அறிமுகம்: குர்ஆனில் காணப்படும் ‘இன்ஜீலின்’ மாதிரி அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு அடையாளம்

நான் முதன்முதலில் குர்ஆனில் வாசித்தபோது, பலவிதத்திலே அது என்னை பாதித்தது.  முதலாவது,  இன்ஜீல் (சுவிசேஷம்) பற்றிய அநேக நேரடி குறிப்புகள் அதிலே இருந்ததை நான் கண்டுபிடித்தேன்.  ஆனாலும் ‘இன்ஜீல்’ பற்றி காணப்பட்ட ஒரு குறிப்பிட்ட மாதிரி என்னை வியக்கவைத்தது.  குர்ஆனில் இன்ஜீலுடன் நேரடி தொடர்புடைய அனைத்து அயாத்கள் நாம் கிழே பார்க்கிறோம்.  ஒருவேளைநான் கவனித்த மாதிரியை நீங்களும் கவனிக்கலாம்.

உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் (மூசாவின்) தவ்ராத்தையும் (ஈசாவின்) இன்ஜீலையும்  அவனே இறக்கி வைத்தான். இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான்.

சூரா 3:3-4அல் இம்ரான்

இன்னும் அவருக்கு [இயேசு] அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

சூரா 3:48 ஆல் இம்ரான்

வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவராத்தும், இன்ஜீலும்ம் இறக்கப்படவில்லையே;

சூரா 3:65 அல் இம்ரான்

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மரியாவின் குமாரராகிய இயேசுவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலை கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது

சூரா 5:46மாயிதா               

இன்னும்: அவர்கள் தவராத்தையும், இன்ஜீலையும் இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால்

சூரா 5:66மாயிதா

வேதமுடையவர்களே! நீங்கள் இன்னும் தவராத்தையும், இன்ஜீலையும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை

சூரா 5:68மாயித

இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்);

சூரா 5:110மாயிதா

இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், சுவிசேஷத்தில் அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது

சூரா 48:29ஃபத்ஹ்

குர்ஆனில் இன்ஜீல் பற்றிய எல்லா குறிப்புகளையும் நீங்கள் சேர்த்துவைத்தீர்களானால், ‘இன்ஜீல்’ எப்போதும் தனித்து நிற்பதில்லை என்பதை பார்க்கமுடியும். ஒவ்வொரு சம்பவத்திலும் தவ்ராத்’ (நியாயப்பிரமாணம்) என்ற பதம் முந்திவருகிறது.  ‘நியாயப்பிரமாணம்’  மூசா நபி அவர்களின் புத்தகங்கள் (ஸல்), பொதுவாக முஸ்லீம்களுக்கு மத்தியில் ‘தவராத்’ என்றும் யூத மக்கள் மத்தியில் ‘தோரா’ என்றும் அழைக்கப்படுகிறது.  பரிசுத்த நூல்களில் இன்ஜீல் (சுவிசேஷம்)  ஒரு தனித்தன்மைவாய்ந்த நூல்.  அது எப்போதும் தனித்து குறிப்பிடப்படவில்லை.  மாறாக, தவராத் (நியாயப்பிரமாணம்) மற்றும் குரான் பற்றிய குறிப்புகள் தனித்து விளங்குவதை நீங்கள் காணமுடியும்.  சில உதாரணங்களை தருகிறேன்.

நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் – அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் – இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

சூரா 6:154-155ஆடு, மாடு, ஒட்டகம்

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்

சூரா 4:82 பெண்கள்

 இன்னொரு விதத்தில் சொன்னால், திருக்குர்ஆன் ‘இன்ஜீலை’  (சுவிசேஷம்) குறிப்பிடுகையில், அது எப்போதும் ‘தவராத்தை’ (நியாயப்பிரமாணம்) குறிப்பிட்ட பின்னரே சொல்லுகிறது.  இது ஒரு தனித்துவமான காரியமாக உள்ளது. ஏனெனில், குர்ஆன் எப்போதும் தன்னை மற்ற திருநூல்களுடன் இணைத்து சொல்லாது. அதேபோல் தவராத்தையும் (நியாயப்பிரமாணம்) மற்ற திருநூல்களுடன் இணைக்காமல் சொல்லும்.

நபிகளிடமிருந்து நமக்கு வந்த அடையாளம்?

ஆகையால் இந்த மாதிரி (‘தவராத்திற்கு’ அடுத்தபடியாக ‘இன்ஜீல்’ குறிப்பிடப்பட்டுள்ளது) முக்கியத்துவம் வாய்ந்ததா? சிலர் இதனை எதேச்சையான காரியம் என்று தள்ளிவிடலாம் அல்லது ஒரு சாதாரண வழக்கத்தின்படி இன்ஜீலை இப்படி குறிப்பிடுகிறார்கள் எனலாம். நூல்களில் காணப்படும் இப்படிப்பட்ட மாதிரிகளை நாம் மிகவும் கருத்தாய் ஆராய படித்திருக்கிறேன். அல்லாஹ் தாமே உருவாக்கி நியமித்த ஒரு கோட்பாட்டை  புரிந்துகொள்ள, ஒருவேளை இது நமக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் காணப்படலாம். இன்ஜீலை புரிந்துகொள்வதற்கு முன்பாக தவ்ராத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். ஆகவேதான், இன்ஜீலை (சுவிசேஷம்) இன்னும் நாம் சிறந்த வகையில் புரிந்துகொள்ள நாம் முதலில் தவ்ராத்தை திரும்ப பார்க்கவேண்டும். இந்த ஆதி நபிகள் நமக்கு ஒரு ‘அடையாளம்’ என்று குர்ஆன் நமக்கு சொல்லுகிறது.  அது என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் அடையாளங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். ஆனால் எவர் நம் அடையாளங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் – அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.

சூரா 7:35-36சிகரங்கள்

இன்னொரு வார்த்தைகளில் சொன்னால், இந்த நபிகள் தங்கள் வாழ்க்கையில் அடையாளங்களையும் ஆதமுடைய மக்களுக்கு (நாம் எல்லாரும் அவருடைய பிள்ளைகள்!) ஒரு செய்தியையும் வைத்திருந்தார்கள். ஞானத்தையும் புரிதலையும் உடையவர்கள் இந்த அடையாளங்களை புரிந்துகொள்ள முயலுவார்கள்.  ஆகையால், நாம் தவராத் (நியாயப்பிரமாணம்) வழியாக இன்ஜீலை கவனிக்கலாம் – ஆரம்பத்திலிருந்து இருந்த வந்த முதல் நபிகளை கவனித்து நேர்வழியை புரிந்துகொள்வதற்கு அவர்கள் நமக்கு கொடுத்த அடையாளங்கள் என்னவென்று கவனிக்கவேண்டும்.

காலத்தின் தொடக்கத்தில் ஆதாமின் அடையாளத்தோடு நாம் ஆரம்பிக்கிறோம்.தவராத், ஸ்பூர் மற்றும் இன்ஜீல் போன்ற நூல்கள் கெடுக்கப்பட்டுவிட்டதா? என்றகேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் ஆரம்பிக்கலாம் இந்த முக்கியமானகேள்வியை குறித்தும் திருகுர்ஆன் என்ன சொல்லுகிறது மற்றும்சுன்னாவை குறித்தும்? தவராத்தை குறித்த அறிவையும் அது நமக்கு நேர்வழிக்கான அடையாளமாக இருந்தது
என்ற தெளிவையும் பெற்றுக்கொள்ள நான் நேரம் எடுத்திருந்தால் அது நியாயத்தீர்ப்புநாளில் நன்மையாக இருக்கும்.