நாம் கடைசியாக பார்த்தது என்னவெனில் வேத புஸ்தகம் (வேதாகமம்) எப்படி நாம் சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய மூல ரூபத்திலிருந்து கெட்டுப்போனோம் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. இந்த காரியத்தை இன்னும் தெளிவாக பார்க்க உதவிசெய்த ஒரு படம் சிறுதேவதைகள் (எல்ஃப்ஸ்) என்ற நிலையிலிருந்து மாறின பூமியின் நடுவில் இருக்கும் ஓர்க்ஸ் ஆனால், இது எப்படி நடந்தது?
பாவத்தின் தோற்றம்
பரிசுத்த வேதாகமத்தின் ஆதியாகமம் என்ற புத்தகத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது. தேவனுடைய ரூபத்தின்படி உண்டாக்கப்பட்ட முதல் மனிதபிறவிகள் சோதிக்கப்பட்டனர். சர்பத்துடன் உண்டான ஒரு சம்பாஷனையை அது பதிவுசெய்கிறது. உலகமெங்கிலும் சர்ப்பம் சாத்தானாக அறியப்படுகிறான் – தேவனுக்கு விரோதமான ஒரு ஆவிக்குரிய எதிரி. வேதாகமம் முழுவதும் பிசாசானவன் வேறொரு நபரின் மூலம் பேசி நம்மை சோதிக்கிறான். இந்த சம்பவத்தில் அவன் சர்பத்தை கொண்டு பேசினான். இது இப்படியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தேவனாகிய கர்த்தரால் படைக்கப்பட்ட விலங்குகளிலேயே பாம்பானது மிகவும் தந்திர குணமுள்ளதாயிருந்தது. அது அவளிடம், “பெண்ணே! தேவன் உங்களிடம் இத்தோட்டத்தில் உள்ள மரத்தின் பழங்களை உண்ணக்கூடாது என்று உண்மையில் கூறினாரா?” என்று கேட்டது.
2 அந்தப் பெண்ணும் பாம்புக்கு, “இல்லை! தேவன் அவ்வாறு சொல்லவில்லை. நாங்கள் இத்தோட்டத்தில் எல்லா மரங்களின் கனிகளையும் உண்ணலாம். 3 ஆனால் ‘இத்தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியை உண்ணக் கூடாது. அம்மரத்தைத் தொடவும் கூடாது. இதை மீறினால் மரணமடைவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” எனப் பதில் சொன்னாள்.
4 ஆனால் பாம்போ அவளிடம், “நீங்கள் மரிக்கமாட்டீர்கள். 5 தேவனுக்குத் தெரியும், நீங்கள் அதன் கனியை உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை பற்றிய அறிவைப் பெறுவீர்கள். நீங்களும் தேவனைப்போன்று ஆவீர்கள்” என்றது.
6 அந்தப் பெண் அந்த மரம் அழகாக இருப்பதைக் கண்டாள். அதன் கனியும் உண்பதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்தாள். அப்பழம் தன்னை அறிவாளியாக்கும் என்பதை எண்ணி அவள் பரவசமடைந்தாள். எனவே அவள் அம்மரத்தின் கனியை எடுத்து உண்டதுடன், அவள் தன் கணவனுக்கும் அதைக் கொடுத்தாள். அவனும் அதை உண்டான்.
ஆதியாகமம் 3:1-6
அவர்களுடைய தெரிவின் வேரில் இருந்த சோதனை என்னவென்றால், அவர்கள் “தேவனை போல் மாறுவார்கள்”. என்பதே. இந்த கட்டம் வரையில் அவர்கள் தேவனை எல்லாவற்றிற்காகவும் நம்பி, அவருடைய வார்த்தையின்படியே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுதோ, சகலத்தையும் பின்னாக விட்டு, தங்களையே நம்பி தங்களுடைய வார்த்தையை எல்லாவற்றிற்கும் எடுத்து “தேவனைப் போல்” மாறக்கூடிய ஒரு தெரிந்தெடுத்தல் அவர்களுக்கு உண்டானது. அவர்கள் தங்களுக்கு தாங்களே தேவர்களாகவும், தங்களுடைய கப்பலுக்கு தாங்களே மாலுமிகளாகவும், தங்களுடைய முடிவுக்கு தாங்களே அதிகாரிகளாகவும், சுயாட்சி உடையவர்களும், தங்களுக்கு மட்டுமே பதிலளிக்ககூடியவர்களாகவும் இருப்பர்.
தேவனுக்கு விரோதமாக அவர்கள் செயல்பட்ட காரணத்தினால், அவர்களுக்குள் இருந்த ஒரு காரியம மாறிற்று. இந்த பகுதி நமக்கு திரும்ப சொல்லுவது போல், அவர்கள் வெட்கத்தை உணர்ந்தார்கள், அதனை மூட விரும்பினார்கள். சொல்லப்போனால், அவனுடைய கீழ்ப்படியாமையை தேவன் விசாரித்தபோது, ஆதாம் ஏவாளை (எவாளை படைத்தை தேவனையும்) குற்றம்சாட்டினான். அவள் தன் பங்கிற்கு சர்ப்பத்தை குற்றம்சாட்டினாள். பொறுப்பை ஒருவரும் ஏற்கவில்லை.
ஆதாமின் மீறுதலினால் உண்டான விளைவுகள்
அதே உள்ளான சுபாவத்தை நாம் சுதந்தரித்த காரணத்தினால், அந்த நாளில் ஆரம்பித்த காரியம் இன்று வரையில் தொடருகிறது. அதனால் தான் நாம் ஆதாமை போல் நடந்துகொள்கிறோம் – அவனுடைய சுபாவத்தை சுதந்தரித்த காரணத்தினால். சிலர் வேதத்தை தவறாக புரிந்துகொண்டு ஆதாமின் மீறுதலுக்காக நாம் பழிசொல்லப்படுகிறோம். உண்மையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆதாம் மட்டுமே. ஆனாலும், நாம் அவன் செய்த பாவத்தினால் உண்டான பின்விளைவுகளில் வாழ்கிறோம். அதனை நாம் சந்ததியின் பின்னணியில் சிந்திக்கலாம். பிள்ளைகள் பெற்றோரின் – நல்லதும் கெட்டதுமான – குணாதிசயங்களை, அவர்களுடைய மரபணுக்களை சுதந்தரிக்கிறார்கள். ஆதாமின் இந்த கீழ்ப்படியாமையின் குணத்தை நாம் உள்ளான ரீதியில், அதனைக் குறித்த உணர்வு இல்லாமலேயே சுதந்தரித்துள்ளோம். ஆனாலும் நாம் வேண்டுமென்றே அவர் தொடங்கின இந்த எழுச்சியை தொடருகிறோம். நாம் உலகத்தின் தேவனாக இருக்க ஒருவேளை விரும்பாது போகலாம். நம்முடைய சொந்த சூழ்நிலைகளில் நாமே நம்முடைய தெய்வங்களாக, தெய்வத்தை சாராதவர்களாக இருக்க விரும்புகிறோம்..
பாவத்தின் விளைவுகள் இன்று மிகவும் வெளியரங்கமாக உள்ளது
இதுவே நாம் மிக சாதரணமாக எடுத்துக்கொள்ளும் மனித வாழ்க்கையின் மிகுதியை நமக்கு காண்பிக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே மக்களுக்கு தங்கள் கதவுகளுக்கு பூட்டும், காவல்துறையின் உதவியும், வழக்கறிஞர்கள் மற்றும் வங்கி சேவைகளுக்கு இரகசிய எண் பூட்டு வசதி எல்லாம் அவசியப்படுகிறது. ஏனெனில், நம்முடைய இயல் நிலையில் நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் திருடுகிறோம். இதன் நிமித்தமாகவே சாம்ராஜ்யங்களும் சமுதாயங்களும் ஒரு கட்டத்தில் சிதைவையும், சீரழிவையும் சந்திக்கின்றன – காரணம் என்னவெனில், இந்த சாம்ராஜ்யத்தில் உள்ள குடிமக்கள் யாவருக்குள்ளும் சிதைந்துபோகும் பழக்கம் உண்டு. ஆதலால் தான், எல்லாவிதமான அரசாங்கம் மற்றும் பொருளாதார முறைமைகளை எல்லாம் முயற்சிசெய்த பிறகு, அதில் சில மற்றவைகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டாலும், ஒவ்வொரு அரசியம் மற்றும் பொருளாதார முறைமையும் ஒரு குறிபிட்ட கட்டத்தில் தானாக இடிந்துவிழும். ஏனெனில் இந்த சித்தாந்தங்களை கடைபிடித்து வாழும் மக்களுக்குள் இருக்கும் சில பழ்க்கவழக்கங்கள் ஒட்டுமொத்த முறைமையை கீழே தள்ள்ககூடிய ஒன்று. ஆகையினால் தான், நம்முடைய தலைமுறை, இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகவும் படித்த ஒன்றாக இருந்தாலும்கூட , நமக்கு இன்னும் இந்த பிரச்சனைகள் உண்டு. காரணம் என்னவெனில், இது நம்முடைய கல்வியின் அளவை காட்டிலும் மேலும் ஆழமாக செல்லுவதால். இந்த ஒரு காரணத்தினாலேயே, பிரதாசன மந்திரத்தின் ஜெபத்தோடுகூட நம்மை நாமே அதிகமாய் அடையாளப் படுத்துகிறோம் – காரணம் அது நம்மை நன்றாக விளக்குகிறது.
பாவம் – இலக்கை தவறுவது
இதனால் தான் எந்த ஒரு மதமும் சமுதாயத்தை குறித்த எந்த ஒரு தரிசனத்தையும் முழுவதுமாக கொண்டுவரவில்லை – நாத்திகர்கள் உட்பட (ஸ்டாலினின் ஐக்கிய சோவியத், மாவோவின் சீனா, போல் போட்டின் கம்போடியா) -ஏனென்றால் நாம் யாராக இருக்கிறோமோ? அதனை குறித்த ஒரு காரியமே நம்முடைய தரிசனத்தை தவறவிட செய்கிறது. சொல்லப்போனால், ‘தவறுதல்’ என்ற அந்த வார்தை நம்முடைய சூழ்நிலையை விவரிக்கிறது. வேதவசனம் ஒன்று இந்த காரியத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள உதவிடும். அது சொல்லுவது என்ன்வென்றால்,
16 இடதுகை பழக்கமுள்ள 700 பயிற்சி பெற்ற வீரர்களும் இருந்தனர். அவர்கள் கவண் கல்லை மிகவும் திறமையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள். ஒரு மயிரிழையும் தவறாது. அவர்கள் கவண் கல்லைப் பயன்படுத்துவதற்கு அறிந்திருந்தனர்.
நியாயாதிபதிகள் 20:16
இந்த வசனம் கவன்கல்லை பயன்படுத்து தங்கள் இலக்கை ஒருபோதும் தவறவிடாத போர்வீரரை காண்பிக்கிறது. இதிலே “தப்பாதபடிக்கு” என்ற வார்த்தை மூல எபிரேயத்தில் தப்புதல் יַחֲטִֽא׃. என்று உள்ளது. அது எபிரேய வார்த்தை வேதாகமம் முழுவதிலும் அதிகமாய் பாவம் என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, இதே எபிரேய வார்த்தை யோசேப்பு எகிப்தில் ஒர் அடிமையாக விற்கப்பட்டு, தன் எஜமானனின் மனைவியுடன், அவள் இவனை வ்ருந்திகேட்டுக்கொண்டபோதிலும், விபச்சாரம் புரியமாட்டேன் என்று சொல்லும்போது ‘பாவம்’ என்று வருகிறது. அவன் அவளிடம் சொன்னது
9 என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான்.
ஆதியாகமம் 39:9
பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்ட பின்பு அது சொல்கிறது
And just after the giving of the Ten Commandments it says:
20 மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள்! கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதினிமித்தமாக நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்கள்” என்றான்.
யாத்திராகமம் 20:20
இந்த இரண்டு இடங்களிலும் அதே எபிரேய வார்த்தை יַחֲטִֽא׃ பாவம் என்று மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளது. இலக்கை நோக்கி கவண்களை எரியும் போர்வீரர்களின் விஷயத்தில் “தப்பாதபடிக்கு” என்று சொல்வதற்கு இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது ‘பாவம்’ என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளக்கூடிய ஓர் படத்தை நமக்கு எடுத்துச் சொல்லுகிறது. போர்வீரன் ஒரு கல்லை எடுத்து கவணில் வைத்து இலக்கை நோக்கி எறிகிறான். அது குறியை தப்புமானால், அதன் நோக்கத்தை இழந்துவிட்டது என்று ஆகும். அதே போல், நாம் தேவனுடைய ரூபத்தின்படியே உண்டாக்கப்பட்டுள்ளோம் . ஆதலால், நாம் அவரோடு எப்படி தொடர்புகொள்கிறோம், எப்படி நாம் பிறரை நடத்துகிறோம் என்பது முக்கியம் . ‘பாவம்’ செய்வது என்றால் நமக்கென்று நியமிக்கப்பட்ட இந்த நோக்கத்தை, இந்த இலக்கினை தவறவிடுவதும், நாம் நம்முடைய முறைமைகளில், நம்முடைய மதகோட்பாடுகளில் நம் விருப்பத்தின்படி நடக்க விரும்புவதுமாகும்.
‘பாவத்தின்’ கெட்ட செய்தி – சத்தியம் அல்ல விருப்பம்
ஆனாலும் எல்லா மதங்கள், மொழிகள் மற்றும் தேசங்களை கடந்து – நாம் எல்லோரும் இலக்கினை தப்பவிடுகிறோம் என்ற – இந்த உபதேசம் ஒரு முக்கியமான கேள்வியினை எழுப்புகிறது. இதைப் பற்றி தேவன் என்னதான் செய்துகொண்டிருந்தார்? தேவனுடைய பிரதிபலிப்பை நாம் நம்முடைய அடுத்த பதிவில் – வரப்போகும் மீட்பரை குறித்த முதல் வாக்குத்தத்தத்தை கவனிக்கையில் – நமக்காக அனுப்பப்படும் புருஷாவை குறித்து நோக்கும் போது – நாம் பார்போம்.’பாவத்தை’ குறித்த கெட்ட செய்தி – இது சத்தியத்தை குறித்தது நம்முடையவிருப்பத்தை சார்ந்ததன்று
சீர்குலைந்த மற்றும் இலக்கை தவறவிட்ட மனுகுலத்தின் இந்த காட்சி
அவ்வளவு அருமையானதன்று, நல்லுண்ர்வை ஊட்டுவதுமன்று,
சாத்தியக்கூறானதுமன்று. ஆண்டாண்டு காலமாய், இந்த குறிப்பிட்ட
போதனைக்கு விரோதமாக மக்கள் பலமாய் எதிர்த்து நிற்பதை நான்
கண்டதுண்டு. கனடா நாட்டில் இருக்கும் பல்கலைக் கழகத்தில் ஒரு
குறிப்பிட்ட மாணவன் கோபத்துடன் என்னை பார்த்து , “நான் உன்னை
நம்பவில்லை. ஏனென்றால், நீ சொன்னது எனக்கு பிடிக்கவில்லை”
என்றான். ஒருவேளை நமக்கு அது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதில்நாம் கவனம் செலுத்துவோமானால், நாம் குறிப்பினை தவறவிடுவோம். ஒருகாரியத்தை விரும்புவதற்கும் அது உண்மையா இல்லையா என்றவிவரத்திற்கு என்ன சம்பந்தம்? எனக்கு வரிகள், யுத்தங்கள், எயிட்ஸ் வியாதிமற்றும் பூமி அதிர்ச்சி எல்லாம் பிடிக்காது – யாருக்குமே அது பிடிக்காது -அதனாலேயே அது அவர்களை விட்டுப்போய்விடாது, நாமும் அதனைஉதாசினப்படுத்தமுடியாது.
இந்த சமுதாயத்தில் நம்மை பாதுகாத்து கொள்வதற்கு நாம் உண்டாக்கியுள்ளசட்டம், காவல்துறை, பூட்டுகள், சாவிகள், பாதுகாப்பு போன்ற முறைகள் ஏதோ ஒன்று தவறு என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது கும்பமேளாபோன்ற விழாக்கள் நம்முடைய பாவங்களை கழுவுவதற்கு லட்சக்கணக்கானமக்களை கொண்டுவருகிறது என்பதே நாம் ஏதோ ஒரு வகையில் இலக்கைதவறவிட்டோம்” என்கின்ற உள்ளான உணர்வுடையவர்களாகஇருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. பரலோகம் செல்வதற்குபலிசெலுத்தவேண்டும் என்கின்ற தார்பரியம் எல்லா மதங்களிலும்காண்ப்படுவதே நமக்குள்ளே ஏதோ ஒன்று சரியில்லை என்பதைசுட்டிக்காட்டும் விடயமாக உள்ளது. குறைந்த அளவில், இந்த உபதேசத்தை நாம் சரிசம அளவில் கையாளவேண்டி உள்ளது.ஆனாலும் எல்லா மதங்கள், மொழிகள் மற்றும் தேசங்களை கடந்துநாம்எல்லோரும் இலக்கினை தப்பவிடுகிறோம் என்ற – இந்தஉபதேசம் ஒருமுக்கியமான கேள்வியினை எழுப்புகிறது. இதைப் பற்றி தேவன் என்னதான்செய்துகொண்டிருந்தார்? தேவனுடைய பிரதிபலிப்பை நாம் நம்முடையஅடுத்த பதிவில் – வரப்போகும் மீட்பரை குறித்த முதல் வாக்குத்தத்தத்தைகவனிக்கையில் – நமக்காக அனுப்பப்படும் புருஷாவை குறித்துநோக்கும்போது – நாம் பார்போம்.