மாயை அல்லது மாயா என்பது சமஸ்கிருத வார்த்தையான “இல்லாத ஒன்று” என்ற வார்த்தையில் இருந்து வருவதால் அது “மருட்சி” என்று அறியப்படுகிறது. பற்பல முனிவர்கள் மற்றும் சிந்தனை ஓட்டங்கள் மருட்சியை பலவிதங்களில் முக்கியப்படுத்தினாலும், பொருள் மற்றும் உடல்ரீதியான காரியங்கள் நம் ஆத்துமாவை தவறான வழிகளில் நடத்தி ஒருவித அடிமைத்தனத்திற்குள்ளாக நம்மை சிக்கவைத்திடும். நம்முடைய ஆத்துமா பொருட்களை ஆட்கொள்ளவும் அதனை அனுபவிக்கவுமே விரும்புகிறது. ஆனாலும், அப்படி நாம் செய்யும்போது இச்சை, பொறாமை மற்றும் கோபத்திற்கு நாம் இடமளித்துவிடுகிறோம். அடிக்கடியாக நாம் நம்முடைய முயற்சிகளை இரண்டுமடங்கு அதிகரித்து, தவறுக்குமேல் தவறுபுரிந்து பிரச்சனையை பெரிதாக்கி, இன்னும் ஆழமான ஒரு மருட்சி அல்லது மாயைக்குள்ளாக பிரவேசிக்கிறோம். ஆதலால், மருட்சியானது ஒரு நீர்ச்சுழியைப் போல், இயங்கி, பெலத்தின்மேல் பெலன் அடைந்து, ஒருவரை மேலுமேலும் வலைக்குள் சிக்கவைத்து, அவர்களை விரக்திக்குள் ஆக்குகிறது. தற்காலிகமான காரியங்களுக்கு நீரந்தர மதிப்பு உண்டென்று நம்புவதினாலும், உலகத்தால் தரமுடியாத ஒரு நிலையான மகிழ்ச்சியை உலகத்தில் தேடுவதினாலேயே மாயை உண்டாகிறது.
ஞானத்தை போதிக்கும் பழ்ம்பெரும் தமிழ் நூலாகிய ‘திருக்குறள்’ மாயை மற்றும் அதனால் உண்டாகும் விளைவுகளை இப்படியாக விளக்குகிறது.
“ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா”
திருக்குறள் 35.347–348
எபிரேய வேதங்களிலும் திருக்குறளுக்கு ஒப்பான ஞானத்தை போதிக்கும் இலக்கியங்கள் காணப்படுகின்றன. இந்த ஞானப் பாடல்களின் ஆக்கியோன் சாலோமொன் ஆவார். சூரியனுக்கு கீழே வாழ்ந்த அவர் எப்படி மாயை மற்றும் அதன் விளைவுகளை அனுபவித்தார் என்பதை அவர் பதிவிடுகிறார் – அதாவது, பொருளுக்கு மட்டும் தான் மதிப்பு என்று எண்ணத்துடன் வாழ்வதும், சூரியனின் பாதையில் நிற்கும் இந்த உடல்சார்ந்த உலகத்தில் நிலையான மகிழ்ச்சியை தேடுவது.
சூரியனுக்குகீழேஉள்ளமாயைகுறித்தசாலொமோனின்அனுபவம்
தன்னுடைய ஞானத்திற்கு அறியப்பட்ட பண்டைய காலத்து அரசன் சாலொமோன், கி.மு.950 வருடத்தில் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு நூலின் ஒரு பகுதியாக காணப்படும் அநேக பாடல்களை இயற்றியுள்ளார். பிரசங்கி நூலில், வாழ்க்கையில் திருப்தியை கண்டடைவதற்கு அவர் எடுத்த எல்லா பிரயாசங்களையும் விவரிக்கிறார். அவர் எழுதுகிறார்:
ன் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது.
பிரசங்கி 2:1-10
2 நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
3 வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன்.
4 நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.
5 எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.
6 மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.
7 வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது.
8 வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.
9 எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானம் என்னோடேகூட இருந்தது.
10 என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சி
செல்வம், புகழ், அறிவு, கட்டடங்கள், பெண்கள், இன்பம், இராஜ்ஜியம், வேலைகள், திரட்சைரசம் – போன்ற இவைகளும் இவைகளுக்கு அதிகமாவும், மேலும் அவருடைய அல்லது நம்முடைய நாட்களிலும் இல்லாத அளவிற்கு சாலொமோனிடம் எல்லாம் இருந்தது. ஐன்ஸ்டீனின் அறிவுக்கூர்மை, லக்ஷ்மி மிட்டல் அவர்களின் ஐஸ்வர்யம், பாலிவுட் கதாநாயகனின் சமுதாய/பாலியல் வாழ்க்கை, அதோடு இங்கிலாந்தின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம் அவர்களுக்கு இருக்கும் ராஜபட்டம் – இவைகள் அனைத்தும் ஒரே நபருக்குள். அந்த இணைப்பினை யாரால் அடிக்கமுடியும்? நீங்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம். மற்ற எல்லாரைக் காட்டிலும் இவர் தான் தன் வாழ்க்கையில் மிகுதியான திருப்தியை அனுபவித்திருப்பார் என்று.
அவருடைய இன்னொரு பாடலான வேதாகமத்தில் இருக்கும், உன்னதப்பாட்டில், அவர் தனக்குகிருந்த காதல் உறவை குறித்த பாலுணர்வெழுப்பும் சூடான காதல் கவிதையை அவர் பதிவிடுகிறார் – வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் ஓர் திருப்தியை தரக்கூடிய ஒன்று. முழு பாடல் இங்கே. அவருக்கும் அவருடைய காதலிக்கும் இடையே பகிர்ந்துகொள்ளப்பட்ட காதல் கவிதையின் ஒரு பகுதி இங்கே.
உன்னதப்பாட்டு தொகுப்பிலிருந்து ஓர் பகுதி
அவர்
9 என் அன்பே, உன்னை ஒரு மாரிக்கு ஒப்பிடுகிறேன்
பார்வோனின் தேர் குதிரைகளில்.
10 உங்கள் கன்னங்கள் காதணிகளால் அழகாக இருக்கின்றன,
உங்கள் கழுத்து நகைகளால்.
11 நாங்கள் உங்களுக்கு தங்கக் காதணிகளை உருவாக்குவோம்,
வெள்ளியால் பதிக்கப்பட்டுள்ளது.அவள்
12 ராஜா தன் மேஜையில் இருந்தபோது,
என் வாசனை அதன் வாசனை பரவியது.
13 என் அன்பே எனக்கு மைர் ஒரு சாக்கெட்
என் மார்பகங்களுக்கு இடையில் ஓய்வெடுக்கிறது.
14 என் அன்பே எனக்கு மருதாணி மலர்களின் கொத்து
என் கெடியின் திராட்சைத் தோட்டங்களிலிருந்து.அவர்
15 என் அன்பே, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!
ஓ, எவ்வளவு அழகாக இருக்கிறது!
உங்கள் கண்கள் புறாக்கள்.அவள்
16 என் அன்பே, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!
ஓ, எவ்வளவு வசீகரம்!
எங்கள் படுக்கை பழமையானது.அவர்
17 எங்கள் வீட்டின் விட்டங்கள் சிடார்;
எங்கள் ராஃப்டர்கள் ஃபிர்.அவள்
3 காடுகளின் மரங்களுக்கிடையில் ஒரு ஆப்பிள் மரம் போல
உன்னதப்பாட்டு 1:9 – 2:7
இளைஞர்களிடையே என் அன்பானவர்.
அவரது நிழலில் உட்கார்ந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,
அவருடைய பழம் என் சுவைக்கு இனிமையானது.
4 அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லட்டும்,
என் மேல் அவரது பதாகை அன்பாக இருக்கட்டும்.
5 திராட்சையும் கொண்டு என்னை பலப்படுத்துங்கள்,
ஆப்பிள்களால் என்னை புதுப்பிக்கவும்,
நான் அன்பினால் மயங்கிவிட்டேன்.
6 அவருடைய இடது கை என் தலைக்குக் கீழே உள்ளது,
அவருடைய வலது கை என்னைத் தழுவுகிறது.
7 எருசலேமின் மகள்களே, நான் உங்களிடம் கட்டணம் வசூலிக்கிறேன்
விழிகள் மற்றும் புலத்தின் செயல்களால்:
அன்பைத் தூண்டவோ எழுப்பவோ வேண்டாம்
அது விரும்பும் வரை.
3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கவிதைக்குள், சிறந்த பாலிவுட் காதல் படங்களின் காதல்ரசம் அடங்கியுள்ளது. இவர் தன்னுடைய அளவற்ற செல்வத்தினால் 7000 மறுமனையாட்டிகளை தன்னிடம் வைத்திருந்தார். இது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் காதல் மன்னர்களின் மன்மத லீலைகளையும் மிஞ்சின ஒன்று! இவ்வளவு பேரின் காதல் இவரை திருப்திபடுத்தியிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வளவு காதல், இவ்வளவு செல்வம், இவ்வளவு புகழ், இவ்வளவு ஞானம், இவைகளை அனைத்தையும் கொண்டாலும் அவர் முடிக்கிறார்:
வீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.
பிரசங்கி 1:1-14
2 மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
3 சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?
4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
5 சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது.
6 காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
7 எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.
8 எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
9 முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.
10 இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.
11 முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.
13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
11 என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
பிரசங்கி 2:11-23
12 பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.
13 இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன்.
14 ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.
15 மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
16 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.
17 ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
18 சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.
19 அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.
20 ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன்.
21 ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.
22 மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?
23 அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.
இன்பம், செல்வம், வேலை, வளர்ச்சி, காதல் போன்றவைகள் நம்மை முழுமையாக திருப்திப்படுத்தும் என்ற வாக்குறுதியானது ஒரு மாயை என்று அவர் நமக்கு காட்டுகிறார். ஆனால் இன்றும், நம்முடைய மனநிறைவுக்கும், முழுமையான திருப்திக்கு வழிவகுக்கும் இவைகளே என்றே செய்தியை தான் கேட்கிறோம். சாலொமோனின் கவிதையானது இந்த வழிகளில் நமக்கு திருப்தி உண்டாகவில்லை என்று ஏற்கனவே எடுத்துரைள்ளது.
மரணம் மற்றும் ஜிவன், இவ்விரண்டையும் பிரதிபலிக்கும் கவிதையை சாலொமோன் தொடருகிறார்.
19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
பிரசங்கி 3:19-21
20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
21 உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?
2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.
பிரசங்கி 9:2-5
3 எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.
4 இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.
5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
பரிசுத்த நூலாகிய வேதாகமத்தில் ஏன் செல்வம் மற்றும் காதலை பின்தொடர்வதை குறித்த பாடல்கள் இருக்கவேண்டும் – இதற்கும் பரிசுத்தத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லையே? நம்மில் அநேகர் பரிசுத்த நூல்கள் துறவரம், தர்மம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான் நீதிநெறிகளை போதிக்கவேண்டும் என்றே நினைக்கிறோம். வேதத்தில் சாலொமோன் ஏன் மரணத்தை ஒரு முடிவான, எதிர்மறையான ரீதியில் பதிவிடுகிறார்.
உலகம் முழுவதிலும் மிகவும் அதிகமாக பின்தொடரப்படும் பாதையான, சாலொமோன் தெரிந்தெடுத்த பாதை, சுயநலம் சார்ந்த ஒன்றும், அவர் எதை பின்தொடர் விரும்புகிறாரோ அதிலே இன்பத்தையும், அர்த்தத்தையும், கோட்பாடுகளையும் வகுப்பதாகவும் இருந்தது. ஆனால் அந்த முடிவு சாலொமோனுக்கு நன்மையாக அமையவில்லை – அவர் அனுபவித்த திருப்தி தற்காலிகமானதும் மாயையான ஒன்றாகவும் இருந்தது. வேதாகமத்தில் அவர் எழுதின கவிகள் நமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை அடையாளமாக உள்ளது – “இங்கே போகவேண்டாம் – அது உன்னை வஞ்சிக்கும்!”. கிட்டத்தட்ட நாம் எல்லோரும் சாலொமோன் போன அதே பாதையை பின்தொடர விரும்புவதால், அவர் வார்தைகளுக்கு நாம் செவிக்கொடுப்பது புத்தியுள்ள காரியமாக இருக்கும்.
சுவிசேஷம் – சாலொமோனின் பாடல்களுக்கான பதில்கள்
வேதாகமத்தில் மிக அதிகமாக எழுதப்பட்ட்வர் இயேசு கிறிஸ்து (ஈஷு சத்சங்) என்று நினைக்கிறேன். அவரும் வாழ்க்கையை குறித்த அநேக அருள்வாக்கியங்களை அளித்துள்ளார். சொல்லப்போனால், அவர் இப்படியாக சொல்லியிருகிறார்.
“… நான் அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்”
யோவான் 10:10
28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
மத்தேயு 11:28-30
29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30 என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
இயேசு இதை சொல்லும்பொழுதே, வாழ்க்கையின் பொருளற்றதன்மை, நம்பிக்கையில்லா நிலைமை என்ற சாலொமோனின் கூற்றுக்களுக்கான பதிலையும் தருகிறார். ஒருவேளை, ஒருவேளை, சாலொமோன் தெரிந்தெடுத்த பாதையின் முட்டு சந்திற்கான பதில் நமக்கு கிடைக்கிறது. சொல்லபோனால், சுவிசேஷம் என்றாலே “நல்ல செய்தி. சுவிசேஷம் உண்மயில் நல்ல செய்திதானோ? அதற்கு பதில் அளிக்க, நமக்கு சுவிசேஷத்தை பற்றிய ஒரு தகவல்மிகுந்த புரிதல் உண்டாகவேண்டும். மட்டுமல்லாமல், சுவிசேஷத்தின் சான்றுகளை நாம் ஆராய்ந்துபார்க்கவேண்டும் – புத்தியில்லாத விமர்சனம் செய்யாமல், சுவிசேஷத்தை குறித்த ஒரு அறிவுள்ள சிந்தை உண்டாகவேண்டும்.
என்னுடைய கதையில் நான் பகிர்ந்துகொள்வதுபோல், இது தான் நான்மேற்கொண்ட ஒரு பயணம். இந்த இணையதளத்தில் காணப்படும் கட்டுரைகள் எலலாமே நீங்கள் ஆராய்ந்து பார்பதற்கே. இயேசுவின் தேவஅவதாரம் ஒரு நல்ல ஆரம்ப புள்ளி.