Skip to content

மனிதகுலம் எவ்வாறு தொடர்ந்தது – மனு (அல்லது நோவா) கதையிலிருந்து படிப்பினைகள்

  • by

முன்னதாக மனித வரலாற்றின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்ட மோட்சத்தின் வாக்குறுதியைப் பார்த்தோம். அதை விட்டு நம்மை திசைதிருப்புகிற ஏதோ ஒன்று இருப்பதையும் நாங்கள் கவனித்தோம், அது எங்கள் நல்நடக்கையின் இலக்கை விட்டு வழிவிலகி, நம்முடைய இயல்புக்கு உள்ளே ஆழமாக செல்கிறது.  தேவனால் (பிரஜாபதி) உருவாக்கப்பட்ட எங்கள் மூல ருபம் சிதைக்கப்பட்டுள்ளது. பற்பல சடங்குகள், சுத்திகரிப்பின் காரியங்கள் மற்றும் வேண்டுதல்களின் மூலம் நாம் கடுமையாக முயற்சித்தாலும், நம்முடைய இயலாமையும், நாம் சரியாக அடைய முடியாத சுத்திகரிப்புக்கான தேவையை உள்ளுணர்வாக உணர வைக்கிறது. சரியான ஒருமைப்பாட்டுடன் வாழ முயற்சிக்கும் இந்த ‘மேல்நோக்கிய’ போராட்டத்திலே தொடர்ந்து செல்ல வேண்டியிருக்கும்.

எந்தவித சன்மார்க்க கட்டுப்பாடுகளுமின்றி சீர்கேடுகள்  பெருகுமானால், காரியங்கள் சீக்கிரத்தில் அழிவையை சந்திக்கும். இது மனித வரலாற்றின் ஆரம்பத்தில் நடந்தது. இது எப்படி நடந்தது என்று வேதாகமத்தின் ஆரம்ப அத்தியாயங்கள் (வேத புஸ்தகம்) நமக்குக் கூறுகின்றன. இது போன்ற ஒரு காரியம் சதாபத பிராமணத்தில் உள்ளது, இதில் மனிதகுலத்தின் மனு என்ற மூதாதையர் – மனிதர்களின் தவறின் காரணமாக வந்த நியாயத்தீர்ப்பான ஜலப்பிரளயத்திலிருந்து, ஒரு பெரிய படகில் தஞ்சம் அடைவதன் மூலம் தப்பி பிழைக்கச்செய்தது. இன்று உயிருடன் இருக்கும் மனிதர்கள் அனைவரும் அவரிடமிருந்து வந்தவர்கள் என்று வேதாகமம் (வேத புஸ்தகம்) மற்றும் சமஸ்கிருத வேதங்கள் இரண்டும் கூறுகின்றன.

பண்டைய மனு – அதிலிருந்ஹ்டு தான் நாம் ‘மனிதன்’ என்ற வார்த்தையை பெறுகிறோம்

‘மனிதன்’ என்ற ஆங்கிலச் சொல் ஆரம்பகால ஜெர்மானிய மொழியிலிருந்து வந்தது. இயேசு கிறிஸ்துவின் (யேசு சத்சங்) காலத்தில் வாழ்ந்த ரோமானிய வரலாற்றாசிரியரான டசிட்டஸ், ஜெர்மானியா என்ற ஜெர்மன் மக்களின் வரலாற்றைப் பற்றிய ஒரு நூலை எழுதினார். அதில் அவர் கூறுகிறார்

அவர்களின் பழைய நடன் பாட்டுகளில் (அது அவைகளின் வரலாறு) பூமியிலிருந்து முளைத்த  தெய்வமான டூஸ்டோவையும், அவரது மகன் மன்னஸையும் தேசப்பிதாக்களாக, தேசத்தின் நிறுவனர்களாக கொண்டாடுகிறார்கள். மன்னஸுக்கு மூன்று மகன்களை உண்டாம். அவர்களுடைய பெயர்களில் அவ்வளவு மக்களும் அழைக்கப்படுகின்றனர்

டசிடஸ். ஜெர்மானியா சி 2, எழுதப்பட்ட ca 100 AD

இந்த பண்டைய ஜெர்மானிய வார்த்தையான மன்னஸ்புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய “மனுஹூ” ( சமஸ்கிருத மனுஹு, அவெஸ்தான் மனு-,) என்பதிலிருந்து வந்தது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆக, ‘மனிதன்’ என்ற  சொல் மனுவிலிருந்து உருவான ஒன்று என்று காண்கிறோம். அதுமட்டுமல்ல, வேதாகமம் (வேத புஸ்தகன்) மற்றும் சதாபத பிராமணர் இருவருமே மனிதனாகிய இந்த மனு தங்கள் மூதாதையர் என்று குறிப்பிடுகின்றனர்!  இந்த நபரை நாம் சதாபத பிராமண நூலின் சுருக்க உரையின் பார்வைலிருந்து கவனிப்போம்.  இந்த தொகுப்பை குறித்த, ஒருசில மாறுபட்ட அமசங்கள் அடங்கிய விளக்கவுரைகள் இருப்பதால், பொதுவான குறிப்புகளை மட்டுமே விவரிக்கிறேன்

சமஸ்கிருத வேதங்களில் மனுவை குறித்த தொகுப்பு

வேதங்களில் மனு என்பவன் சத்தியத்தை நாடிடும் ஒரு நீதியுள்ள புருஷன். மனு முற்றிலும் நேர்மையானவன் என்பதால், அவன் ஆரம்பத்தில் சத்யவ்ரதா (“சத்தியதோடு ஒப்பந்தம் பண்ணினவன்”) என்று அழைக்கப்பட்டான்.

சதாபத பிராமணத்தின்படி (சதாபத பிராமணத்தில் படிக்க இங்கே அழுத்தவும்), ஒரு அவதாரம் மனுவை வரப்போகும் ஜலப்பிரளயத்தை குறித்து எச்சரித்தது. அவர் ஒரு ஆற்றில் கைகளைக் கழுவும்போது இந்த அவதாரம் ஆரம்பத்தில் ஷாஃபாரியை (ஒரு சிறிய மீன்) போல் தோன்றியது. அந்த சிறு மீன் தன்னை காப்பாற்றும்படி மனுவிடம் கேட்டது. மீனின் மீது மனதுருகின அவன், அதனை ஒரு தண்ணீர் குடுவையில் வைத்தான். அது வளர்ந்து பெரிதாகிக்கொண்டே போனதால் அதனை ஒரு குடத்தில் வைத்தான்.  அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போக, அதனை எடுத்து ஒரு கிணற்றில் விட்டான். இப்போது கிணறும் வளர்ந்தகொண்டேபோன அந்த மீனுக்கு போதுமானதாக இல்லை.  மனு மீனை எடுத்து ஒரு பெரிய  குளத்தில் (நீர்த்தேக்கம்) வைத்தான். அந்த குளம் நிலத்தின் மேற்பரப்புக்கு இரண்டு யோஜனாக்கள் (25 கி.மீ) உயரமும், அதே அளவு நீளமும், ஒரு யோஜனா (13 கி.மீ) அகலமும் இருந்தது. மீன் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போக மனு அதை ஒரு ஆற்றில் விடுகிறான்.  இப்போது அது ஆறின் அளவைக் காட்டிலும் அதிகமாய வளர்ந்தததால், அந்த மீனை எடுத்து கடலில் வைக்கிறான்.  இப்போது இந்த மீன் கிட்டத்தட்ட அந்த   பரந்த கடலின் பரப்பளவையே நிரப்பிவிட்டது. 

அப்போது தான், அந்த அவதாரம் மனுவிடன் ஒட்டுமொத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு ஜலபிரளயம் எனும் வெள்ளம் வரப்போகிறது அது மிக விரைவில் வரக்கூடும்  என்று அறிவிக்கிறார்.   இப்போது  மனு ஒரு பெரிய படகை கட்டுகிறார்.  அதிலே தன் குடும்பத்தினர்,  ஜலப்பிரளயத்திற்கு பின் பூமியின் நீர்ப்பரப்பின்மேல் ஜலம் வற்றி உலகத்தின் மறுசிருஷ்டிப்புக்கு உதவக்கூடிய பல்வேறு விதைகள், பூண்டுகள், விலங்குகள் போன்றவைகளை பாதுகாக்கும் அளவிற்கு அதனை அமைக்கிறார். ஜலப்பிரளயத்தின் போது மனு படகினை, இன்னொரு அவதாரமான ஒரு மச்சத்தின் கொம்போடு கட்டிவைக்கிறார்.  ஜலம் வடிந்தபின் அந்த படகு ஒரு மலையின் உச்சியில் நிலைகொண்டிருந்தது. பின்னர் அவர் மலையிலிருந்து இறங்கி, விடுதலை பெற்றதற்கு நன்றிசெலுத்தும் வகையில் பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினார். இன்று பூமியிலுள்ள எல்லா மக்களும் அவரிடமிருந்து வந்தவர்களே.

வேதாகமத்தில் நோவாவின் கதை (வேத புஸ்தகம்)

வேதாகமத்தில் உள்ள கதை (வேத புஸ்தகம்) இதே நிகழ்வை விவரிக்கிறது, ஆனால் இந்த நிகழ்வில் மனுவை ‘நோவா’ என்று அழைக்படுகிறார். நோவாவின் கதையையும் உலகளாவிய ஜலப்பிரளயத்தையும் பரிசுத்த வேதாகமத்தில் விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். சமஸ்கிருத வேதம் மற்றும் பரிசுத்த வேதாகமம் மாத்திரமல்ல, இந்த வரலாற்று நிகழ்வின் நினைவுகள் பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் வரலாறுகளில் பாதுகாக்கப்படுகின்றன. உலகம் வண்டல் பாறையால் மூடப்பட்டிருக்கிறது, இது ஒரு ஜலபிரளையத்தின் போது உண்டாகும். ஆகையால், இந்த ஜலப்பிரளயத்தை குறித்த சரீரப்பிரகாரமான, மானுடவியல் ரீதியிலான ஆதாரங்களும் எங்களிடம் உண்டு. ஆனால் இன்று இந்த கதையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய பாடம் என்ன?

இரக்கத்தை பெறுதலும் இரக்கத்தை தவறவிடுதலும்

தேவன்  குற்றத்தை (பாவத்தை) நியாயம்தீர்க்கிறாரா என்று நாம் கேட்கும்போது, குறிப்பாக நம்முடைய சொந்த பாவம் நியாயம்தீர்க்கப்படுமா இல்லையா என்று கேட்கும்போது, பதில் பொதுவாக இப்படித் தான் இருக்கும், “நியாயத்தீர்ப்பை குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் தேவன் மிகுந்த இரக்கமும் கனிவும் உள்ளவர், அவர் என்ன்னை உண்மையில் நியாயந்தீர்ப்பார் என்று நினைக்கவில்லை ”. நோவாவின் (அல்லது மனுவின்) இந்த கதை நம்மை மறுபடியும் சிந்திக்கத் தூண்டவேண்டும். அந்த நியாயத்தீர்ப்பினால் (நோவா மற்றும் அவரது குடும்பத்தைத் தவிர) முழு உலகம் முழுவதும் அழிக்கப்பட்டது. அப்படியானால் அவருடைய இரக்கம் எங்கே இருந்தது? அது பேழைக்குள் வழங்கப்பட்டது.

தேவன் தம்முடைய இரக்கத்தினால், யாவருக்கும் பிரவேசிக்கக்கூடிய ஓர் பேழையை ஏற்படுத்தியிருந்தார். யார் வேண்டுமானாலும் அந்த பேழைக்குள் பிரவேசித்து வரவிருக்கும் வெள்ளத்திலிருந்து  இரக்கம் மற்றும் பாதுகாப்பைப் பெற்றிருக்கலாம். பிரச்சனை என்னவென்றால், ஏறக்குறைய எல்லா மக்களும் வரவிருக்கும் ஜலப்பிரளயத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.. அவர்கள் நோவாவை பரிகசித்தது மாத்திரமல்ல, இப்படியொரு நியாயத்தீர்ப்பு வரும் என்றும் அவர்கள் நம்பவில்லை. ஆகையால், அவர்கள் ஜலப்பிரளயத்தில் மாண்டுபோனார்கள்.  ஆனாலும்,  அவர்கள் எல்லாரும் அந்த பேழைக்குள் பிரவேசித்திருந்தால் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பியிருப்பார்கள்.

உயிருடன் இருந்தவர்கள் ஒரு உயர்ந்த மலைக்கு ஏறுவதன் மூலமோ அல்லது ஒரு பெரிய படகைக் கட்டுவதன் மூலமோ ஜலப்பிரளயத்தை தவிர்ப்போம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் நியாயத்தீர்ப்பின் அளவையும் வல்லமையையும் முற்றிலும் குறைத்து மதிப்பிட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக இப்படிப்பட்ட ‘நல்யோசனைகள்’  சிறிதும் பயனளிக்கவில்லை;  அவர்களை முழுமையாக மூடக்கூடிய ஒன்று – பேழை – அவர்களுக்கு தேவைப்பட்டது.  அவர்கள் எல்லாரும் பிரம்மாண்டமான அந்த பேழை கட்டுப்படுவதை பார்த்தது, வரப்போகும் நியாயத்தீர்ப்பு மற்றும் கிடைக்கப்ப்பெறும் இரக்கத்திற்கான ஓர் தெளிவான அறிகுறியாக காணப்பட்டது. நோவாவின் (மனு) எடுத்துக்காட்டை நாம் கவனிக்கையில், அது இன்றும் நம்மிடம் அதே வழியில் பேசுகிறது. இரக்கம் என்பது தேவன் நியமித்துள்ள ஒர் ஏற்பாட்டின் மூலமாக ஏற்படுகிற்தே ஒழிய,  நம்முடைய நல் யோசனைகளினால் உண்டாவதன்று. 

நோவா என் தேவனுடைய இரக்கத்தை கண்டுகொண்டான்? பரிசுத்த வேதாகம் பல முறை பின் வரும் வாக்கியத்தை திரும்ப திரும்ப குறிப்பிடுகிறதை நீங்கள் கவனிக்கலாம்

தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

நான் எதை புரிந்துகொள்கிறேனோ அல்லது விரும்புகிறேனோ அல்லது ஒப்புக்கொள்கிறேனோ அதனையே செய்ய முற்படுகிறேன். வரவிருக்கும் வெள்ளம் பற்றிய எச்சரிக்கை மற்றும் நிலத்தில் இவ்வளவு பெரிய பேழையை கட்ட வேண்டும் என்ற கட்டளை குறித்து நோவாவின் மனதில் பல கேள்விகள் இருந்திருக்க வேண்டும்.  நோவா நல்லவனும் நீதியை தேடுகின்றன மனிதனாகவும் இருந்ததால்  தான் ஏன் இந்தை பேழையை கட்டும் பணியில் ஈடுபடவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் நோவா – ஏதோ அவனுக்கு புரிந்த விஷயத்தை மட்டுமே செய்வேன், செளகரியமாய் இருக்கும் காரியத்தை மட்டுமே செய்வேன் அல்லது தனக்கு சரி என்று பட்ட காரியத்தை மட்டுமே செய்வேன் என்று இராமல்  –    தேவன் தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான் –  நாம் பின்பற்றக்கூடிய சிறந்த ஒரு எடுத்துக்காட்டு இது.

இரட்சிப்பின் வாசல்

நோவாவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தாரும் விலங்குகளும் பேழையில் நுழைந்தார்கள் என்று வேதாகமம் சொல்கிறது.

கர்த்தர் கதவை அடைத்தார்.

ஆதியாகமம் 7:16

பேழைக்குள் பிரவேசிக்கக்கூடிய வாசலை கட்டுப்படுத்தி செயல்படுத்துபவர் தேவன் மட்டுமே – நோவா அன்று. நியாயத்தீர்ப்பு வெளிப்படு நீர்மட்டம் உயர்ந்தபோது, வெளியே இருந்தவர்கள் பேழையின் வாசற்கதவை எவ்வளவேனும் தட்டினாலும், நோவாவினால் அதை திறக்க முடியவில்லை. தேவன் ஒருவரே அதை கட்டுப்படுத்தினார். ஆனால் அதே சமயம், உள்ளே இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இளைப்பாறமுடியும். ஏனென்றால், தேவன் வாசலை கட்டுப்படுத்தியதால் எப்பேர்ப்பட்ட காற்றானாலும், அலைகளானாலும் அதைத் திறக்கமுடியாது.  தேவனுடைய பாதுகாவல் மற்றும் இரக்கத்தின் கடவுளின் கவனிப்பு மற்றும் கருணையின் வாசலில் அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

கடவுள் மாறாததால் இது இன்றும் நமக்கு பொருந்தும். வரவிருக்கும் மற்றொரு தீர்ப்பு இருப்பதாக வேதாகமம் எச்சரிக்கிறது – இது நெருப்பால் – ஆனால் நோவாவின் அடையாளம் அவருடைய நியாயத்தீர்ப்போடு அவர் கருணையும் அளிக்கிறது என்பதை நமக்கு உறுதியளிக்கிறது. நம்முடைய தேவையை பூர்த்திசெய்து நமக்கு கருணை தரும் ஒரே கதவுடன்கூடிய  ‘பேழையை’ தேட வேண்டும்.

மீண்டும் பலிசெலுத்துதல்

வேதாகமம் நோவாவை பற்றி சொல்கிறது:

அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துக்கொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்

ஆதியாகமம் 8:20

இது புருசசுக்தாவின் பலி மாதிரியுடன் பொருந்துகிறது. புருஷா பலியாக செலுத்தப்படுவார் என்பதை நோவா (அல்லது மனு) ஏற்கனவே அறிந்திருந்ததுபோல்,  தேவன் தாமே அதை செய்வார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில்,  வரப்போகும் பலியின் நிழற்படத்தைப் போல் அவர் மிருக பலி செலுத்தினார். உண்மையில், இந்த பலிக்குப் பிறகு தேவன் ‘நோவாவையும் அவருடைய குமாரரையும்  ஆசீர்வதித்தார்’ (ஆதியாகமம் 9: 1) மற்றும் ‘நோவாவோடு ஒரு உடன்படிக்கை செய்தார்’ (ஆதியாகமம் 9: 8). அது என்னவன்றால்,  இனி ஒருபோதும் ஜலத்தினால் உலகத்தை நியாயந்தீர்க்கமாட்டேன் என்பதே அது. ஆகவே, நோவாவால் ஒரு மிருகத்தின் பலி அவரது வழிபாட்டில் முக்கியமானது என்று தெரிகிறது.

மறுபிறப்பு – பிரமாணத்தின் மூலமா அல்லது…

வேத பாரம்பரியத்தின் படி, ஒருவருடைய நிறம் / சாதியின் அடிப்படியில் வரையறுக்கும் முறையான மனுஸ்மிருதியின்  மூலாதாரமாக மனு காணப்படுகிறது. பிறக்கும்போதே, எல்லா மனிதர்களும் சூத்திரர்கள் அல்லது வேலைக்காரர்களாக பிறப்பதால்,  இந்த அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க நமக்கு இரண்டாவது பிறப்பு அல்லது புதுபிறப்பு தேவை என்று யஜுர்வேதம் கூறுகிறது. மனுஸ்மிருதி சர்ச்சைக்குரிய ஒன்று. ஸ்மிருதியை குறித்த வெவ்வேறு கருத்துப்பார்வைகள் அதில் சொல்லப்பட்டுள்ளது.  இந்த விவரங்கள் அனைத்தும் ஆய்ந்தறிவது நம்முடைய எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.  இருப்பினும் நாம் ஆராயவேண்டியது என்னவென்றால் பரிசுத்த வேதாகமத்தில்,  நோவா / மனுவின் வழியில் வந்த செமிடிக் இன மக்கள் தூய்மை மற்றும் சுத்திகரிப்பை பெறுவதற்கு இரண்டு வழிகளை பெற்றுக்கொண்டார்கள். ஒரு வழி சுத்திகரிப்பு, சடங்காச்சார கழுவுதல் மற்றும் பலிகளை உள்ளடங்கிய ஓர் பிரமாணம் – மனுஸ்மிருதியை போன்றது.  இன்னொரு வழி விளங்கிடமுடியா மேன்மையான வழியாக இருந்தது. அதில், மறுபிறப்பை அடையும் முன் ஓர் மரணம் உண்டாகவேண்டும். இயேசுவும் இதைப் பற்றி கற்பித்தார். அவர் தனது நாளில் ஒரு கற்றறிந்த அறிஞரிடம் கூறினார்

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான்3:3

இதைப் பற்றி மேலும் வரும் நாட்களில் வரும் கட்டுரைகளில் பார்ப்போம். ஆனால் வேதாகமத்திற்கும் சமஸ்கிருத வேதங்களுக்கும் இடையில் ஏன் இத்தகைய ஒற்றுமைகள் உள்ளன என்பதை அடுத்து ஆராய்வோம்.

பைபிளின் மூலம் பயணத்தின் PDF ஐ ஒரு புத்தகமாகப் பதிவிறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *