விஷ்ணு புராணம் இராஜா வேனாவை பற்றி குறிப்பிடுகிறது. வேனா, ஆரம்பத்தில் ஒரு நல்ல இராஜாவாக இருந்தாலும், தவறான பழக்கங்களால் கெட்டவனாக மாறி எல்லாவித பலிகள் மற்றும் இறைவேண்டுதல்களை அவமதித்தான். தான் விஷ்ணுவிலும் பெரியவன் என்று காட்டிக்கொண்டான். முனிவர்கள் மற்றும் அந்தணர்கள் (பிராமணர்கள்)/ஆசாரியர்கள் அவனிடத்தில், ஒரு இராஜவாக அவன் சரியான அறநெறிகளை மக்களுக்கு அறிவுறுத்தி அதற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டுமேயொழிய அதனை அவமதிக்கலாகாது என்றார்கள். ஆனாலும் அவர்கள் பேச்சை அவன் கேட்பதாக இல்லை. இராஜாவை இனியும் நல்வழிபடுத்தமுடியாது என்ற முடிவுக்கு வந்த ஆசாரியர்கள், அறநெறிகளை கட்டிக்காக்கவேண்டும் என்று எண்ணத்தோடு, ஒரு பொல்லாத இராஜ்ஜியமாக மாறின இராஜா வேனாவை கொன்றுபோட்டார்கள்.
இதனால் ஒரு இராஜா இல்லாத இராஜ்ஜியமாக அது மாறியது. ஆதலால், ஆசாரியர்கள் இராஜாவின் வலது கையை தேய்த்தார்கள். உடனே ஒரு உன்னதமான மனிதன், பிரிது/ப்ருது என்பவன் தோன்றினான். பிரிது இராஜா வேனாவின் வாரிசாக நியமிக்கப்பட்டான். அறநெறிகளை கைகொள்ளும் ஒரு நல்ல மனிதன் இராஜாவாக பதவியேற்பதில் எல்லோருக்கும் கொண்டாட்டம். இவனுடைய பட்டாபிஷேக விழாவிற்கு பிரம்மாவும் வந்தார். பிருதுவின்காலத்தில் இராஜ்ஜியம் அதன் பொற்காலத்தில் பிரவேசித்தது.
இதுபோலவே, எபிரேய முனிவர்களான ஏசாயா மற்றும் எரேமியாவும் அவர்கள் காலத்தில் ஒரு சிக்கலை சந்தித்தார்கள். அவர்களுடைய இஸ்ரவேலின் இராஜாக்கள், ஆதியில் மிகவும் நீதிநெறிகளை கைக்கொண்டாலும் பின்நாட்களில், பத்து கட்டளைகளை. நீதியுள்ளவர்களாக இந்த இராஜவம்சமானது ஒரு மரம் வெட்டப்படுவது சீர்கெட்டுப்போனார்கள். அவர்கள் . ஆனாலும், அவர்கள். போல் வெட்டப்படும் என்று தீர்த்தரிசனம் உரைத்தார்கள் எதிர்காலத்தில் வரப்போகும் ஒரு உன்னத இராஜாவை குறித்தும் தீர்க்கத்தரிசனம் உரைத்தார்கள். விழுந்துபோன மரத்தின் அடிமரத்திலிருந்து எழும்பும் ஒரு கிளை.
வேனாவின் கதை ஆசாரியர்கள் மற்றும் இராஜாக்கள், இவர்கள் இருவரின் பொறுப்புகள் மற்றும் ஆற்றவேண்டிய கடமைகளில் உள்ள தெளிவான பிரிவை எடுத்துரைக்கிறது. ஆசாரியர்களால் இராஜா வேனா நீக்கப்பட்டாலும், ஆட்சிபொறுப்பு என்பது அவர்களுடைய உரிமை அல்லாததால், அவர்கள் அந்த இடத்திற்கு வரவில்லை. ஏசாயா மற்றும் எரேமியாவின் நாட்களிலும், இராஜா மற்றும் ஆசாரியர்களுக்கு இடையில் இதேபோன்ற ஒரு பிரிவு காணப்பட்டது. இக்கதைகளில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பிருதுவின் பிறப்புக்கு பின்பாகவே அவனுக்கு அப்பெயர் வழங்கப்பட்டது; ஆனாலும் எபிரேய முனிவர்கள் வரப்போகும் உன்னத இராஜா பிறப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அவருக்கு பெயரை வழங்கிவிட்டார்கள்.
முதன்முதலாக ஏசாயா வரப்போகும் கிளையை பற்றி எழுதினார். தாவீதின் விழுந்துபோன இராஜவம்சத்திலிருந்து ஞானத்தையும் வல்லமையையும் கொண்டு “இவர்” வருகிறார். இந்த கிளை கர்த்தர் – சிருஷ்டி கர்த்தருடைய எபிரேய நாமம் – மற்றும் நம்முடைய நீதியாக அறியப்படும் என்று எரேமியா வழிமொழிந்தார்.
கிளையை தொடருகிறார் சகரியா
முனிவர் சகரியா கி.மு.520 ஆண்டில், யூதர்கள் தங்களுடைய முதலாவது சிறையிருப்பிலிருந்து திரும்பின் நாட்களில் வாழ்ந்துவந்தார். அவர்கள் திரும்பின் பின்பு, அழிந்துபோன ஆலயத்தை அவர்கள் திரும்பவும் கட்டியெழுப்ப தொடங்கினார்கள். அந்த நாட்களில் இருந்த பிரதான ஆசாரியரின் பெயர் யோசுவா. அவன் ஆலய பூசாரிகளின் வேலையை திரும்பவும் ஆரம்பித்துகொண்டிருந்தான். முனிவரும் தீர்க்கத்தரிசியுமான சகரியா, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவோடு கூட்டுச்சேர்ந்து யூதர்களின் திரும்புதலை வழிநடத்தினார். யோசுவாவை குறித்து தேவன் – சகரியாவின் மூலம் – சொன்ன காரியம் இதுவே
8 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.
சகரியா 3:8-9
9 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த கிளையானது, ஏசாயாவினால் 200 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கி ஏரேமியாவினால் 60 ஆண்டுகள் முன்னர் வரையிலும் தொடரப்பட்டது இராஜவம்சம் முழுவதும் வெட்டப்பட்டிருந்தாலும் சகரியா “கிளையை” தொடருகிறார். ஆலமரத்தை போல் இந்த கிளை செத்த அடிமரத்திலிருந்து உருவாகி வேரூன்றி பரவிற்று. இந்த கிளை இப்போது ‘என் ஊழியக்காரன்’ – தேவனுடைய ஊழியக்காரன் என்று சொல்லப்படுகிறது. ஒருவிதத்தில் கி.மு. 520 ஆண்டில், எருசலேமில் இருந்த பிரதான ஆசாரியனும், சகரியாவின் உடன் ஊழியனுமான யோசுவா வரப்போகும் கிளைக்கு ஒரு அடையாளமாக காணப்படுகிறார்.
ஆனால் எப்படி?
கர்த்தரால் எப்படி ஒரே நாளில் “பாவங்களை” நீக்கக்கூடும்?
கிளை: ஆசாரியன் மற்றும் இராஜாவை ஒன்றாக இணைக்கிறது
நாம் இதனை புரிந்துகொள்ள, எபிரேய வேதங்களின்படி ஆசாரியன் மற்றும் இராஜாவின் பொறுப்புகள் கண்டிப்புடன் பிரிக்கப்பட்டிருந்தன. இராஜாக்கள் ஒருவரும் ஆசாரியராக இருக்கமுடியாது, ஆசாரியர்கள் யாரும் இராஜாவாகவும் இருக்கமுடியாது. ஒரு ஆசாரியனின் தேவனுக்கு பலிகளை பணி, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக இருந்து பொறுப்புணர்வு தன் சிங்காசனத்திலிருந்து நீதியாக செலுத்தவேண்டும். இராஜாவின் ஆட்சிபுரியவேண்டும். இரண்டுமே அவசியமான பணிகள்; ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆனாலும், சகரியா அதனை எதிர்காலத்திற்கு என்று எழுதினார்.
9 பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
சகரியா 6:9-13
10 சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,
11 அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,
12 அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.
13 அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
முந்தைய முன்மாதிரிக்கு எதிராக, சகரியாவின் நாட்களில் வாழ்ந்த பிரதான ஆசாரியன் (யோசுவா) இராஜாவின் கிரிடத்தை ஒரு அடையாளமாக ஒரு கிளையாக அணிந்துகொள்ளவேண்டும். (யோசுவா ‘வரப்போகும் காரியங்களின் அடையாளமாக’ காணப்படுகிறார்). பிரதான ஆசாரியனாகிய யோசுவா, இராஜாவின் கிரீடத்தை சூட்டிக்கொள்ளும்போது, இராஜா மற்றும் ஆசாரியன் இருவருமே ஒரே நபராக மாறக்கூடிய ஒரு எதிர்காலத்தை எதிர்நோக்கினார் – இராஜாவின் சிங்காசனத்தில் ஒரு ஆசாரியன். அதுமட்டுமல்லாமல், ‘யோசுவா’ கிளையின் பெயராக இருக்கும் என்று சகரியா எழுதினார். அதன் பொருள் என்ன?
‘யோசுவா’ மற்றும் ‘இயேசு’ என்ற நாமங்கள்
வேதாகம மொழிப்பெயர்ப்பின் வரலாற்றை நாம் முதலாவது அறிந்துகொள்ளவேண்டும். கி.மு. 250 ஆண்டில் எபிரேய வேதங்கள் கிரேக்கத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டன. அவர்கள் அதனை என்று அழைத்தார்கள். இன்றும் அதிகமாக வாசிக்கப்படும், செப்டஜின்ட் அல்லது எழுபது எழுபதி கிறிஸ்து எப்படி முதன்முதலில் பயனப்படுத்தப்பட்டார் என்பதை நாம் பார்த்தோம் அதே ஆராய்ச்சியை நாம் “யோசுவாவுக்கும்” பயன்படுத்துவோம்.
யோசுவா என்பது மூல எபிரேய பெயரான ‘யெகோசுவா’ என்ற பெயரின் (தமிழ்) ஒலிப்பெயர்ப்பாகும். கால்வட்டம் #1 சகரியா எப்படி கி.மு. 520 ஆண்டில் ‘யோசுவா’ என்ற பெயரை எழுதினார் என்பதை காண்பிக்கிறது. அது ‘யோசுவா’ என்று [தமிழில்] ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது (#1=> #3). எபிரேயத்தில் ‘யெகோசுவா’
என்பது [தமிழில்] ‘யோசுவா’ ஆகும். 70 எபிரேயத்திலிருந்து கிரேக்க மொழிக்கு கி.மு. 250 ஆண்டில் மொழிப்பெயர்க்கப்பட்டபோது ‘யெகோசுவா’ என்ற வார்த்தை ஈசஸ் என்று ஒலிப்பெயர்க்கப்பட்டது (#1=>#2). எபிரேய மொழியில் ‘யெகோசுவா’ என்பதும் கிரேக்கத்தில் ஈசஸ் என்பதும் ஒன்று. கிரேக்கம் [தமிழில்] மொழிபெயர்க்கபடும்போது, ஈசஸ் ‘இயேசு’ என்று ஒலிப்பெயர்க்கப்படுகிறது(#2=>#3). கிரேக்கத்தில் ஈசஸ் என்பது [தமிழில்] இயேசுவும் ஒன்றே.
எபிரேய உச்சரிப்பில் இயேசு யெகோசுவா என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கிரேக்க புதிய ஏற்பாட்டில், அவருடைய நாமம் ‘ஈசஸ் – சரியாக கிரேக்க பழைய ஏற்பாடு 70-ல் காணப்படுவதுபோல் உள்ளது. புதிய ஏற்பாடு கிரேக்கத்திலிருந்து [தமிழ்] மொழிக்கு (#2 => #3) மொழிப்பெயர்க்கப்படும்போது ‘ஈசஸ்’ என்பது நமக்கு பரிச்சயமான ‘இயேசு’ என்று ஒலிப்பெயர்க்கப்படுகிறது. ஆகவே “இயேசு” என்ற நாமம்=”யோசுவா” எனும் பொழுது, ‘இயேசு’ ஒரு இடைப்பட்ட கிரேக்க பதத்தின் வழியாக கடந்துவருகிறது. அதே சமயம் “யோசுவா” நேரடியாக எபிரேயத்திலிருந்து வருகிறது.
முடிவில், கி.மு. 520 ஆண்டில், நசரேயனாகிய இயேசு மற்றும் பிரதான ஆசாரியன் யோசுவா, இவர்கள் இருவருக்கும் தங்கள் மூல எபிரேயத்தில் “யெகோசுவா” என்று அழைக்கப்படும் அதே நாமம் இருந்தது. கிரேக்கத்தில், இருவரும் “ஈசஸ்” என்றே அழைக்கப்பட்டார்கள்.
நசரேனாகிய இயேசு ஒரு கிளை
இப்போது சகரியாவின் தீர்க்கத்தரிசனத்திற்கு ஒரு பொருள் உண்டாகிறது. கி.மு. 520 ஆண்டில் முன்னுரைக்கப்பட்ட காரியம் என்ன்வென்றால், வரப்போகும் அந்த கிளையின் பெயர் ‘இயேசு’ என்றே இருக்கும். அது நேரடியாக நசரேயனாகிய இயேசுவையே குறிக்கும்.
ஈசாய் மற்றும் தாவீது இயேசுவின் முன்னோர்கள் என்பதால் இயேசு “ஈசாயின் அடிமரத்திலிருந்து வருகிறார்”. இயேசுவானவர் தன்னை வேறுபிரித்து காட்டும் அளவிற்கு ஞானத்தையும் தனித்து விளங்கும் அளவுக்கு புரிதலையும் பெற்றிருந்தார். அவருடைய புத்திக்கூர்மை, சமநிலை மற்றும் உட்பார்வை தொடர்ந்து அவருடைய விமர்சகர்கள் மற்றும் பின்பற்றுபவர்களுக்கு வியப்பை அளித்தது. சுவிசேஷங்களில் அற்புதங்களின் மூலமாக தேவன் வெளிப்படுத்தின வல்லமையை நாம் மறுக்கமுடியாது. அதை ஒருவளை நாம் விசுவாசிக்காமல் போகலாம்; ஆனால், நம்மால் அதனை உதாசினப்படுத்தவும் முடியாது. ஒரு நாள் கிளையிலிருந்து வருவார் என்று எசாயா உரைத்த தீர்க்கத்தரிசனத்திற்கு திட்டமாக பொருந்தக்கூடிய விசேஷித்த ஞானமும் வல்லமையும் கொண்ட ஒருவராக இயேசு ஒருவரே திகழ்கிறார்.
நசரேயனாகிய இயேசுவின் வாழ்க்கையை சற்று சிந்தித்து பாருங்கள். நிச்சயமாகவே தன்னை இராஜாவாகவே – ஒரே இராஜா – அவர் உரிமைபாராட்டினார். ‘கிறிஸ்து‘ என்பதன் பொருள் அதுவே. ஆனால் அவர் உலகத்தில் நிறைவேற்றின காரியம் ஆசாரிய ஊழியம். மக்களின் சார்பாக ஆசாரியன் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலிகளை தேவனுக்கு செலுத்துகிறார். இந்த ஒரு காரியத்தில் இயேசுவின் மரணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதுமட்டுமல்ல அது நம் சார்பாக தேவனுக்கு செலுத்தப்படும் பலி காணிக்கையாகவும்.காணப்படுகிறது.
அவருடைய மரணம் ஒரு மனிதனின் பாவம் மற்றும் குற்றவுணர்வுக்கான மீட்பை கொண்டுவருகிறது. தேசத்தின் பாவங்கள் எல்லாம் சகரியா தீர்க்கத்தரிசனத்தில் உரைக்கப்பட்டபடி ஒரே நாளில் நீக்கப்பட்டது – இயேசுவானவர் மரித்து எல்லா பாவங்களுக்கான விலைக்கிரயத்தை செலுத்திமுடித்த அந்த நாள். அவருடைய மரணத்தில், அவர் ஒரு ‘அபிஷேகம்பண்ணப்படவர்/இராஜாவாக’ இருந்தாலும் ஒரு ஆசாரியனாக அவர் நிறைவேற்றக்கூடிய எல்லாவற்றையும் செய்து முடித்தார். அவருடைய உயிர்த்தெழுதலில் மரணத்தின் மேல் அவருக்கு இருந்த வல்லமை மற்றும் அதிகாரத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு இருந்த இரண்டு பொறுப்புணர்வுகளையும் ஒன்றாக இணைத்தார். தாவீது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக “கிறிஸ்து” என்று குறிப்பிட்ட அந்த கிளையே ஆசாரியராக-இராஜாவாக உள்ளார். அவர் பிறப்ப்தற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவருடைய நாமம் முன்னுரைக்கப்பட்டது.
தீர்க்கத்தரிசன ஆதாரம்
இன்றைக்குள்ளது போல், அவருடைய நாளில், தன்னுடைய அதிகாரத்தை கேள்விக்கேட்கும் விமர்சகர்கள் இருந்தார்கள். அவருடைய பதில், அவருடைய வாழ்க்கையை முன்னதாக தரிசத்த அவருக்கு முன்னோடியாக வந்த தீர்க்கத்தரிசிகளை குறிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. தன்னை எதிர்ப்பவர்களுக்கு இயேசு கொடுத்த ஒரு பதில் எப்படிப்பட்டதாயிருந்தது என்பதற்கு ஒரு மாதிரி
… என்னை குறித்து சாட்சிசொல்லும் வேதவாக்கியங்கள் இவைகளே…
John 5:39
இன்னொரு விதத்தில் சொன்னால், எபிரேய வேதங்களில் ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கத்தரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது என்றார். மனித உட்பார்வையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அப்பால் நடக்கும் காரியங்களை கணிப்பது கடினம் என்பதால், வந்துள்ளேன் இயேசு மனுகுலத்திற்கு தான் தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே என்பதை சரிப்பார்க்ககூடிய ஆதாரம் இதுவே என்றார். தனிப்பட்ட விதத்தில் இவைகளை சரிபார்க்க எபிரேய வேதாகம் நம்மிடம் உண்டு.
இதுவரையில் எபிரேய தீர்க்கத்தரிசிகள் தீர்க்கத்தரிசனமாக உரைத்த காரியங்களின் சுருக்கத்தை நாம் இப்போது கவனிக்கலாம். இயேசுவின் வருகை மனிதவரலாற்றின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்பு அபிரகாம் இயேசுவானவர் எங்கே பலியிடப்படுவார் என்பதை முன்னுரைத்தார். அதே சமயம் பஸ்கா ஆண்டின் எந்த நாளில் நடக்கும் என்பதை முன்னறிவித்தது.
முடிவுரை: அனைவருக்கும் அருளப்படும் ஜீவ விருட்சம்
ஒரு அழிவில்லாத, நீடித்திருக்கக்கூடிய விருட்சத்தின் ரூபமானது, ஒரு ஆலமரத்தை போல், வேதாகமத்தின் கடைசி அதிகாரம் வரையில் சென்று, தொடர்ந்து வருங்காலத்தை முன்னோக்கி, அடுத்த அண்டசராசரம், “ஜீவ தண்ணீருள்ள” நதியினிடத்திற்கு வரவும்
2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
வெளிப்படுத்தல் 22:2
பூமியிலுள்ள அனைத்து தேசங்களுக்கும், உங்களுக்கும், ஜீவ விருட்சத்தினால் உண்டாகும் மரணத்திலிருந்து விடுதலை மற்றும் செழிப்பை பெற அழைப்புவிடுக்கப்படுகிறது – உண்மையில் அது ஒரு அழிவற்ற ஆலமரம். ஆனாலும் எபிரேய தீர்க்கத்தரிசிகள் கிளை வெட்டப்பட்டாலொழிய இது நடக்காது என்று தீர்க்கத்தரிசனம் உரைத்துள்ளார்கள், அதனை நாம் அடுத்து பார்ப்போம்.