Skip to content

வசனம் 2 – புருஷா சாவாமையின் தேவன்

  • by

நாம் முதல் வசனத்தில் கவனித்தது என்னவென்றால் புருஷாசுக்தா அல்லது புருஷா என்பவர் சகலத்தையும் அறிந்தவர், சர்வவல்லவர் மற்றும் எங்கும் இருப்பவர் என்பதை  கவனித்தோம்.   பின்பு நாம் இந்த புருஷா என்பவர் இயேசு கிறிஸ்துவாக இருப்பாரோ என்ற கேள்வியை எழுப்பி இதற்கான விடையை கண்டுபிடிக்கும் பயணத்தில் இறங்கினோம்.  ஆக,  இப்போது நாம் புருஷசுக்தாவின் இரண்டவாது வசனத்திற்கு வந்துள்ளோம். அந்த வசனமும் இந்த மனிதனாகிய புருஷாவை ஒரு நூதனமான வகையில் விளக்குகிறது.  கீழே சமஸ்கிருதம் ஒலிபெயர்ப்பும் தமிழ் மொழிப்பெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.  (ஜோசப் படிஞ்சாரேகேரா  (பக்கம் 346 பதிப்பு 2007-ஆம் ஆண்டு )

 புருஷசுக்தாவின் இரண்டாவது வசனம்
தமிழ் மொழிபெயர்ப்பு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு
 புருஷா என்றால்  இருந்ததும் இருப்பதுமாகிய அண்ட சராசரம். அவரே உணவின்றி (இயற்கை பொருள்) வழங்கும் இந்த அண்ட சராசரத்தின் தேவன்.    புருஷ எவேடம் சர்வம் வத்புதம் வக்க பவ்யம் உதம்ர்தத்வஸ்யெசானோ வாடனேனடிரொஹதி

புருஷாவின் குணநலன்கள்

புருஷா இந்த அண்டசராசரத்திற்கும் மேலானவர் (இடம் மற்றும் பொருளின் ஒட்டுமொத்தம்) அவரே காலதேவனும்கூட (இருந்தது இனிவருவதும்) அது மாத்திரமல்லசாவாமையின் தேவன்  – நித்திய ஜீவன்இந்து இதிகாசத்தில் அநேக தேவங்கள் உண்டுஆனால், எந்த ஒன்றுக்கும் இத்தகைய அளவற்ற குணாதிசயங்கள் இல்லை.

ஒரு மெய்யான தேவனுக்குபடைப்பின் தேவனுக்குமட்டுமே பொருந்தக்கூடிய ஆச்சரியமான குணாதிசயங்கள்இவரே ரிக்வேதம் கூறும் பிரஜாபதி ஆவார் (பழைய ஏற்பாட்டின் யாவே தேவனுக்கு ஒப்பானவர்). ஆகையால் இந்த மனிதன், புருஷாவை, ஒரே தேவனுடைய அவதாரமாகத் தான் நாம் புரிந்துகொள்ளமுடியும். –சர்வசிருஷ்டியின் ஆண்டவர்.

அதுமாத்திரமல்ல, இந்த புருஷா நமக்கு அழியாத வாழ்வினை (நித்திய ஜீவன்அருளுகிறார் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்அதனை நமக்கு தருவதற்கு அவர் எந்தவொரு இயற்கையான பொருளையும் பயன்படுத்துவதில்லை i.e., நமக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்கு அவர்  அண்டசராசரத்தில் உள்ள எந்தவொரு இயற்கை வழிமுறைகள் அல்லது இயற்கை பொருள் அல்லது ஆற்றலை பயன்படுத்துவதில்லைநாம் எல்லாரும் சாவு மற்றும் கர்மவினையின் சாபத்தின் கிழே உள்ளோம்இதுவே நம்முடைய வாழ்க்கையின் நிலையற்ற தன்மையாக காணப்ப்டுவதால், இதினின்று நாம் தப்பிக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். இதற்காகவே பூஜைகள், புனித நீராடல் மற்றும் பற்பல புரஸ்காரங்களை செய்கிறோம்இது உண்மை என்பதில் ஒரு சிறு வாய்ப்பு இருந்தாலும்புருஷாவுக்கு சாவாமையை தரக்கூடிய வல்லமையும் வாஞ்சையும் இருக்கும் பட்சத்தில், இவ்விஷயத்தில் இன்னும் அதிக தகவல் விழிப்புடன் இருப்பது   புத்தியுள்ள காரியம்.

ரிஷிக்களோடு பரிசுத்த வேதாகமத்தை ஒப்பிடுவது

இந்த சிந்தையோடு, மனித வரலாற்றில் எழுதப்பட்ட பழம்பெரும் புனித இலக்கியங்களில் ஒன்றினை நாம் கவனிப்போம்.  அது எபிரேய ஏற்பாடு (வேதாகமத்தின் அல்லது பரிசுத்த வேதாகத்தின் பழைய ஏற்பாடு).  ரிக் வேதத்தை  போல் இந்த புத்தகமும் பற்பல அண்டுகளுக்கு முன்பாக, வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில்,   பல்வேறு ரிஷிக்களால் இறைவாக்குங்கள், இறைப்பாடல்கள், வரலாறு மற்றும் தீர்க்கத்தரிசனங்களின் தொகுப்புகாகும்.  ஆகையால், பழைய ஏற்பாடு என்பது தேவனால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பு நூலாகும்.  இந்த இலக்கியங்கள் எல்லாம் அதிகமாய் எபிரேய மொழியில் எழுதப்பட்டவை. ஆகையால் இவர்கள் கி.மு 2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த ரிஷி ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள் ஆவார்கள். ஆனாலும் ஆபிரகாமின் காலத்திற்கு முன்பாக வாழ்ந்த ரிசி யோபு எழுதின நூல் ஒன்றுண்டு.   அவர் வாழ்ந்த காலத்தில் எபிரேய தேசம் என்ற ஒன்று இன்னும் உருவாகவில்லை.  யோபின் நூலை படித்தவர்கள் இவர் கி.மு. 2200 ஆண்டு, அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழந்த ஒருவர் என்று சொல்லுகிறார்கள்.

யோபு எழுதின நூலில்

யோபு தான் எழுதின யோபு   என்ற புனித நூலில், அவன் தன்னுடைய தோழர்களுக்கு இப்படியாக சொல்லுவதை பார்க்கிறோம்…

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு,  நான்என்மாம்சத்தில்இருந்ததேவனபார்ப்பேன்.

அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்;இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது.

யோபு 19:25-27

யோபு வரப்போகும் “மீட்பரை” குறித்து பேசுகிறார்.  யோபு எதிர்காலத்தை பற்றிய காரியத்தை பேசுகிறார் என்பதை நாம் அறிவோம் . ஏனென்றால் கடைசிநாளில் பூமியில் நிற்பார் (எதிர்கால வினை) என்று உள்ளது.  ஆனால் இந்த மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிறார் – பூமியில் இலலாவிட்டாலும்.  ஆகையால் இந்த மீட்பர், புருஷாசுக்தாவினால் உள்ள புருஷாவைப் போல், காலத்தின் தேவனாக உள்ளார்.  ஏனெனில் அவருடைய வாழ்வு நம்மிய காலத்தின் கட்டமைப்புக்குள் இருக்கும் ஒன்றாக தோன்றவில்லை.

யோபு பின்பு அறிக்கை செய்கிறார், “இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு(அதாவது அவனுடைய மரணத்திற்கு பின்) அவன் ‘அவரை’ பார்த்திடுவான்          (அவனுடைய மீட்பர்) என்றும் அதே சமயம் “தேவனையும்” பார்த்திடுவான் என்று சொல்லுகிறான். வேறுவிதத்தில் சொன்னால், புருஷா என்பவர் எப்படி பிரஜாபதியின் அவதாரமாக விளங்குகிறாரோ, வரப்போகும் இந்த மீட்பர் தேவனுடைய அவதாரமாக உள்ளார். ஆனால் எப்படி யோபுவினால் தன்னுடைய மரணத்திற்கு பின்பாக அவரை பார்க்கமுடியும்?  சரி, ஒருவேளை, நாம் யோபு சொன்ன காரியத்தை சரியாகத்தான் புரிந்துகொண்டோமோ என்று பார்ப்போம். யோபு சொல்லுகிறார், “என் சொந்த கண்கள் – அந்நிய கண்கள் அல்ல” பூமியில் என் மீட்பர் நிற்பதை காணும்.  இதற்கு நம்மால் ஒரே விளக்கத்தை மட்டுமே கொடுக்கக்கூடும்.   அதாவது தேவன் யோபுவிற்கு சாவை அறியாத வாழ்வினை அல்லது சாவாமையை அளித்துள்ளார், இவனும் தன் மீட்பராகிய தேவன் பூமியில் நடந்து தனக்கு சாவாமையை கொடுக்கப்போவதால், இவனும் பூமியில் நடந்து தன் சொந்த கண்களினாலேயே தன் மீட்பரை காண்பான். இந்த நம்பிக்கையானது யோபுவின் மனதை மிகவும் பரவசப்படுத்தின காரணத்தினால் அந்நாளை காண யோபு மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறான்.  இதுவே அவனுக்குள் ஒர் பெரும் மாற்றத்தை கொண்டுவந்த ஓர் தாரக மந்திரம்.

ஏசாயாவும் கூட

புருஷா என்ற நபர் மற்றும் யோபு குறிப்பிடும் மீட்பர், இவர்களை குறித்த வர்ணனையோடு அதிகமாய் ஒத்துப்போகும் வரப்போகும் மனிதனை குறித்து கி.மு.750 ஆண்டு எபிரேய தீர்கத்தரிசிகள் அல்லது ரிஷிக்கள்  பேசியுள்ளார்கள்.  இவர் தேவனால் ஊந்தப்பட்டு அநேக தேவ வாக்குகளை எழுதியுள்ளார்.  வரப்போகும் மனிதரை குறித்து அவர் தந்த வர்ணனை இப்படியாக காணப்படுகிறது:

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்–

2.இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

6.நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஏசாயா 9:1-2, 6

வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த தீர்க்கத்தரிசி அல்லது ரிஷி ஏசாயா ஒரு குமாரனின் பிறப்பை முன்னறிவிக்கிறார் அல்லது தெரிவிக்கிறார்.  இவர், “வல்லமையுள்ள தேவன் என்ற அழைக்கப்படுவார்” என்று குறிப்பிடுகிறார்.  இந்த செய்தியானது “மரண இருளின் தேசத்தில் குடியிருக்கும்” ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமான ஒன்றாகவே இருக்கும்.   இதன் பொருள் என்ன?  மரணத்திலிருந்தும் நம்முடைய கர்மவினையிலிருந்தும்  நாம் தப்பித்துகொள்ளவேமுடியாது என்ற அறிவோடு தான் நாம் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்துவருகிறோம்.  ஆகையால், நாம் எழுத்தின்படியே “மரணத்தின் நிழலில் வாழ்கிறோம்.  அப்படியிருக்க, ‘வல்லமையுள்ள தேவன்’ என்று அழைக்கப்படவுள்ள இந்த வரப்போகும் குமாரன்  மரணத்தின் நிழலில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெரிய வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் ஒருவராக இருப்பார்.

மீகாவும்

ஏசாயாவின் காலத்தில் (கி.மு.750) வாழந்துவந்த மற்றுமொரு தீர்க்கத்தரிசி மீகாவும் வரப்போகும் இந்த தீர்க்கத்தரிசியை குறித்த தெய்வ வாக்கை பெற்றிருந்தான்.

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும்,                                                                                      இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்த புறப்பட்டு என்னிடத்தில் வருவார்அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய                                                                     பூர்வத்தினுடையது.

மீகா 5:2

மீகா சொன்னது யாதெனில்,  பெத்லகேம் எனும் நகரத்திலிருந்து,  எப்பிராத்தா எனும் பகுதியிலிருந்து, அதாவது யூதா  கோத்திரத்தார் (அதாவது யூதர்கள்) வாழந்த பகுதியிலிருந்து ஓர் மனிதன் வருவான்.  இந்த மனிதனை குறித்ததான ஓர் முற்றிலும் நிகரில்லாத காரியம் என்னவென்றால், அவர் வரலாற்றின் ஓர் காலக்கட்டத்தில் எருசலமேலிருந்து வருவார் என்றாலும், அவர் காலங்களின் தோற்றங்களுக்கு முன்பாகவே இருந்தவர்.  ஆகையால், புருஷசுக்தாவின் இரண்டாவது வாக்கியத்தை போன்றே,  யோபுவில் நாம் வாசிக்கும் வரப்போகும் மீட்பரை போல், இந்த மனிதனும்  காலத்தினால கட்டப்படாதவர்.  அவர் காலத்தின் தேவனாக இருப்பார்.  இது ஒரு தெய்வீக திறமை, மானுட திறமையன்று.  ஆகையால், இவர்கள் எல்லாரும் ஒரே மனிதனை சுட்டிக்காட்டுகிறார்.

இயேசு கிறிஸ்துவில் நிறைவேறினது

அப்படியானால் யார் இந்த நபர்? மீகா நமக்கு ஓர் முக்கியமான வரலாற்று தடயத்தை கொடுக்கிறார்.   வரப்போகும் நபர் பெத்லகேமிலிருந்து வருவார்.   இன்று நாம் இஸ்ரவேல்/வெஸ்ட் பாங்க் என்றெல்லாம் அழைக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முன்பாகவே பெத்லகேம் என்னும் உண்மையான பட்டணம் இருந்தது.  இது ஒரு பெரிய பட்டணம் இல்லை. பெரிய பட்டணமாகவும் இருந்ததில்லை.  ஆனாலும், அது உலகம் புகழ் பெற்ற ஓர் நகரம், ஓவ்வொரு ஆண்டும் இது உலக செய்திகளில் வருகிறது.  ஏன்?   இது இயேசுகிறிஸ்துவின்ஜென்ம பூமி. இந்த பட்டணத்தில் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இயேசுவானவர் பிறந்தார்.   ஏசாயா நமக்கு ஒரு இன்னொரு விடயத்தையும் கொடுக்கிறார். இவர் கலிலேயாவில் ஓர் தாக்கத்தை உண்டாக்குவார் என்று சொல்லப்படுகிறது.   இயேசுவானவர் (மீகா முன்னுரைத்தபடி) பெத்லகேமில் பிறந்திருந்தாலும், ஏசாயா தீர்க்கத்தரிசனமாக உரைத்தபடி, அவர் கலிலேயா பட்டணத்தில் வளர்ந்து  ஓர் ரபியாக, ஓர் போதகனாக வாழ்ந்துவந்தார்.    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாய் அவருடைய பிறப்பிடமாகிய எருசலேமும், அவருடைய ஊழியத்தின் மையமாக இருந்த கலிலேயாவும் இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கயில் மிகவும் அதிகமாய் அறியப்பட்ட இடங்கள். இங்கும் நாம் பல்வேறு தீர்கத்தரிசிகளின் முன்னறிவிப்புகள் இயேசு கிறிஸ்து எனும் நபரில் நிறைவேறுகிறதை பார்க்கிறோம்.   ஆப்படியானால்,  இந்த தீர்க்கத்தரிசிகள் முன்னுரைத்த புருஷர்/மீட்பர்/ஆளுனராக இவர் இருந்திருப்பாரோ?   ‘மரணத்தின் நிழலில்’ (மற்றும் கர்மவினையின் கீழ்) வாழும் நமக்கு ‘சாவாமை’ உண்டு என்ற கேள்விக்கு பதிலளிக்கும் திறவுகோலை இந்த காரியம் நமக்கு அளிக்கும் பட்சத்தில் இதனை ஆராயந்து அறிய நேரம் எடுப்பது நல்லது.  ஆக, புருஷாசுக்தாவின் வழியே நாம் தொடர்ந்து பயணிக்கையில் நம்முடைய புலன்விசரனையை நாம் தொடர்கிறோம். அதனை எபிரேய வேத புத்தகத்தின் தீர்கத்தரிசிகளோடு ஒப்பிட்டும் பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *