஒருவேளை நாம் அவரை “காரியங்களை நடத்துபவர்”, “முதல் காரணி”, “சர்வஞானமிக்க தேவன்”, “ஆசீர்வதிக்கும் பிறவி” அல்லது ஒரு “ஆள்தத்தவமைல்ல ஆத்மன்” என்று எடுப்போமானால், நாம் வேதாகமத்தின் தேவனை பற்றி சிந்திக்கவில்லை – மாறாக நம்முடைய சிந்தையில் நாம் நமக்கென்று ஒரு தெய்வத்தை வடிவமைத்துக்கொண்டோம். இவர் இந்த எல்லா பதவிளக்கங்களுக்கும் உரியவர் என்றாலும், உறவுமுறையில் அவர் மிகவும் பாசமும் பற்றும் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். அவரிடத்தில் ‘அன்பு ‘ உண்டு என்று சொல்லவில்லை. அவரே “அன்பாக” உள்ளார். மக்களுடன் தேவன் பாராட்டும் உறவை குறித்து வேதம் சொல்லும் இரண்டு முக்கியமான உவமானங்கள், தகப்பன் தன் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, கணவன் மனைவியிடன் காட்டும் அன்பு. இவைகளை இரண்டுமே பாசமும் பந்தமும் இல்லாத தத்துவரீதியிலான, “முதல் காரண” ஒப்புமைகள் அன்று. மாறாக, மனித உறவுமுறைகளிலே மிகவும் ஆழமான, மிகவும் நெருக்கமானவைகள்.
இதுவே நாம், இதுவரையில், ஏற்படுத்தியுள்ள அஸ்திபாரம். சிந்தை, உணர்ச்சிகள் மற்றும் சித்தத்தை தன்னகத்தே கொண்ட் தேவனுடைய ரூபத்தின்படியே மக்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். நாம் உணர்வுள்ளர்கள், சுயவிழிப்புள்ளவர்கள்.
நாம் சன்மார்க்க பிறவிகளாக இருப்பதால் “எது சரி மற்றும் நியாமானது” மற்றும் எது அப்படியாக இல்லை என்பதை பற்றிய ஒரு உள்ளான திசைகாட்டுதல் நமக்குள் உள்ளது. அழகு, நாடகம், கலை மற்றும் கலையை அதன் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை மெருகூட்டும், அதனை மெச்சிக்கொள்ளும் ஒர் உள்ளான திறன நமக்குள் காணப்படுகிறது. தேவன் இவ்வளவாகவே இருக்கிறார். தேவனுடைய ரூபத்தில் நாம் உண்டாக்கப்பட்டுள்ள இப்படியாகவே இருக்கிறோம். இதற்கான அடித்தளத்தை அமைக்கையில், குறைந்தபட்ட இவைகள் யாவுமே நம்மை குறித்த நாம் கவனித்த காரியங்களோடுகூட ஒத்துப்போகிறது. இன்னும் சில கடினமான காரியங்களை குறித்து நம்முடைய அடுதத பதிவில் நாம் கவனிபோம்.