Skip to content

மிகவும் தனித்துவமான புத்தகம்: அதன் செய்தி என்ன?

  • by

பல நூற்றாண்டுகளாக, புத்திசாலித்தனமும் படைப்பாற்றலும் கொண்ட எழுத்தாளர்கள் பல சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளனர். பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து, பல மொழிகளில், பல வகைகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் தலைமுறை தலைமுறையாக மனிதகுலத்தை வளப்படுத்தி, தகவல் வழங்கி, மகிழ்வித்துள்ளன.

இந்த எல்லா சிறந்த புத்தகங்களுக்கிடையில், பைபிள் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடிக்கிறது. பல வழிகளில் இது மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது.

அதன் பெயர் – புத்தகம்

‘பைபிள்’ என்பதின் நேரடி அர்த்தம் “புத்தகம்”. வரலாற்றில் பக்கங்களுடன் புத்தக வடிவில் வெளியிடப்பட்ட முதல் தொகுப்பாக பைபிள் கருதப்படுகிறது. அதற்கு முன்பு, மக்கள் “புத்தகங்களை” சுருள்களாக வைத்திருந்தனர். சுருள்களிலிருந்து பிணைக்கப்பட்ட பக்கங்களுக்கு அமைந்த மாற்றம், பெரிய தொகுப்புகளை சிறிய மற்றும் நீடித்த வடிவத்தில் வைத்திருக்க அனுமதித்தது. இந்த பிணைக்கப்பட்ட பக்க வடிவம் சமுதாயங்களால் விரைவில் ஏற்கப்பட்டதால், கல்வியறிவை பரவச் செய்யும் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.

பல புத்தகஙகளும் ஆசிரியர்களும்

பைபிள் என்பது பல டஜன் ஆசிரியர்களால் எழுதப்பட்ட 66 புத்தகங்களின் தொகுப்பாகும். எனவே, பைபிளை ஒரு புத்தகமாக நினைப்பதைவிட, ஒரு நூலகமாகக் கருதுவது மிகவும் துல்லியமானதாகும்.

இந்த ஆசிரியர்கள் வெவ்வேறு நாடுகள், மொழிகள் மற்றும் சமூக நிலைகளில் இருந்தவர்கள் — பிரதமர்கள், மன்னர்கள், மூத்த அரசு அதிகாரிகள் முதல் மேய்ப்பர்கள், ரபீக்கள், மீனவர்கள் வரை. இருந்தாலும், இவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒரே கருப்பொருளைச் சுற்றியே ஒற்றுமையுடன் அமைந்துள்ளன — இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் பொருளாதாரம் போன்ற சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், அந்தத் தலைப்பில் முன்னணி எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு முரண்படுகிறார்கள் என்பதைக் காணலாம். ஆனால் பைபிளில் உள்ள நூல்கள் — அவற்றை எழுதியவர்கள் மாறுபட்ட பின்னணி, மொழி, சமூகநிலை கொண்டவர்களாக இருந்தாலும் — ஒரே உள்நடப்பு கருப்பொருளை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

மிகப் பழமையான புத்தகம்

இந்தப் புத்தகங்கள் அனைத்தும், ஆரம்பம் முதல் முடிவு வரை எழுதப்பட, 1500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் எடுத்தது. உண்மையில், பைபிளின் முதல் ஆசிரியர்கள் தங்கள் நூல்களை எழுதத் தொடங்கிய காலம், உலகின் பிற ஆரம்பகால எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துப் பணியைத் தொடங்குவதற்கும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பானது.

பைபிளின் காலஅளவு, அதன் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் ஒரு டைம்லைனில் காட்டப்பட்டுள்ளது. ‘வரலாற்றின் தந்தை’ எவ்வளவு காலத்திற்குப் பிறகு வருகிறார் என்பதையும், மற்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் நபர்களையும் கவனியுங்கள். இது பைபிள் மிகவும் பழமையானதென்பதை வலியுறுத்துகிறது..

அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம்

பைபிள் உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமாகும். அதில் உள்ள குறைந்தபட்சம் ஒரு புத்தகம் 3,500 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (மொத்தம் சுமார் 7,000 மொழிகளில்).

பல்வேறு எழுத்து வகைகள்

பைபிளில் உள்ள புத்தகங்கள் பல்வேறு எழுத்து வகைகளை உள்ளடக்கியவை. வரலாறு, கவிதை, தத்துவம் மற்றும் தீர்க்கதரிசனங்கள் போன்ற பல்வேறு இலக்கிய வகைகள் இதில் ஒன்றிணைந்துள்ளன. இந்த புத்தகங்கள் பண்டைய கால நிகழ்வுகளையும் வரலாற்றின் முடிவை நோக்கிய எதிர்காலத்தையும் ஆழமாகப் பிரதிபலிக்கின்றன.

… ஆனால் அதன் செய்தி உடனடியாகத் தெரியவில்லை.

இந்தப் புத்தகம் ஒரு நீண்டதும் சிக்கலான காவியக் கதையையும் கொண்டிருக்கிறது. இதன் அமைப்பு மிகவும் பழமையானது; இதன் கருப்பொருள் ஆழமானது; மேலும் அதன் நோக்கம் மிகவும் விரிவானது. அதனால், இதன் செய்தி பலருக்குத் தெளிவாக தெரியாது. பைபிள் பரந்ததொரு ஆவணமாக இருந்தாலும், அது மிகத் தனிப்பட்ட அழைப்பை மையமாகக் கொண்டுள்ளது என்பதைக் குறைவாகவே மக்கள் உணருகிறார்கள். பைபிள் கதையைப் புரிந்து கொள்ள வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து அணுகலாம். கீழே உள்ள பட்டியல், இந்த வலைத்தளத்தில் உள்ள சில கண்ணோட்டங்களைக் காட்டுகிறது:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *